திங்கள், 15 ஏப்ரல், 2024

தேர்தல் முன் கணிப்புகள்

கருத்துகள்  கணிப்புகள்  கொஞ்சமோ---- சொல்லும்

கனிச்சுவை  ஆரூடம் பஞ்சமோ?

பொருத்துறார் உண்மையைப்  பொய்களில்  ----- நம்மைப்

பொய்யறியார் என்றோ புனைகிறார்?


வாக்குகள் எண்ணிட அறிகிறோம் ---- இதற்கு

வரட்டுரை  ஆக்குதல்  என்பயன்?

நாக்குக்குக் கொடுங்கள்  ஓய்வினை----  வரும்

நாள்வரையில் காக்க வாய்மையே.


ஆனை கிடக்குது பானைக்குள் ---- அதை

அறிந்துவிட் டாலென்ன பொல்லாப்பு?

தேனென்னும் தீஞ்சுவை கிட்டுமே ----  இனித்

தேசத்தார் பாங்கினில் தென்றலே.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

புள்ளிவிவரம் கேட்பது

 புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின்

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்று

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்

படுக்கையைத் தேடிப் பறக்காமல் கேட்டுவிடின்

பூமியில் அஃதும் இயல்பன்று  நாமிதிலே

 நேமத்தால் நன்மைகாண் போம்

-----  சிவமாலா

இதன் பொருள்:

புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின் --- ஒரு பொதுக்கூட்டத்தில் எழுதிக் கவனித்தாலே உருப்பெற்றுக் காணத்தக்க, புள்ளி விவரங்களை வாய்மொழியாகக் கூறத்தொடங்கிவிட்டால்,

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!--- மிக்கச் சிறந்த நினைவாற்றல் நிறைந்த அறிவாளிகள் கூடத் தூக்கத்தில் விழுந்துவிடுவர்;

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்ற---- கூட்டத்தில் சாப்பாடோ குடிக்கத் தேநீரோ கொஞ்சம் கொடுப்பார்கள் குடிக்கலாம் என்னும்;

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்--- ஏதாவது கிடைக்கும் பார்க்கலாம் என்று கூட்டத்திற்கு வருகின்ற ஊரின் பொதுமக்கள்;

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்---  கடுமை மிகுந்த பொருளியல் கருத்துகள் சொற்பொழிவில்  வரத்தொடங்கிவிடுமானால்;

படுக்கையைத் தேடிப் ---  மீண்டும் வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கவே மனங்கொள்வர்;  பறக்காமல்---  வீட்டுக்கு ஓடிவிடாமல்,

கேட்டுவிடின்--- ( அவ்வாறின்றி) உட்கார்ந்து எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்வார்கள் ஆயின்;

பூமியில் அஃதும் இயல்பன்று ---  அதுவும் எங்கும் எப்போதும் 

நடைபெறுவதன்று;

 நாமிதிலே---  நாம் இதைப் பகுத்துணர்வதானால் இதில்

 நேமத்தால் நன்மைகாண் போம்.--- இயல்பான விதிமுறைகள் கடைப்பிடிப்புகள் எவையோ அவற்றால்,    உண்மையைத் தெரிந்துகொள்வோம்.

யாரையும் குறைகூறுவதைத் தவிர்ப்போம் என்றவாறு.

நேமம் :  எப்போதும் உள்ளபடி .

Note:  The meanings have been made clear; we may need to paraphrase correctly with due 

regard to the poetic wordings. Will attend when time permits.

ஆச்சாரியன்


ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும். எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது. ஆ(சி)ரியன் எனக்் காண்க.  வாத்தியார் அறிவாளி என்பதை ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி, ஆசிரியறிவாளி என்றாக்கி, அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி, ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் இச்சொல் வந்துவிடுகிறது. வேறன்று அது.

ஆசிரிய ஆரியன்  
ஆச்சாரியன்.

ஆசிரிய என்பதில் ஆசி என்பதை மட்டும் எடுத்துக்கொள்க.  தமிழில்  ஆச் என்பது ஏற்புடைய சொல்லுரு  அன்று.

ஆ(ச் இ) ஆரியன்.  இவற்றுள் இ என்பதை விடுக.
ஆச்  ஆரியன்
ஆச்சாரியன்,  ஆச்சாரிய  என்றும்   வரும்.  பூசைமொழியில் அன் என்ற ஆண்பால் ஒருமை ஒழிக்கப்பட்டது.   இல்லை.

மேற்கண்டவை ஒலிமுறையில் விளக்கப்பட்டன.  தமிழ்ச் சந்தி முறையிலன்று. இலக்கணத்தின்படியுயன்று, இதுபோலும் சொல்லாக்க இலக்கணம் தமிழ்நூல்களில் சொல்லப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.  ஏனென்றால்  தமிழ் இலக்கணம் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் உதவும் இலக்கணம்.  சொல்லாக்கம் சிறிதளவே சொல்லப்பட்டது. சொற்களை ஆக்கிக்கொள்வதற்கு உதவ உங்களுக்குப் போதிக்கப்படும் கலையோ தந்திரமோ அன்று.

தமிழ்ப் புணரியலின்படி,  ஆச்சாரியனாசிரிய  னென்று  வரவேண்டும்.  சொல் மிக நீண்டுவிட்டது. தமிழ் தமிழ் என்று  அரசியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூவுதலின் மூலமாகத் தங்கள்  அக்கறையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  தமிழைப் படிப்பவர்கள் குறைவு. இந்த நிலையில் பத்து எழுத்துக்கள் உள்ள ஒரு சொல், சரியன்று என்று  ஒதுக்கப்படலாம்.   சொற்களைக் குறுக்கிச் சிறு புனைவுகளாக்கினால் எடுத்தாளுவதற்கு எளிமையாக  விருக்கும்.  யாம் எழுதும்போதும் நீண்ட சொற்கள் வந்துவிடுகின்றன.  இத்தகைய நிலைகளைக் கருதித்தான் இடைக்குறை முதலிய வசதிகள் கவிதை எழுதுவோருக்கு உதவ உண்டாக்கப்பட்டன. இவையே கருதித்தான்  பண்டை நாட்களில் சொல்லாக்கத்திலும் இந்நெறி கடைப்பிடிக்கப்பட்டது,  தமிழ்க் கவிதைகளில் இசை முதன்மை வாய்ந்தது ஆதலின் அது முறியாமல் ஒழுக, சொற்கள் சிறியவாக்கப்பட்டன.   எ-டு:  கற்றதனால்  ஆய பயனென்கொல்?  என்ற தொடரில்  ஆகிய என்று எழுதினால் இசை முறிந்து வெண்பா கெடும். பண்டை நாட்களில் நெடுஞ்சொற்கள் வழக்கிலும் அருகியே வந்தன. பூசைமொழி அன் விகுதியையும் கொள்ளவில்லை யாதலின்,  ஆச்சார்யா என்று மேலும் சுருக்குண்டது.

பூசைமொழியிலும் சொற்கள் அவர்களின் முயற்சியையும் கடந்து,  நீண்டுதான் விட்டன.  இதனால் கரட்டியல்வு மிகுதியாகவே,  குரு நானக் முதலியவர்கள் குருமுகி முதலிய மொழிகளைக் கையாண்டனர்.. இதனால் சில மொழிகள் ஆற்றொழுக்குப் போலும் நடையை அடைந்தன. இவையாவும் நலம் கருதியவையே  ஆகும்.

ஆசிரியன் என்ற சொல்லே சகர வருக்க எழுத்துகள் இரட்டித்து ஆச்சாரியன் என்று வந்தது என்பது இன்னொரு கருத்தாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்