செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

சிறுத்தை என்ற விலங்குப் பெயர்

 சில புலி வகைகளுடன் ஒப்பிடும் போது சிறுத்தை சற்று சிறிதாகவே உள்ளது. இதனால் இந்தப் பெயர் இவ்விலங்குக்கு ஏற்பட்டுள்ளது என்று முன்னர் விளக்கப்பட்டது.

ஆனால் இப்பெயர் கடுமையாகச் சீறுவதனாலும் ஏற்பட்டது என்று காரணமுள்ளது.  அப்படியானால்   :

சீறுதல் -   சீறு  > சீறு + தை > சிறுத்தை என்று குறுதலும் ஏற்புடையதே ஆகும். இதற்கு ஏற்புடைய சொல்லமைப்பு விதியாவது:

சா>  சாவு > சாவம் ( சாவு+ அம்) > சவம்  என்றும்  குறுகி அமைதல் போன்றதே ஆகும்.   இது.  தோண்டியது போல இருப்பது  தொண்டை என்று குறுகுதலும் காணலாகும்.   ஆதலின் இவ்விலங்குப் பெயர்: இருபிறப்பி  ஆகின்றது என்பதையும் அறியவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


அடுத்த புதிய இடுகை:  சாரங்கபாணி என்ற சொல்லமைப்பு.Thursday 1242 afternoon will be published..  படித்து மகிழுங்கள்.

திங்கள், 24 பிப்ரவரி, 2025

பஜனை என்னும் சொல்

  • பா. பாட்டு,  பாடு என்ற சொற்கள்  பகரத்தில் தொடங்குவன..  பா என்ற ஓரெழுத்து மட்டுமே எல்லா வடிவங்களிலும் தோன்றுகின்றது.  இதே போல் தான் பஜன் பஜனை என்ற சொற்களிலும் பகரமே தோன்றுகிறது.  டு என்பது ஒரு வினையாக்க விகுதி.  ஓடு, ஆடு, பாடு, தேடு,  இடு, இடு என்ற பல சொற்களில்  வருவது டுகர விகுதி:  இது வினையாக்க விகுதியாகும்.  இதன் அடிச்சொல் எதுவென்றால் அது பா என்பதுதான். இது பரவுதல் கருத்தினால் ஏற்பட்ட சொல். ஒரு பாவில், பல கருத்துகள் அல்லது தொடர்புபட்ட செய்திகள் பரப்பப் படுகிறது. அல்லது பரப்பி வைக்கப்படுகிறது.. எழுத்துகளும் பரவி நிற்கின்றன. எத்தனை சீர்கள் இருக்கலாம் என்ற கணக்கும் உள்ளது.

பஜ, பஜரே முதலிய வடிவங்களிலும் பகரமே வருகிறது. சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று தொட்டு நிற்கின்றன.  அடுத்து அடுத்து வருவதால் பா+ அடு என்றும் விரித்துச்சொல்லுதல் கூடும். ஆனால் முன் காலத்தில் படிக்கும்போது இராகம் போட்டுத்தான் படித்தார்கள்.  இப்போது பாடிப் படிப்பதற்கு வெட்கப் படும் நிலை உள்ளது.

பரவுதல் என்பதும் படருதல் என்பதும் தோற்ற உறவுமுறை உள்ளவை. படர்> பஜர் என்று தொடர்பு காணலாம்.  படர் > பஜர் என்பதும் காண்க. ஒரு பாவில் சொற்கள் படர்கின்றன என்பதும் காண்க.

ரகர டகரத் தொடர்பை, மடி> மரி என்பதிற் காணலாம்.

எந்தச் சொல் பயன்பட்டிருந்தாலும்,  பாடு> பாடன் > படன் > பஜன் என்பது உறுதி.

வா என்ற சொல், இறந்தகாலத்தில் வந்தான், வந்தாள் என்று குறுகுவதைக் காணலாம்.  பெயராய் அமைகையிலும், சாவு> சவம் என்றும்   தோண்டு > தொண்டை என்று குறுக்கமடைவது காணலாம். ஈர்த்தலில் வந்த சொல் இருதயம் என்ற வடசொல்.  ஈர்> இர்> இருது  அ அம் > இருதயம் என்று உண்டானதுதான். இரத்தத்தை இழுத்து வெளியிடும் ஈர் அல்., ஈர்தயம் > இருதயம்.

ஏனைத் தென்மாநில மொழிகளில்  பாடுபவன் என்பதற்க்கு ஈடான சொற்களையும் ஒப்புநோக்கி யுள்ளோம். " Badavanaru என்ற சொல்வடிவம் காணப்படுகிறது.   இது  "பாடுபவனார்"  என்பதற்குச் ஒப்பானதாக இருக்கிறது என்பதை அறிக.

பஜன் என்ற சொல்லை அறிந்துகொண்டீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


சனி, 22 பிப்ரவரி, 2025

மறைமலை அடிகளும் தேவநேயப் பாவாணரும்

 இன்று மறைமலையடிகளாரையும் தேவநேயப் பாவாணரையும் பற்றி அறிந்துகொள்வோம்.  இருவரும் தமிழ்த் துறையில் சிறந்து விளங்கிய  பெரும்புலவர்கள்.

அடிகள் தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படுபவர். தேவநேயப் பாவாணர் சொல்லாய்வில் மூழ்கித் தனி முத்திரை பதித்த பெருமை உடையவர். 
இருவருமே வெள்ளையர்  ஆட்சியின் முடிவு காலத்தில் வாழ்ந்தவர்கள்.  ஆகவே அவர்களின் மொழிக்கொள்கை வெள்ளையர் எழுதிய இந்திய வரலாற்றினை ஒட்டியே அமைந்திருந்தது. இவர்கள் சமஸ்கிருதம் அல்லது சங்கதம் என்பது  இந்தியர்களின் மொழி அன்று என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். 
இந்தக் கொள்கை வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆள்வதற்கு உதவுவதற்காக வரைவு   செய்யப்பட்ட கொள்கை என்பதே உண்மை. இந்தக் கொள்கைக்குச் சில சொல்லாய்வுகள் தாம் காரணம்.  பல இந்தியச் சொற்கள் மேலைமொழிகளில் புகுத்தப்பட்டிருந்தன.  அவை அங்கிருப்பதைக் கொண்டு, இவர்கள் சமஸ்கிருதம்  இந்திய மொழியன்று,  உருசியப் பக்க நிலங்களிலிருந்து பெயர்ந்த மக்களின் மொழி என்றனர்.

ஒரு மொழியில் பிறசொற்கள் உள்ளமை ஒருகாரணமே மக்கள் பெயர்ந்து வந்தனர் என்பதற்கு எப்படி  ஆதாரமாகக் கூடும் என்று இவர்களால் விளக்கமுடியவில்லை.

நாம் செய்த சொல்லாய்வில் பல  சமஸ்கிருதச் சொற்கள் தமிழ்ச்சொற்களுடன் வேர் ஒருமை உடையனவாய் உள்ளன. மேலும் சமஸ்கிருதத்தில் முதல் கவி வால்மிகி முனிவர், ஒரு பழங்குடியைச் சேர்ந்தவராய் உள்ளார்.  அவர் பாடிய வரலாற்றில் வருபவர்களும் மேலை நாட்டினர் அல்லர்  பாணினி என்பவரும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றே சொல்லாய்வு காட்டுகின்றது.
அடிகளும் பாவாணரும் வெள்ளையர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதே நாம் இதிலிருந்து காண்கிறோம் மேலும் சொற்கள் வெளியுலக மொழிகளில் உள்ளமை ஒன்றை வைத்தே மக்கள் பெயர்ந்து வந்தனர் என்பதைக் கூறமுடியுமானால்  பாணினியின் பெயரில் பாண் என்ற பாணரைக் குறிக்கும் அடிச்சொல் இருப்பை வைத்தே பாணினி பாணன் என்பதையும் கூறவேண்டுமே.  ஏன் இது கூறாது தவிர்த்தனர் என்பதற்கும் விளக்கம் இல்லை.

சொற்களை ஆய்கின்ற பொழுது அவ்வப்போது இதனை விளக்கியும் உள்ளோம். இவர்களின் ( அடிகள்  பாவாணராகியோரின் ) சொல்லாய்வு சரி என்றாலும் வரலாற்றுக் கொள்கை சரியாகவில்லை. சமஸ்கிருதம் என்பது ஓர் இந்திய மொழி என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.