புதன், 19 ஜூன், 2024

கிருபை

 கிருபை என்னும் சொல்லின் மூலங்களைக் காண்போம்.

கிடைப்பவற்றில் மிக்க உயர்வானது, பெரியது என்றால் பற்றனுக்கு இறையருள்தான்.

தமிழில் இரு என்றால் பெரியது.

இரு + பு + ஐ > இருபை>  கு+ இரு+ பு+ ஐ >  கிருபை  ஆகும்.

கு - வந்து சேரும்  , இரு  -  மிகப் பெரிய,  பு -  புவியில் . ஐ - உயர்வானது,. விகுதியுமாகும்.

கி  - கிடைத்து,  இரு-  இருப்பனவில்,  பு -  புவியில்,  ஐ - உயர்வானது  ,  ஆகவே கிருபை என்றும் ஆகும்.

எழுத்துக்கள் கூடிப் புணர்ந்தமையும் திரிபுகளும் இங்கு விளக்கப்படவில்லை.  பழைய இடுகைகளில் கூறப்பட்ட முறையே இதற்குமாகும்.

இருமுறைகளிலும் வரலாம். இன்னும் உள்ளன. அவை இருக்க. இது பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க/

மெய்ப்பு பின்


செவ்வாய், 18 ஜூன், 2024

மனிதனும் மனுசனும்

 தனித்தமிழ்ச் சொல்லாகக் கருதப்படுவது மாந்தன் என்பது.  இதன் அடிச்சொல் அல்லது சொற்பகுதியாகக் கூறுவது மான் என்ற சொல்தான்.  இந்த மான் என்பது விலங்காகிய மானைக் குறிக்கவில்லை.

மனுசன் என்பது சிற்றூர் வழக்குச் சொல் வடிவம்.  இது மனிதன் என்ற சொல்லின் திரிபு என்பர்.

இந்த வடிவங்களை இங்கு விளக்கவில்லை. இவ்விடுகையில் மனுசன் என்பதை மட்டும் இன்னொரு கோணத்திலிருந்து  விரித்துரைப்போம்.

மன்  அடிச்சொல். நிலைபெற்றது என்று பொருள் படுவது. மனிதப் பிறவி என்பது நிலைபெற்றதுதான்.  இறத்தல் உண்டாயினும் மனிதன் புவியில் நிலைபெற்றவன் என்று கருதலாம்.

அவனுக்கு ஏனை விலங்குகள் இணையாகமாட்டா.

மன் + உசன்.

உய்> உய்+ அன் > உயன்>  உசன்.

இது யகர சகரப் போலி.  வாயில் > வாசல் என்பது போல.  இகரம் (யி) என்பது ச  ஆனது. ( அ).  இது இகர அகரத் திரிபுக்கும் எடுத்துக்காட்டு.

எனவே உயன், உசன் என்பவை உயர்வு அல்லது உய்வு உடையவன் என்று பொருள் தரத்தக்கது.

இந்தப் பொருண்மையை எடுத்துக்காட்டியுள்ளனரா என்று தெரியவில்லை.

மனிதன் நிலையான உய்வுகளை உடையவன் என்பது வரலாற்று உண்மை. சிற்றூர்ச் சொல்லில் இது அமைந்துள்ளது ஓர் அரிய உண்மை.

உசன் > உஷன் ஒலிமாற்று.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

அறிக மகிழ்க.

 

திங்கள், 17 ஜூன், 2024

பலபெயர்கள் உள்ள அசுரர்கள் அவற்றுள் தயித்தியர்.

 இன்று இதுபற்றிச் சில அறிந்துகொள்வோம்.

அசுரர்களுக்குப் பண்டைக்காலத்தில் பல பெயர்கள் இலக்கியங்களில் வழங்கின. அதில் தயித்தியர் என்பதும் ஒன்று.

தைத்தல் என்பது நீங்கள் அறிந்த சொல்தான். ஒன்றைத் தைத்தல் என்றால் இரு துண்டுகளை இணைத்து ஒன்றாக்குதல்.  வினைச்சொல் தைத்தல் தான்.

தை+ இற்று + இ + அர்

> தையிற்றியர்

> தயித்தியர்  ஆகும்.

ற்று என்று ஈரெழுத்துக்கள் இரட்டிவரும் சொற்கள், த்து என்று திரியும்  எடுத்துக்காட்டு:  சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்.

றகர இரட்டிப்பு  த்த என்றானதும்

லகரம் ரகரம் ஆனதும் காண்க.

தை இற்றவர்கள் தை இத்தவர்கள்  தயித்தவர்.  இறு> இற்று > இற்ற> இத்த. எச்சவினைத் திரிபு,

அசுரர்கள் என்போர் சுரர்கள் என்போருடன் இணையாது பிரிந்திருந்தவர்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.