பவணந்தி என்பது ஒரு கொடி. இக்கொடி மற்ற கொடிகளைப் போல் படரும் கொடியே. ஓர் முனிவர் பெயருமாம்.
பர என்பது முதற்சொல். அடுத்து நின்றது வண் என்ற இன்னொரு சொல். இவற்றைச் சேர்க்க, பரவண் ஆனது.
அந்தி என்பது அழகு என்றும் பொருள்தரும். அம் : அழகு. தி என்பது விகுதி.
பரவண் என்பது பவண் என்று இடைக்குறைந்து அந்தி என்ற சொல்லுடன் இணைவுற்றது.
இந்த இடைக்குறைச் சொற்களையும் அறிக:
பருவம் > பவ்வம்.
கடலும் பரந்தது ஆகலின், பவ்வம் ஆனது. பருவமும் ஆம்.
பரவு அம் > பவு அம் > பவ்வம்.
அந்தியிற்பரவும் அழகு எனினுமாம்.
பிறவழிகளிலும் ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.