வியாழன், 19 செப்டம்பர், 2024

"காலந்தருவது" இலத்தீன் மொழியில்.

தமிழ் நாட்டிலிருந்து சில தமிழ் வித்துவர்கள் உரோமுக்குச் சென்றிருந்தனர். அவர்களை அங்கிருந்த பேரரசின் கல்விமான்கள் வரவழைத்திருந்தனர்.  இலத்தீனுக்குச் செழிப்பூட்டும் பணி இத் தமிழ்ப் புலவர்களின் கடமையாகவும் உரோமப் பேரரசின் எதிர்பார்ப்பாகவு மிருந்தது. இது உரோமப் பரப்பாட்சிக் காலத்தில் நடைபெற்றது.

அக்காலங்களில் அங்கு பயன்படுத்திய  கணக்குப் புத்தகங்களுக்கு காலக்கணக்குடன் கூடிய தொகைவரவு எழுதுவதற்கு ஒரு சொல்லை மேற்கொண்டனர்.

அவர்கள் பயன்படுத்திய ஒரு தமிழ்த்தொடர்.

காலம் தருவது என்பது.

காலம்தாரியம்  

காலம் என்பது காலன் என்றும் வரும்.  அறம்-  அறன்.  மறம் - மறன். திறம் - திறன்.


calendarium

காலன் தா -  calendae

தா என்பதிலிருந்த தாராய் என்ற சொல்லும் அமையும்.  தாராயோ.

அருள்தாருமே தேவா எனக் காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்,


செவ்வாய், 17 செப்டம்பர், 2024

சாம்பான், சாம்பவர் முதலிய

 இவை சாம்பல் என்ற சொல்லிலிருந்து வருவன.

 சாம்பு >  சாம்பல்  ( சாம்பு+ அல்).

பு அல் என்பன விகுதிகள்.

சாம்பு  + ஆன் > சாம்பான்.

சாம்பு + அவன் >  சாம்பவன்.

எரிவன பின் குறுகிக் குவிந்து குப்பையாகும். சாம்புதல் என்பது குவிதல் என்றும் பொருள்.  குறுகுதலும் ஆகும்.   

அடிச்சொல்:  அண்>சண்>  சாண் ( குறுகுதல் ), சாண்+ பு+ அல்> சாண்பல்.> (திரிந்து) சாம்பல் ஆனது.  ண் அடுத்து ம்  ஆகத் திரிந்தது.  இதுபோன்ற திரிபுகள் முன் இடுகைகளிலும் காட்டப்பட்டுள்ளன.  ஓரிடத்திலிருந்து நகரும் பொருள் இன்னொரு பொருளை அண்டுகையில் இடைவெளி குறுகும்.  ஆகையால்  குறுதல் அண்முதல்   பொருளினின்று   எழுந்தது.  எரிந்து முடிந்தது  குறுகும். ஒரு மேசையைப் போட்டு எரித்து ஒரு நெகிழிப்பைக்குள் அடக்கிவிடலாம். 

ஒப்பிடுதல்:  ண்+ பு > ம்பு.

வீண் + பு > வீம்பு  ஆகிறது,

துண் + பு >  தும்பு.  ( துணிப்புற்ற கயிறு). முடிப்புடன் உள்ளது.

வன் + பு >  வம்பு.

இப்பொருள் தேவநேயருக்கு ஒப்ப முடிந்தது,  இனி சம்போ என்ற சொல்லின் விளக்கத்தையும் அறிக.

சாம்பவர் என்ற சொல் புத்தமத நூல்களிலும் காணப்படுகிறது. நாம் இங்குக் கருதுவது சொல்லமைப்புப் பொருள். இது தமிழின்வழி அங்குச் சென்றது. திபேத்துக்கும்  சென்றிருப்பதில் வியப்பு எதுவும் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

Edited on 19092024 0438

திங்கள், 16 செப்டம்பர், 2024

அமீத்ஷா: போர்ட் பிளேர் விஜயபுரம் ஆனது

 போர்ட்பிளேரை   விசயபுரம் என்று நாமம்

போற்றுவணம் அமிதுநல்லார்  மாற்றிச் சூட்டி,


மாட்டிநின்ற அயலிருளை ஓட்டி த்  தீரம்

மாற்றமிலா மேற்புகழை மன்னப் பெற்றார்!


ஏட்டினிலும் பாட்டினிலும் கூட்டிப்  பேசி

இயன்றசெயல் ஆற்றாதோர்க் கின்ன பாடம்,


தேட்டெனவே கருதினவாம் நாட்டும்  எல்லாத்

திருத்தங்கள் தரவினிலும்  தேம்பண்  மீட்டும். 


அரும்பொருள்:

மாற்றிச் சூட்டி - பெயரை வேறாக்கி அவ்வூருக்கு அணிவித்து

அமிது நல்லார் -  சிறந்தவரான அமீத் ஷா அவர்கள்

வணம்  - வண்ணம்  தொகுத்தல் விகாரம்.

மன்னப் பெற்றார் -  நிலையாக்கிக் கொண்டார்/

மன்னுதல் என்றால் நிலைநிற்றல். மாறாமைப் பண்பு.

நாமம் - நாவினால் சொல்லப்படும் அழைப்புச்சொல்,  

நாவினால் சொல்லிக்கொள்வதே நாமம்.  அந்தக்காலத்தில்

சான்றிதழ்கள் இல்லை.

ஓட்டி -  விரைவாக நீக்கி

மாட்டிநின்ற -  மாறாமல் பட்டுக்கொண்டு நிலையாகிவிட்ட

தேட்டு -  ஆய்வு, பொருள்சேர்ப்பு ஆகியவை.

கருதினவால் -  கருதியவற்றால்

ஆற்றாதோர்க்கு இன்ன பாடம் -  செய்யாதவர்களுக்கு

இத்தகையது ஒரு பாடம், பின்பற்றத் தக்கது.

நாட்டும் -  நிலைநிறுத்தும்

தரவு - மக்களுக்குச் சமர்ப்பிக்கும் எல்லா செயலும்

தேம் பண்  - தித்திக்கும் பாடல் போன்றது

மீட்டும்  - வீணைபோல் வாசிக்கும்


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்