ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

அகர எகரத் திரிபு.

 கல்லுதல் என்பது கெல்லுதல் என்றும் திரியும்,  ஆதலின் அகரத்துக்கு எகரமும் போலியாகும்.  ஆனால் இது கவனமுடன் விளக்குதற் குரியது.  திரிபுகள் பல. கதை என்பதும் கீதை என்பதும் எல்லாம் ஒலி என்ற அடிப்பொருளில் வருவனவே. பயன்பாட்டில் பொருள் நுட்பமாக வேறுபடலாம்.  கது என்ற அடிச்சொல்லி லிருந்து வரும் காது என்பது செவியைக்  குறிக்க,  கீதம் என்பது பாட்டைக் குறிக்க வழங்குவது காண்க.  ஆனால் காது ஓர் ஒலிபற்றி;  கீதம் ஒலி எனினும் இசை. அதாவது ஒலியெழுச்சி.

ஒலிபற்றி எனற்பாலது " ஒலிபற்றினி"   (a sound change receiver) என்ற புதுச்சொல்லால் குறிப்புறுதல் சிறப்பாம்.

காது:  உகரம் முன்வருதலை குறிக்கும் விகுதியாய் நுட்பமாக வழங்கியிருக்கலாம். இது பழஞ்சொல்.  கீதம் என்பதில்  கத் > க+   க் > ஈ (தருதல்)>கீ எனப் பின்னுதல் நிகழ்ந்திருக்கவேண்டும்.  இறுதி து மட்டும் பற்றிக்கொள்ளப்பட்டது.  கா து > கா/கீ (ஈ)  என பின்னது கொண்டு முன்னது கெடுத்தல்.  சொல்லின் பகுதியைத் திரித்தல் அயல்மொழிகட்கு வழக்கம்.  விகுதியை மட்டும் மாற்றாமல் பகுதியில் திரித்தல்.  கீதம் என்பதில் ஈதல் என்பதன் ஈ ஏறிற்று,  ஒலியினை  ஈதற் குறிப்பு.  ஈதல் என்பது வெகு நுட்பான முனைத்திரிபு ஆகும்.  ஆ+க்து > ஈ+க்த> க்+ ஈ/ து +அ. எனக்காண்க.

அகர வருக்கத்தவை,  குறில் நெடில் பேதமின்றி, ஒன்று மற்றொன்றாகத் திரிதக்கவை ஆனாலும்,  கவனத்துக்குரியவை.  எடுத்துக்காட்டு:  அதழ் - இதழ்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சனி, 7 செப்டம்பர், 2024

ஹோத்ரி என்பதன் இன்னோர் தமிழ் அமைபு

 ஓதுதல் என்றால் படித்தல்,  வாசித்தல்.

படியே ஒலிசெய்தலே படித்தல் எனப்படும். எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே அதை ஒலிசெய்தல். எப்படி,  அப்படி, என்பவற்றை படி> படித்தல் என்பதுடன் இணைத்து அறிந்துகொள்க. இன்னொரு வகையில் சொல்வதானால் கண்ணிற் படுகின்ற வாறே நாவும் உதடுகளும் அசைந்து ஒலிசெய்தல் : படு> இதில் இகரம் வந்து "படி" ஆகிறது,  படு> படி > படித்தல்.  இறுதியில் வினைச்சொல்.

வாயினால் ஒலிசெய்தலே வாசித்தல்.   வாய்>  வாயி  > வாயித்தல் > வாசித்தல். இங்கு யிகரம் சிகரம் ஆகும்.

ஓதுதல் என்பது ஓவென்று ஒலிசெய்தலையே முன்னே  குறித்தது.  ஓ என்ற ஒலி என்ற பொருண்மைச் சொல்லுடன்,  து என்னும் வினையாக்க விகுதி இணைந்து ஓது-தல் என்ற சொல் உருவாயிற்று. ஒலியெழுப்புதல் படிப்பதாலேயோ மனப்பாடத்திலிருந்தோ நிகழும், ஆகவே ஓதுதலென்பது சற்று விரிந்த பொருளுடைத்தாகிறது.

ஓதுரை  அதாவது ஓது உரை என்ற இருசொல் இணக்கானது வடக்கில் ஹோத்ரி என்று ஆகிவிட்டது.  ஓ என்று ஹ இன்றி ஒலிக்க முயலாமல் ஹ இணைத்து ஒலித்தனர்.  இதனுடன் உய்த்தல் சொல்லினின்று வரும் ஹோத்ரியும் இணைந்துகொண்டுள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

பக்தியோகம் என்றால் என்ன?

 யாம் நம் வலைப்பூவகத்தில் பல பக்தி சாற்றும் படங்களையும் சில வேளைகளில் கவிதைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறேம். அந்தக் கவிதைகள் அம்மனுக்கு ( ஸ்ரீ துர்க்கையம்மாவுக்கு) ப் படைக்கப்பட்டவை. இவற்றை வெளியிட்டபின் எம் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இதை அம்மா படித்திருப்பார்கள். இவற்றின்பின்னும் யாவும் குறையின்றி நடைபெற்றன. யாம் எதுவும் கேட்பதில்லை.  அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்டு அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் யாம் கொடுப்பதில்லை. குறை ஒன்று மில்லை.  எமக்கு காபி ( குளம்பிநீர்) உரொட்டி கிடைத்தாலும் அவையும் பாயசம்தான்.

அவர்களுக்குப் பூமாலை முதலிய அணிவித்துக் கொண்டாடுகிறேம். பிறர் அவ்வாறு செய்து படம் அனுப்பினாலும் கவிதையால் கொண்டாடுகிறேம்.

யாம் செய்வது பக்தியோகம்.

வேறு உலக மாந்தர் ( ஜாம்பவான்கள்)  வேறுவேறு செய்திருக்கலாம்.  இவர்கள் அத்தனை பேர்களைப் பற்றியும் யாம் கவலைப்படவில்லை. எம் மனம் அம்மனுக்கு. அம்மன் எம்முடன் எப்படித் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை யாம் ஏன் வெளியிடவேண்டும்.  விளம்பரம் தேவை யில்லை. அதுதான்பக்தியோகம்.