வியாழன், 17 அக்டோபர், 2024

திரு சிங்கப்பூர் சிவாஜி அவர்கள் மறைவு இரங்கல்

 






"சிங்கப்பூர் சிவாஜி"யாகச்    சீரி  னோடு

சிங்கைதனில் தங்குபுகழ்ச் சொந்தக் காரர்!

பெண்கள்- ஆ  டவர்பிள்ளை எப்பா லார்க்கும்

பண்களிலே இலயம்தந்தே அமிழ்ப்பா ராவார்

கண்கள்நீர் சொரிந்திடவும் பாடும்  வல்லார்

தண்தமிழால் மகிழ்வந்தும் பாடிச் செல்வார்!

அண்மையிலே அவர்நம்மைப் பிரிந்து போக

ஆனதற்கே இரங்குகிறோம் என்றே காண்போம்.


மாரடைப்பு என் கின்ற நோயைப் போல

மனிதர்க்குத் தீங்கிழைத்த நோயும் இல்லை.

ஓரடைப்பும் இல்லாத திறந்த உள்ளத்

துயர்ந்தோரைக் காப்பதற்கும் இல்லா நெஞ்சம்

சீருயர்ந்த கூர் இயற்கை தேர்ந்த தென்றோ?

செயலிழந்து கவலையிலே மனிதர் யாரும்.

பாரிலிச் சி   வாஜிபாடும் வாரி  வீச்சும்

ஓர்நாளே இனிவருமோ என்றோ காண்போம் ?


---- சிவமாலா.


கவிதையில் ஒரு என்று வருமிடத்தில் ஓர் வரலாம்.


காணொளி; திரு. P. முருகையன். 

நன்றி




புதன், 16 அக்டோபர், 2024

குயவர்/குலாலர் - மண்வேலையர்கள்.

 இரும்பு பொன் முதலிய கண்டுபிடிக்கப்படுமுன் மண்வேலை செய்து தரையைக் குத்தித் தாம் பயன்படுத்திக்கொள்ளும் பொருள்களை மக்களுண்டாக்கிக் கொண்டனர்.  இப்போதுபோலவே  நாகரிகம் என்பது கண்டுபிடிப்புகளின் முன் செல்லும்  திறன் எதுவும் கொண்டிருக்கவில்லை. வேலைக்காரர்கள் அல்லது சாதிகள் பெருகுவதற்கு அவ்வப்போது மனிதன் அடைந்த முன்னேற்றமும் ஒரு காரணமாகும். உள்ள சாதிகளை அல்லது தொழிலர்களை ஏற்றுச்செல்லும் நிலையில் சமுதாயம் நின்றுவிட்ட படியால் ,  புதுத் தொழிலர்கள் சில புதிச்சாதிகளாக ஏற்புடைமை கொள்ளவில்லை. பழமை போற்றும் பண்பும் இதற்கு ஒரு காரணமாகும்.

மண்குழைத்துப் பாத்திரங்கள் செய்து புழங்குவது ஒரு மிக்கப் பழமையான தொழிலாகும்.

குசவனாகிய ஏலன் என்பவன் ( குச ஏலா)  இத்தகைய ஒரு தொழிலாளி,  திருநீலகண்டன் என்னும் குயவரும்  இத்தகையவர்.   குச என்பது குய என்று திரிவது  சகர யகரத் திரிபு.   வாசல்> வாயில் என்பதிலும் இதை உணரலாம்.

வேய்தல் என்பது அணிதல் என்றும் பொருள்தரும்,  வேய்> வேயம்> வேசம்> வேஷம் என்பதிலும் சகர யகரத் திரிபைக் காணலாம்.  வேஷம் ( வேயம் வேசம்) என்பது அணிகலன்களால்  அடையாள மாறுபாடு காட்டுவது ஆகும்.

பல் - பய்,   பலன்>< பயன். குல் > குய் என்றும் ஆகும்  குல் ஆலன் > குய் அவன்.

ஆல் என்பது கருவிப்பொருளுடைய ஒரு பண்டை உருபு   கத்தியால் வெட்டினான் என்பதில் ஆல் என்பது கருவி குறித்தது.  குலாலன் என்பதில் இந்த ஆல் உள்ளது. ஆல்+ அன் > ஆலன்.  ஆளன் என்பது கருதத்தக்க வேறுபாடு உடையதன்று,  பொருள் ஒன்றுதான்.

குய என்பது பேச்சுத் திரிபு போல் தோன்றினும் இது ஒரு வெளித்தோற்றமே.  ஆழ்ந்து ஆய்ந்தால் குய - குல் என்பன தொடர்புடையனவாகும்.

குயவர்கள் ஒரு காலத்தின் முக்கியத் தொழிலர்களாக இருந்தாலும் அவர்களின் முதன்மையில் சரிவு ஏற்பட்டது புதிய கண்டுபிடிப்புகளாலேதாம், இரும்பு பொன் என்பன பின் வந்து முன் இடம் கொண்டவை ஆகும், 

குயவர்கள் முன்னர் பூசாரிகளாகவும் இருந்துள்ளனர்.  இப்போதும் சில கோயில்களில் உள்ளனர் என்று தெரிகிறது.

குயவர் குபேரராகவும் வாழ்ந்ததுண்டு. இதை மகாபாரதம் காட்டுகிறது.  குவை என்றால் குவியல்,  செல்வக் குவியல்.  குவை> குபை. இது வகரப் பகரத் திரிபு. குபை+ ஏறு + அன் > குபேரன்.  சொல்லாக்கத்தில் றகரம் ரகரமாகிவிடும்,    ஏறிய செல்வக் குவியலை உடையோன்.  ஏறுதல் - மிகுதல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


செவ்வாய், 15 அக்டோபர், 2024

ஷாகல ஷாக என்ற ருக்வேத நூற்பகுப்பு

உருக்குவேதத்தில் 21 பகுதிகள் இருந்தன என்பர்,  இன்னும் பல பாடல்கள் அழிந்தன என்கின்றனர்,  இப்போது சிலவே கிடைத்துள்ளன.   தமிழிலும் பல நூல்கள் அழிந்தன,  அவை பெரும்பாலும் (பண்டைத் தமிழ்) இலக்கியங்கள். இவற்றை மீட்டுருவாக்குதல் இயலாத வேலை. இந்திய மொழிகளில் பாடியவர்கள் மிகுதி, கேட்டுப் பாதுகாத்தவர்கள் குறைவு. எஞ்சி இருப்பவற்றில் இன்றும் படிக்கப்படாமல் போய்க்கொண்டிருப்பவை பலவாம். இந்தியருள்ளும் குறிப்பாகத் தமிழருள்ளும் எங்களிடம் எல்லாம் உண்டு என்று சொல்வர் தவிர அவற்றை ஆழ்ந்து கற்போர் சிலரே  ஒருநாளில் ஒருவர்கூட இருக்கமாட்டார் என்பது என் எண்ணம்.

இந்த நூல்களும் அதன் பாட்டுக்களும் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவை என்று வெள்ளைக்காரன் எழுதுதற்குக் காரணம்,   இவற்றை எல்லாம் மக்கள் தொடர்பு அற்றவையாக ஆக்கிலன்றி,   துணைக்கண்டத்தில் இறைநலக் கோட்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நாட்டை அரசாள்வதில் வெற்றி எதையும் காணவியலாது என்பதனால்தான். நாம் கூறும் வெள்ளையர்கள் என்போர் கிழக்கியந்தக் குழும்பினர் காலத்து இந்தியாவை தம் ஆட்சிக் குட்படுத்தியோர். இப்போது உள்ளவர்கள் எந்நிறத்தவர் ஆயினும் இதில் தொடர்பில்லாதவர்கள்.


மெக்காலே பிரபு கூறுவதை மேற்கண்ட மேற்கோளில் கண்டுகொள்வீர்.  இந்திய மொழிகளை ஆரிய மொழிகள் என்றும் அல்லாதன என்றும் பிரித்ததும் இதனால்தான். இதன்மூலம் ஆரியர், அல்லாதார் என்ற பகுப்புப் போராட்டம் சூடுபிடித்தது. ஆரியர் படையெடுப்பு நிகழ்ந்தமைக்கு எந்தச் சான்றுமில்லை.

தமிழும் சமஸ்கிருதமும் ஓர் அடிப்படையினவாகும்.  எடுத்துக்காட்டு:  அன்னம் என்பதும் அரிசி என்பதும் ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த சொற்கள்.

ஆய்வு நெறிப்படுகை என்று பொருள்படுவதே ஷாகல ஷாக என்று வேதத்தில் மாற்றிச் சொல்லப்படுகிறது.  இதை "ஆகும் கலவை ஆக்கம்"   அல்லது கலவைப் பட்டியல் அல்லது பொருட்கலவைப் பட்டியல் என்று சொல்லலாம். ஒரே சொல் வேண்டுமானல் " அடைவு" அல்லது பொருளடக்கம் என்னலாம்.,  இங்கு  "ஆகும்"  என்பது பயன் தருவது ஆகும் என்று பொருள்.  இதை "ஆ" ( ஆகும்) என்று சுருக்கிவிடலாம்.  கல என்பது பொருளடக்கக் கலவை,  இறுதி ஷாக என்பது  ஆக,  அல்லது ஆக்கம்..

ஒலிப்பொருத்தம் உடைய சொற்களால் இதைப் பெயர்த்து எழுதினால்:  ஆகக்கூடிய கலப்புப் (பொருள்)ஆக்கம்  என்றுதான் வரும்.  ஆ கல ஆக > ஷாகல ஷாக.

ஆக என்பதை ஷாக என்றது தொல்காப்பியர் ஏற்றுக்கொள்ளாத திரிபு வகை. வேறுமொழி அன்று.

இதை censio  என்ற இலத்தீன் சொல்லால் மொழிபெயர்த்துள்ளனர்.

திரிபுகள் ஓர் எல்லைக்குள் இருக்கவேண்டும் என்பது தொல்காப்பிய முனிவரின் கொள்கை.  செய்யுளீட்டச் சொற்களில் திரிபுச் சொற்களையும் அடக்கினாரேனும்,  எல்லை மீறிய திரிதல்களை அவர் ஒதுக்கியே இலக்கணம் செய்தார்.



அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.