தமிழ் உலகின் முதல்மொழி அல்லது தாய்மொழிகளில் மூத்தது எனவும் பிறவழிகளிலும் தமிழைப் போற்றுவதால், எமக்கு சொந்தத்தில் ஒரு புண்ணியமும் இல்லை. இங்கு யாம் புண்ணியம் என்று கூறுவது பயன் என்ற வழக்குப் பொருண்மையில்: அதாவது பயன்பாட்டில் புண்ணியம் என்ற சொல்லுக்குத் தரப்படும் பொருளில்தான். நம்மில் பலருக்கு நம் கொள்ளுத் தாத்தாவின் பெயரும் தெரியாது. ஒருவேளை தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் வாழ்வோரில் பலருக்குத் தம் கொளளுத்தாத்தாவின் பெயர் தெரிந்திருக்கக் கூடும். நீ ண்ட காலத்துக்கு முன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோருக்கு இத்தகைய குலவரலாற்று அறிவு பெரும்பாலும் இருப்பதில்லை. சிலருக்குச் சற்று அதிகமாகத் தெரிந்திருக்கலாம். தேர்தலில் வாக்கு இடுவதற்கு காசு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளவர்களுக்கு ஏழ்மை மிகுந்திருப்பது மக்களாட்சி முறையையே ஒரு கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது. இது வருந்தத் தக்கதுதான். ஏழ்மையினால் பொருள்பெற்றுத் தன் நிலையை மாற்றிக்கொள்பவன், தன் கடவுட்கொள்கை, பிறப்பினம் என்று எதையும் மாற்றிக்கொள்வான்.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வெள்ளி, 27 டிசம்பர், 2024
இராணி என்ற சொல்லுக்கு வாக்கியவிளக்கம்.
புதன், 25 டிசம்பர், 2024
அனைத்தும் என்ற சொல்.
அனைத்தும் என்ற சொல் து விகுதி பெற்று அமைகிறது. இதற்கு நேரான ஒருபொருட்சொல் எல்லாம் என்பதுதான். இது நீங்கள் அறிந்தது.
து என்பது அஃறிணை ஒருமை வடிவம். அதன் காரணமாய் இச்சொல் உயர்திணை வடிவ உயிர்களை உணர்த்தவில்லை. து விகுதி உயர்திணைக்கு வருவதில்லை.
ஆனால் து என்பது ஒருமை எண் ஆகிறது. அனைத்தும் என்னும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை - அதாவது பன்மையை - உணர்த்துகிறது. பல்பொருட்களை ஒன்றாக்கும் போது பல ஒன்றாதல் காண்க.
இவ்வாறு பல ஒன்றாதலின் காரணமாக் ஒருமைத் து விகுதி ஏற்புடையதாகிறது.
ஒருமையைக் கொண்டு பன்மையை உணர்த்திய உத்தி இதுவாகும்.
ஆனால் எல்லாம் என்ற சொல்லுக்கு இப்படியான விளக்கம் தேவையின்றாகிறது காண்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
தசரதன் என்ற சொல்லுக்கு மற்றொரு முடிபு
காட்டுக்குப் போகப் பணிக்கப்பட்ட இராமனுக்குத் தசரதன் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அவன் தயை இல்லாதவனாகினான்..
ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள்க என்று கூறிக்கொண்டு ஒன்றும் செய்தானில்லை.
தயை அற தான் நின்றபடியால் தயறதன் ஆனான்: இது தசரதன் என்று மருவிற்று எனலும் ஆகும்.
தயை > தயா > தய . [தயவு]
அறு > அற> ( ,இது வினை எச்சம்) இது அறவு எனத் தொழிற் பெயராகும்.
அற என்பது பின்னர் அர என்று மாறியது.
தய. அர து அன் >. தயரதன் ,> தசரதன்
பத்து ரதம் இருந்தன என்பது செல்வத்தைக் காட்டும். ஆனால் இங்குக் கூறிய இப்பொருள் கதையுடன் மிக்க நெருக்கம் உடைய பெயராகக் கொள்ளற்குரியது.
தசம், இரதம் என்பவை தனித்தனி இடுகைகளில் பொருள் சொல்லப்பட்டுள்ளன . இவற்றை மறுநோக்கு ஏற்றிக்கொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்