By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
செவ்வாய், 18 மார்ச், 2025
புதிய காட்சியுரை: நாகரிகம் என்ற சொல்.
வெள்ளி, 14 மார்ச், 2025
நிமிடம் என்ற சொல்.
நிமிடம் என்ற சொல்லைச் சற்று விளக்கமாக்குவோம்.
இமை என்பது நிமை என்று திரியும் என்பது தமிழாசிரியரிடம் கருத்தாக இருந்துள்ளது. இது பிறழ்பிரிப்பாலும் அல்லது திரிபாலும் நிகழலாம். பிறழ்பிரிப்பானால் இதை இவ்வாறு காட்டுக:
கண்+ இமை > கண்ணிமை > நிமை . கண் என்ற ஈரெழுத்து மறைவு. இதை முதற்குறை என்னாமல் ஒருவகைத் தொகுப்பு என்னலாம். "ணி" முதலெழுத்தாகாதபடியால் "நி" வந்தது.
இமை இடுதல் என்பது நிமை இடுதல் என்றாகும்.
நிமை + இடு + அம் > நிமிடம்.
நிமை என்ற சொல் தன் ஐகார இறுதியை இழந்து, நிம் என்று நின்று "இடு + அம்" என்றவை புனைவுற்றது.
ஏனைக் கருத்துகளுக்கு வாசிக்க:
https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_9.html.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post.
திங்கள், 10 மார்ச், 2025
குறைபட்ட இந்தப் புவி வாழ்வு
இரவொன்று வாராமல் பகலே வந்த
இன்பநாளைத் தருகின்ற வலிமை ஒன்றைத்,
தரவேண்டும் என்றெண்ணும் பகலோன் தானும்.
தகவளந்து தருதற்கோ இயல்வ தில்லை!
பரவோங்கும் வான்போற்றும் புவியின் மீதும்
பரந்துவாழும் மக்களிடை நிலவும் சூழல்,
குறைவாழ்ந்த திலையென்று நினைத்திட் டாலும்
குறைவிகுந்து தலைசாய்ந்தார் பலரே ஆமே.
\
உலகில் சில நடப்புகள் நாம் நினைத்தபடி நடப்பதில்லை. அதற்காக உடனே உயிரை மாய்த்துக்கொள்வது பரிதாபத்துக்குரியது ஆகும். இன்று காலையில் வந்த மணிலாச் செய்தியில் 24 வயதுடைய ஒரு தென் கொரிய சிறந்த நடிகை இறந்துவிட்டாள் என்று தெரிகிறது. ஏதோ ஒன்று நிறைவேறாமல் போனதாக இருக்கலாம். பாவம் இவள். இதுபோன்று உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர். இரங்கத் தக்க இதுபோல்வோருக்கு இப்பாடல் எழுதப்பட்டது.
பொருள்:
தகவளந்து - தகுதியை அளந்து அறிந்து
பரவு ஓங்கும் - மிகுந்த பரப்புடைய
குறைவு இகுந்து - ஒரு குறைவினால் நிலை அழிந்து
குறைவு ஆழ்ந்த - குறைகள் பலவுடைய
இலை என்று - இல்லை என்று
தலைசாய்ந்தார் - தற்கொலைக்கு ஆட்பட்டார் ( இடக்கரடக்கல்)