தேடியே போய்உதவும் சீர்த்தகவர் மோடிவிசு
வாமித்தி ரர்வாழ்க நீடு.
இது மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கூறும் ஒரு குறள்.
இதை இப்படிப் பிரித்து எழுதினாலும் யாப்பியல் பிழைபடாது.
தேடியே போய்உதவும் சீர்த்தகவர் மோடிவிசு
வாமித் திரர்வாழ்க நீடு.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தேடிப்போய் வேண்டுவோருக்கு உதவுபவர் மோடி. அவர் வாழ்க என்பது இக்குறள்.
சீர்த்தகவர் = சீரான தகைமை அல்லது நற்பண்புகள் உள்ளவர்.
விசுவம் என்ற சமஸ்கிருதச் சொல்லும் விசும்பு என்ற தமிழ்ச்சொல்லும் ஒரே அடியில் தோன்றிய சொற்கள். இதை இனி ஓர் இடுகையி விளக்குவோம்.
பின்னுரை:
மோடி அவர்கள் தம் நீண்ட அரசியல் வாழ்வில் பலருக்கு உதவியாக இருந்து பல நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால் அரசியல் கட்சிகள் தேர்தலில் அவரை வெல்லும் பொருட்டுச் சிற்றூர் மக்களிடம் பல பொய்களைச் சொல்லியாவது அவரைத் தோற்கடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலைசெய்து வருவதுபோல் தெரிகிறது. இந்திய அரசியலில் வெளியார் தலையீடும் காணமுடிகிறது.
ஆங்கில மொழியறிவு இல்லாதவர்களை ஏமாற்றுவது அரசியலில் எளிதாக உள்ளது. தமிழிலும் உண்மை கூறும் வெளியீடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் நகரங்களிலிருந்து தொலைவில் உள்ளவர்கள் தமக்குக் கிடைக்கும் சில ஏடுகளையே அல்லது வாய்மொழித் தகவல்களையே நம்பி இருக்கிறார்கள். அவை பல சரியானவற்றை மக்களுக்குச் சொல்வதில்லை. இது காரணமாக இருக்கலாம்.
மோடிஜியின் முன்னோர் யாரும் அரசியலில் இருந்தவர்கள் அல்லர். அவர் எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர். நேர்மை இல்லையென்றால் இந்த அளவுக்கு வந்திருக்க இயலாது.
மோடிஜி அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். வாய்மையே வெல்லும்.
அவர் விசுவாமித்திர முனிவரின் மறுவரவு.
நன்மைஒன்றே மோடிக்குண் டாகத் தொழுவோமே
உண்மைஒன்றே செல்கமக்கள் பால்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்