வெள்ளி, 17 ஜனவரி, 2025

பண்சால் கல் உண்மை இயன் திரியங்கள் ( பஞ்சகன்மேந்திரியங்கள்)

 பிறப்பு ஐந்து அல்லது பிறப்பு அஞ்சு  என்பதிலிருந்து பஞ்சு பஞ்ச என்பவை ஐந்தைக் குறித்தன என்பதை முன்னர்க் கூறியிருந்தோம்.  பெரும்பாலும் வீடுகளின் முன் நின்று பாடி ஊதியம் பெற்றோர் நான்கு  ஐந்து பாடல்கள்தாம் பாடுவர்.  அப்புறம் ஏதாவது எதிர்பார்ப்பர். காசுகள், அரிசி, நெல், மற்ற தானியங்கள் போட்டால் பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய்ப் பாடுவர். பண்டைக் காலத்தில் பாடகர்கள் இவ்வண்ணமே இந்தியாவில் மட்டுமன்று, எங்கும் நடந்துகொண்டனர். திரைப்படம் நாடகம் என்றாலும் சிறப்பான நாட்களில் அல்லாமல் பிறவற்றில்  ஓர் எல்லையுட் படும்,

நான்கு ஐந்து என்பவை முன்னர்  எல்லைகளாக இவை போல்வனவில் இருந்தன.

பண்கள் பாடுவதிலும் ஐந்து என்ற எல்லையே சிறப்பாக வந்தது. பண்சார் அல்லது பண்சால் என்பதும் பஞ்சு என்று குன்றற் குரியது,

இவ்வாறு இயல்பாகத் திரிவன "இயன் திரியங்கள்" ஆயின என்பதை அறிக.

கல் உண்மை இயன் திரியங்களே பின் கன்மேந்திரியங்களாய் விட்டன. கல் உண் பின் கல்மேல்> கல்மேன்  என்று வருவது இயல்பினது ஆகும்.

இவை கல் அதிகப் புழக்கம் பெற்று இரும்புவரா முன்னே அமைந்த சொற்கள். கல் இரும்பு முதலியவை நம்மிடையே பிற்காலத்தில் வந்தனவா அல்லது முன்னே வந்துவிட்டனவா என்பன ஆராய்ச்சிக்குரியவை. யாம் சொற்களை மட்டுமே தருகிறோம்.. இயலும் திரியங்கள் இயல் > இயன் என்று லகரம் னகரமாகும்.

கல் கரு என்றாகும். இதை முன் எழுதியுள்ளோம்.  கருவி என்ற சொல் கல் என்பதனடியதாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 16 ஜனவரி, 2025

பவுதிகம் என்ற சொல் அமை

 இன்று பௌதிகம் என்ற பழைய சொல்லைக் கண்டாய்வோம்.

புவியில் உள்ள பொருள்கள் உண்மையில் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் பரவிக் கிடக்கின்றன.  ஆகாயவெளி எனப்படும் வான்வெளியிலும் உள. இதற்கு விசும்பு என்றும் பெயர். தீயில் எரிந்து அழிந்தும் சாம்பலாகின்றன. இவ்வாறு பரவு பொருள் என்று உணரப்பட்டு,  அதற்கு  பரவுபொருள்    என்றே பெயரிடுதல் எளிதாய் இருக்கும் என்று எண்ணினாலும் எதையும் வெள்ளிடையாகச் சொன்னால் பெயர் மக்கள் மனத்தில் திறமான பெயராய் அமையாது எனக்கருதி,  பரவித் திகைவது  என்ற பொருளில் பரவு+ திகை+ அம் > பரவுதிகையம் என்ற சொல்லமைக்கு வந்து சேர்ந்தனர்.  திகைதல் என்ற இங்கு உரு, உள்ளடைவு, நிறம், மற்றும் தன்மை என்னும்  இன்ன பொருட்களால் ஒரு தோற்றம் அல்லது மேனி உடையதாதல்.  திகை அம் என்பது திகம் என்று மாற்றப்பட்டு,  பரவு என்பது இடைக்குறையாக்கப் பட்டு பவு என்று மாற்றப்பட்டது. இதுவே "பவு+ திகம்" என்று ஆயிற்று.

இப்போது ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது.  ஆர்க்கிமீடிஸ் அடைந்த மகிழ்ச்சியை இவர்களும் அடையலாம்.  யூரிக்க என்று கத்தி ஆரவாரிக்கலாம்,  ஏன் மகிழக்கூடாது,  பவுதிகம் என்ற சொல் எதோ இல்லாமல் வந்த சொல் போல மருட்டும்,

இதை இன்னும் மாற்றம் இழைத்து பௌதிகம் என்று சொல்லிவிட்டால் தமிழில் இல்லாத வேறு சொல் என்று அச்சுறுத்தவும் ஆகும்,

உங்களுக்குத் தெரிந்தவை இது சமஸ்கிருதம்.  அவர்களுக்கும் அமைந்த விதம் தெரியும்.

இடைக்குறை கடைக்குறை முதற்குறை என்பவற்றால்  மருட்டற்கு உள்ளான சொற்கள் பல. கழுமலர்,  அதாவது தண்ணீரால் கழுவப்படும் மலர் என்று ஆகி அது கமல என்று ஆகி கமலம் என்று அம் விகுதி பெற்று ஆட்சியில் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.

பரவு திகை அம்>  பரவுதிக அம் >     பவு திக அம் > பவுதிகம் : பௌதிகம்,

இயற்பியல் என்ற சொல்லை எப்படி அமைத்தனர்?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


                                                                                               

செவ்வாய், 14 ஜனவரி, 2025

எங்கே செல்லுபடி ஆகவில்லை? மூழ்குதல், அலைகுதல்.

 பண்டைத் தமிழைத் தெளிவாகக் கண்டறிந்து கூறும் ஆராய்ச்சிகள் நம்மிடையே உண்டு என்று கூற முனைவதினும் அஃது இல்லை என்று கூறுவதே உண்மையாகும். எனினும் அதன் தேடல்கள் அவ்வப்போது நம் தமிழரிடையே ஏற்பட்டு ஏற்பட்டு அடங்கிப் போயின. சில எழுதிச்சேர்ப்புகள்  அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கலாம். இதனால் நாமறிவது என்னவென்றால், எதையும் எடுத்துக்காட்ட இயல்வதில்லை என்பதுதான்.

ஓர் இரண்டெழுத்துத் தமிழ்ச்சொல்லை   எடுத்து, அதில் ஏதும் பண்டைத் தமிழ்க் கூறுகள் கிட்டுமா என்று நோக்குவோம்

இன்று  "அலை" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல் இன்றுவரை வழக்கில் இருக்கும் சொல்தான். இச்சொல் பழங்காலத்திலும் இருந்த சொல் என்றே இதை நாடுவோம்.  இச்சொல் அலைதல் என்று வினைவடிவத்திலும் இன்று தமிழில் கிட்டுகிறது.  கடல் இன்று ஓயாமல் அலைகிறது என்று சொல்லும்போது  இச்சொல் இன்னும் பொருளுடன் இலங்குசொல் என்பது வேறு சான்றுகள் வேண்டாமலே தெரிகிறது. இச்சொல் மட்டுமேயன்றி,  அலைகுதல்  என்ற சொல்லும் உள்ளது.  அகரவரிசைகள் கோத்தளித்தவர்கள் இதையும் பட்டியற்படுத்தி யிருப்பதால், இச்சொல் இவ்வடிவிலும் உள்ளது என்றே முடிவுசெய்தல் வேண்டும். மூழ் என்ற சொல்  மூழ்கினான் என்றே இறந்தவினை காட்டுவதாய் இன்று இருப்பதால் மூழ்கு(தல்) என்பதே இற்றை வினைவடிவம் ஆகும். ஆனால் மூழ்தல் என்ற சொல்லும் குகரத் துணை இன்றி வருவதால்,  மூழினான் என்று பண்டைத் தமிழில் சொல்லமுடிந்துள்ளது என்பது தெரிகிறது. இன்னும் மூழ்ந்தான் என்று இறந்தகாலம் சொல்வது சரியாகவே கொள்ளப்படும்.  ஆழ்ந்தது என்பது சரி எனின் மூழ்ந்தான் என்பது சரிதான். சொற்கள் போகப்போக துணைச்சொற்கள் பெற்று நீள்வது சிறப்பு ஒன்றுமில்லை.  மொழியானது வீண் ஒலியடுக்குகளில் காலம்கடத்துகிறது என்பதே உண்மை. பேச்சுத்தமிழ் தேவையற்றுச் சொற்களை நீட்டி, மக்கள் மகிழ்வாய் இருந்துள்ளனர். பிறமொழிகளிலும் இவ்வாறு சொற்கள் நீட்சி பெற்று இருத்தல் கூடும். சமஸ்கிருதம் முதல் எல்லா இந்திய மொழிகளிலும் இவ்வாறு நீட்சிகள் ஏற்பட்டிருத்தல் இயல்பு.  ஆனால் மேற்கொண்டு ஆராய்தல் வேண்டும்.

அலைகு என்ற வினையாக்கத்தில்  இன்று   அது என்பவை சென்று இணந்தன. இது நிகழ்காலம் காட்டுதல்.  இன்று என்பது  இடைக்குறைந்து இறு என்று ஆகி, அலைகு+ இறு+ ஆன் > அலைகிறான் என்றானது. இவற்றுள் அலை என்பதை மட்டும் அறிந்துகொண்டு,  கிறான் என்பது தனியாக்கி, கிறு+ ஆன் என்று பிரிந்ததால்,  நிகழ்காலம் கண்டுகொண்டனர். சிலர் கு என்பது இல்லாமல் அலை என்பதை மட்டும் வினையாகக் கையாண்டனர்.

ஆனால் மூழ்கு என்ற சொல்லில் குகரம் எட்டிய ஒட்டு உயர்வை,  அலைகு என்பது அலை என்னும் சொல்லில் பெற்று தக்கவைத்துக்கொள்ள இயல்வில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.