திங்கள், 6 ஜனவரி, 2025

கந்தலாயினும் கசக்கிக் கட்டு - கந்தல்

 கந்தல் என்ற சொல்லினை அறிவோம்.

இப்போது பன்னாட்டிலும் மக்களின் வாழ்க்கை மேம்பட்டு அரசுகள் திறம்படச் செயல்படுவதனால்  கந்தல் கட்டிக்கொண்டு நடமாடுவோர் தேடிப் பிடிக்கவேண்டியவர்களாகி விட்டனர்.  திருட்டுகளும் பல்கிவிட்ட படியால் துணிகள் கிழிந்துவிட்டால் அவற்றைத் தையலிட்டு உடுப்பவர்கள் இலர். பூச்சி மருந்துகள் கிடைப்பதால் துணிகளில் பொத்தல்கள் விழுந்து உடுத்த முடியாமற் போகும்வரை யாரும் வைத்திருப்பதில்லை. 

இரண்டாம் உலகப் போர் முடிந்து கொஞ்சக் காலம்வரை கந்தல் துணிகளைத் தைத்து உடுத்துவோர் இருந்தனர்.  பொருளியல் முன்னேற்றத்தால் பிச்சைக்கரர்களுக்கும் வீடுகள் இருக்கின்றன.  அவர்கள் தங்கள் இடங்களை வாடகைக்கு வி

ட்டபடி பணம் சேர்க்கின்றனர் என்பது பல்வேறு காவல்துறை நடவடிக்கைகளின் மூலம் அறிந்துகொள்கிறோம்.

ஔவைப் பாட்டியின் காலத்தில் துணி பலருக்குத் தாராளமாகக் கிடைக்கவில்லை. திருடும் எண்ணமுடையோரும் குறைவாக இருந்தனர். அதனால் அவர் கந்தல் உடுத்துவோர் அதைத் துவைத்துக் கட்டுதல் நலம் என்று தெரிவித்தார்.  கந்தல் ஆயினும் என்றதால், துணி நல்லதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் துவைத்து உடுத்தவேண்டும் என்றார் ஔவைப் பாட்டி.

பொருளியல் நிலை சிறக்கச்சிறக்க,  கந்தல் என்ற சொல் காணாமற் போகக் கூடும்.

கந்துதல் என்றால் கெட்டுப் போதல் என்பது குறிக்கும் வினைச்சொல். துணி பல்வேறு காரணங்களால் கெட்டுப் போதல் உளதாவதால் கந்து >  கந்தல் என்று இச்சொல் அமைந்துள்ளது.

இன்னும் சில வழிகளிலும் இச்சொல் அமையக்கூடும்.  அவற்றை நீங்கள் கண்டுபிடியுங்கள்.  பகர்ப்பு வரைவுகள் மிகுந்து வருவதால் மற்ற வழிகளில் இச்சொல் அமைவதை இப்போது வெளியிடவில்லை. 

உங்கள் மூளைக்கு வேலை கொடுத்துத் தமிழை அறிந்துகொள்க.

இன்னோர் இடுகையில் இச்சொல்லைத் தொடர்வோம் பிற அளவைகளினால்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

இரண்டு என்னும் பதம்.

 எமக்கு ஏறத்தாழ பன்னிரண்டு அகவை இருக்கும்போது, எம் தந்தையார் நீ தமிழும் படித்துக்கொள் என்றார்.  ஆனா ஆவன்னா முதலியவை முன்னரே அறிந்திருந்தாலும், "அறம் செய விரும்பு'' தெரிந்திருந்தாலும் இந்த மொழி வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.  ஆனால் அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்,  இடைநிறுத்தங்களுடன் தாம். இதை வீட்டில் மட்டுமே பேசமுடியு மாதலால்  அவர்தம் வலியுறுத்தலால் இழுபாடு ஒன்றும் ஏற்படவில்லை. பின்னர் எவ்வாறு கவரப்பட்டேம் என்பதை பின் கூறுவோம்.

இன்று இரண்டு என்ற சொல்லை ஆய்வுசெய்து  இதன் சொல்லமை உட்பகவுகளை அறிந்துகொள்வோம்.  இதைப் பிறர் வேறு பகவுகளால் அமைத்து விளக்கியும் இருக்கின்ற படியால்,  இஃது பலவாறு விளக்கத்தக்க பல்பிறப்பி என்று அறிந்துகொள்க.

தமிழ் என்ற சொல்லை மட்டும் 100 வழிகளின் மிக்கு ஆய்ந்து வெளியிட்டுள்ளனர். காளமேகம் முதலிய பெரும்புலவர்கள் இத்தகு சொல்லமைப்புகளில் புகுந்து ஒரு சொல்லுக்குப் பல்வேறு அமைப்புகள் காட்டி விளையாடி மகிழ்விக்கின்றனர்.  திருத்தக்க தேவர் முதலிய மலைகள் திறமிகுத்துக் காட்டி மகிழ்வித்துள்ளனர்.  ஆகவே இத்தகு வசதிகள் தமிழிலே உள்ளமை திறம் என்று அறிந்துகொள்ளவேண்டும்.  வேறு மொழிகளிலும் இத்தகு பகுதிறம் உள்ளது.  ஆனால் இது தமிழில் மிகுதியாய் உள்ளது என்று தெரிகிறது, உங்களுக்கு நேரமிருந்தால் இதில் உழைத்து முடிவுகளை வெளியிடலாம்.

இப்போது இரண்டு என்னும் சொல்.   ஒன்று இருக்கும் போது இன்னொன்று அதே போன்றது ( நாய்க்குட்டி யாகவும் இருக்கலாம், பூனைக் குட்டியாகவுக் இருத்தல் கூடும்)   இருக்கும் ஒன்றை நாடி வந்தால்,   இரு+ அண்டு ஆகிறது.  இவ்வாறு சிந்தித்துத்தான் இரண்டு என்ற சொல் அமைந்தது.  பின்னாளில் அண்டுதல் என்ற கருத்து தொக்கு நின்று ( மறைவாகி)  இரு என்பது மட்டுமே இரண்டு என்ற எண்ணிக்கையை உணர்த்தியது.  இரண்டு என்பதிலிருந்து இரட்டு என்ற சொல்லும் உண்டானது..  இது இரு+ அடு என்பதுதான்.  அண்டு என்பதும் அடு என்பதும் இருவேறு ஒருபொருள் வடிவங்கள்.  அதாவது ஒப்புமை உடையன.  அடுத்துவரல் என்பதில் அடு வினை.  எரியும் நெருப்பு  சட்டியில் படுமாறு அடுத்துவைக்க உதவுதால்  அடுப்பு என்பதற்கு அப்பெயர் ஏற்பட்டது.

ஆனால் ஐரோப்பிய ஆய்வாளர்கள் இதை "பாத்ரூம்" என்பதனோடும் தொடர்புபடுத்தி "ஸ்டோவ்" என்ற சொல்லை விளக்கியுள்ளது  குளிர்சூழலில் வாழும் அவர்கள் இதை முன்வைத்ததன் காரணியை நாம் உணரமுடிகிறது.

தண்டு > ஸ்தண்டு > ஸ்தண்>  ஸ்தோ>  ஸ்தோவ் என்று வருதல் உண்மை. நெருப்பை அடுத்திருக்கவேண்டும்.  இல்லையே அடுப்பு வேலை செய்யாது. ஒன்று இன்னொன்றைத் தண்டவும் வேண்டுமே.

நெருப்பு என்ற சொல்கூட எரிதலை அடுத்து ( நெருங்கி)  இருப்பதை உணர்த்துகிறது.  பற்றுவதற்கு உராய்வு  வேண்டும். அகலாது அணுகாது தீக்காய்க என்றார் வள்ளுவனார். அவர் தெய்வப்புலவர் என்று பரிமேலகழாற் போற்றப்படுபவர்.

இரண்டு என்பதன் பொருள்கண்டீர்.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்

சனி, 4 ஜனவரி, 2025

தாபதவேடத்தர் -- தாபதம்

 இதனை அறிந்துகொள்ளுமுகத்தான் முதலில்  வேடத்தர் என்பதை த்  தெரிந்துகொள்வது நலம்.

வெள் என்பது ஓர் அடிச்சொல்.  இது வெளிப்புறம் என்று பொருள்படுவதுடன்.  வெளியில் தெரிவது என்றும் அறிதரும் சொல்லாகும்.  வெள்> வெடு> வேடு> வேடம் என்பது காண்க.  வேடுகட்டுதல் என்றால் பானையின் வாயைத் துணிகட்டி மூடுதல். அல்லது  தழைகளால் அதற்கு முற்காலத்தில் மூடியிருக்கவும் கூடும்.  வெள்> வெய்> வேய்> வேய்தல், இனி,  வேய்> வேயம்> வேசம்> வேஷம் என்றுமாகும்.  யகர சகரப் போலி இங்கு கவனிக்க. இது பலமொழிகளிலும் வரும் திரிபுவகை.  ஆய்> ஆயை> ஆசை> ஆசை என்றும் இன்னும் சில்வாறும் திரியும்.  அசை> ஆசை என முதனிலை நீண்டும் தொழிற்பெயராகும்.  சுட்டடி விளக்கமாக,  அ -   அங்கிருப்பதை,  ஐ - ( மனத்துள்) மேல்கொண்டு வருதல் என்றும் பொருள் பொலியும்.  அ ஐ> ஆ ஐ >  ஆயை > ஆசை என்றுமாகும்.  மொழிச் சொற்கள் வளர்ச்சியில் இடைவளர்த்  தரவுகள் மறைந்து இல்லாமலாவது இயல்பு.

தாபத என்ற சொல்லுக்கு தருவதைப் பதுக்கி ( ஒதுக்கிவைத்து) உண்போர் என்றும் பொருள்வரும்.  தவஞ்செய்தலையும் குறிக்கும்.  இது பல்பொருளொரு சொல்  ஆகும்,  தா+ பது >  ;   தா+ பதி.   தருவதை மனத்துள் பதிந்து நன்றிசொல்வோர் என்றும் பொருள்கூறலாம்.  தமிழால் பொருள்சொல்ல முடியாத மொழிகள் சிலவே.   தவத்தால் பதிவுற்ற எனலும் சிறப்பு.

தப்புதல் என்பது  தபுதல் என்று இடைக்குறையும்.  உலகவாழ்க்கை  யிலிருந்து தப்பித்து வாழ்வோர் எனினுமாகும்.  தபு + அம்> தபம்,  தபம்> தவம் எனினும் ஆகும்.  மக்களிடை வாழ்தல் மாசுடைத்து என்பதால் தபுதலுற்று தப ஞானியாதல் எனினுமாகும்.

தாபதம் -  முனிவர்வாழிடம் என்றும் ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.