ஞாயிறு, 7 ஜனவரி, 2024

தியாகி சொல்

 கணவரை இழந்து வாடிக்கொண்டிருக்கும் மனைவி, அக்கணவரின் எரியும் சிதைக்குள் புகுந்து தானு மெரிந்து சாம்பலாவது "தீயாகுதல்". இக்கருத்திலிருந்து:

தீயாகு + அம் > தீயாகம் > தியாகம்.

சொன்முதல் நெடில் குறுகியும் பெயரமையும். பிறவாறும் வரும்.

எ-டு:

சாவு> சவம் ( பிணம்)

தோண்டு+ ஐ > தொண்டை. 

வினைச்சொல்:  வா -  வந்தான். வருக.

எனப் பலவாகும்.

 கணவனாகிய அரசன் தோற்று  இறந்தபின் அரசி வாழ விரும்பாமையால் இது நிகழும் . பின்னர் இதன் பொருள் விரிந்தது.

தியாகம்> தியாகி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


சனி, 6 ஜனவரி, 2024

மாமூல் சொல்

 இனி மாமூல் என்ற சொல்லைக் காண்போம்.

இஃது ஒரு பேச்சு வழக்குப் புனைவுச் சொல் ஆகும்.  (பகவொட்டு       )

மா - மாறுபடாத, 

மூல் -  மூலத்தொகை. (முன் தீர்மானித்தது)

 இது பின் பிற  அண்டை மொழிகட்கும் பரவிற்று. இஃது உருது என்பது ஓர் ஏய்ப்புரை.


( எமன்: இதையும் அறிவோம்)

எம்மிலிருந்தே எம்மைக் கொல்வது,  ஒரு தேவனாக உருவகிக்கப்பட்டது). 

எம் + அன்

அன் -அணிமை, அணுக்கம் குறிக்கும்

அன்பு  - மனத்தின் அணுக்கம் ( அன்+பு)

அன், அண் பொருள் ஒன்றே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.







 

வெள்ளி, 5 ஜனவரி, 2024

உக்கிரம், உத்கடம், உத்தண்டம் ஒப்பீடு.

தலைப்பில் கண்ட மூன்று சொற்களையும் ஒப்பீடு செய்து தமிழைச் சற்று விரித்து நுகர்வோம்.

உக்கிரம் என்பதனை முன் இடுகையில் ஓரளவு அலசியுள்ளோம். உக்கிரம் ( உக்கிரப் பெருவழுதி என்ற பெயரிலும் வரும் சொல்)  என்பதன் எல்லாப் பொருண்மைச் சாயல்களையும் அவ்விடுகையில் அலசிவிட வில்லை. சுருங்க இவண் குறிக்கலாம். (குறிக்கவில்லை)

உக்கிரம்,  இடுகை:- https://sivamaalaa.blogspot.com/2024/01/blog-post_3.html 

உத்தண்டம் என்பது  உக்கிரம் என்றே பொருள்படும்  இதனை உது + தண்டம் எனப் பிரித்து,  முன் சென்று தண்டித்தல் ( ஆய்ந்து பார்த்து முடிவு செய்யாமல் நடத்துவதுபோன்ற தோற்றம் தருதல் ) எனலாம். உத்தண்டம் செய்வோன்  முன் கூட்டியே அறிந்தவனாய் இருத்தலும் கூடும்).  உத்தண்டம் என்பதால் தகரம் இரட்டித்தது என்பதறியலாம்.

உத்தண்டத்தைத் தாஷ்டிதம் என்றும் கூறுவர்.  தாட்டுப் பூட்டென்று தாவினான் என்ற வழக்கிலிருந்து தாட்டு> தாட்டு+ இது + அம் > தாட்டிதம்>  தாஷ்டிதம் எனக் காண்க. பேச்சுவழக்குத் திரிபு.  தாண்டு> தாட்டு  (வலித்தல்).  பூட்டு(தல்), நிறுத்துதல்.

உது  அண்டு  அம் என்பன சேர்ந்தாலும் உத்தண்டம் என்றாகும்.  தகரம்  இரட்டித்தது. இவ்வாறு காணின்,  உக்கிரத்தன்மை சற்றுக்குறைந்த நிலையைக் காட்டலாம். இருந்தாலும் எதிர்கொள்ளற் கருத்தே.  அண்டுதல் - அடுத்துச் செல்லுதல். அண்டு அடு என்பன ஒருபொருளன.

உது + கடம் >  உதுகடம், உதுகடமாக என்று வரும்.  முன் நிற்கும் எல்லைகள் கடந்து எகிறுதல். இதுவும் மிகுதியாய் என்று  பொருள்படும் சொல்.  கடம்  <கட+ அம் .  ஓர் அகரம் கெட்டது,  இது உத்கடம் என்று மாறிற்று.  உதுகடம் என்பது வழக்கிறந்தது.

எனவே இவை பொதுவாய் மிகுதிப்பொருளன ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

மெய்ப்பு    05012023   2209