வெள்ளி, 17 மே, 2024

பதாகை என்னும் விரிகொடி

 பதாகை என்பது இருவழிகளில் விளக்கத்தக்க சொல்லமைப்புடையது ஆகும்.

பதி (~ தல்) என்ற வினையடியாகவும் இதை விளக்கலாம். சில குறியீடுகள், நிறம், சித்திரவேலைப்பாடுகள் முதலியவை கொடியில் பதிவு பெற்று கொடி அழகுபடுத்தப்படும்.

பதி + ஆகு + ஐ.

இந்தச் சொல்லில் ஐ என்பது விகுதி.  பதி + ஆ என்பது பதா என்று வந்தது.  பதி என்பதன் இறுதி இகரம் ஒழிந்தது. ( கெட்டது என்பர் இலக்கணத்தில் ). ஆகாரம் வந்து ஏறுவதால் பதா என்றானது  முடிவில் இது பதாகை என்றாகும்.

பரத்தல் என்ற வினையினடியாக:

பர + து + ஆகு + ஐ

பரதாகை, இதில் ரகரம் இடைக்குறைந்தும்  பதாகை ஆகும். துணி பரவலானதாக வைத்து அதில் எழுத்துக்கள் இருத்தலால் பதாகை என்பதும் பொருத்தமான சொல்லாக்கமே ஆகும்.  ஆகவே இது இருபிறப்பி ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 16 மே, 2024

முனிவர்திலகம் மோடி வெற்றி வந்துகொண்டிருக்கிறது

 உலகநண்பர் மோடிஎனும் உத்தமமா முனிவர்

திலகமென்பர் தேர்ந்தருளித் தேர்தல்வெல்வு  உற்றார்

பலகலைஞர் பாராட்டிப் புகழ  அறிந்   தோர்தம்

நிலைநானூ(று ) இருக்கைகளே நேரிதினே நன்றே.


நலம்வருக நலம்வருக நாட்டினர்யா  வர்க்கும்

நனிசிறக்க அவராட்சி  தணிவுறுமே இன்னல்

தனிஎவரும் இணையில்லை நாட்டில்  மேம் பாடே

இனிநிலத்து நற்காலம் நேரிதினே நன்றே.


பொதுநலமே போற்றுகிற இதயநெறிச் செல்வார்

இதுநலமென் றறிந்தபடி எந்நாளும் வெல்வார்

மெதுநடையொன் றாளாத  விஞ்சுவிரை வாளர்

கதிமோடி காண்கின்றோம் நேரிதினே நன்றே.


இவை தாழிசைப் பாட்டுகள்.

உலகநண்பர்  - விசுவாமித்திரர்

முனிவர்திலகம் -  முனிவருள் தலைமையுடையார்

தேர்ந்து அருளி -  வேட்பாளர்களை ஆய்ந்து எடுத்து நாட்டினுக்களித்து

அறிந்தோர்தம் -  கணிப்புச் செய்து கண்ட எண்ணிக்கை அவருக்கு

நேரிதினே நன்றே -  எப்படிப் பார்த்தாலும் நாட்டுக்கு நல்லது

தணிவுறும் - குறைவாகும்

இதயநெறி - மனச்சாட்சிப்படி நடத்தல்

மெதுநடை - விரைவாகச் செல்லாமை

ஆளாத - மேற்கொள்ளாத

விஞ்சுவிரைவு  -  அதிவேகம்

கதி மோடி - மேடியே நாட்டுக்குக் கதி. 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


A P Mani Birthday


 நம் எழுத்தாளர் அ.மா. பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா இன்று  16 மே அன்று கொண்டாடப் பட்டுப் பலர் கலந்துகொண்டனர்.  அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.

ஏற்பாட்டாளர்:  திரு குமரன் பிள்ளை மற்றும் பிள்ளைகள் குடும்பத்தார்

                     ```        ஆசிரியர்  The Independent Singapore  




விருந்து தொடங்குமுன்......