( இது ஒரு பழைய நிகழ்ச்சியைக் கூறும் வரிகள்)
கோவி லென்பது பொதுவிடம் --- அங்கேயும்
கோணல் புத்தியர் வருவதுண்டு!
ஆவி போயினும் பிறர்பொருள் --- ஏலா
அன்பர் தாமுமே வருகின்றனர்.
திருடர் இயல்பு:
நீட்டும் கைக்கெது கிடைகுதோ --- எண்ணம்
நீங்கா முன்னதை எடுத்திடுவர்
பாட்டின் நல்லொலி திரும்புமுன் --- எடுத்துப்
பக்கெனப் பைக்குள் போட்டிடுவர்.
நகைகள்
அம்மன் போட்டிட அணிசெய --- பற்றர்
ஆழ்ந்தும் எண்ணியே வாங்கினவே!
எம்மின் கண்களை மறைத்தவர் --- திருடர்
கொண்டு சென்றிடில் செய்வதென்னே?
போனவை போனவையே ஆகட்டும் நீநெஞ்சே
ஆனவைக்கு நீமகிழ் ஆவன --- ஈனுபயன்
நீயறிந்து மேற்கொள்வாய் ஆயம்மை தானறிவாள்
ஓயாத தொண்டுசெய் வா.
பல நகைகளில் எது தொலைந்தது என்று இப்போது தெரியவில்லை. இருந்தாலும் இதுவும் அங்குகொண்டுவரப்பட்டவைகளில் ஒன்று.
கோணல் புத்தியர் - நேர்மையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர்.
ஆவிபோயினும் - உயிர் இழக்க நேர்ந்தாலும்
ஏலா - கொடுத்தாலும் ஏற்க மறுக்கும்
எண்ணம் நீங்கா முன் - திருடத் தீர்மானித்து, வசதி இல்ல்லாமல் அதை
மாற்றிக் கொள்ளுமுன்.
பாட்டின் நல்லொலி : பாடிக் கொண்டிருப்பவர்கள் நிறுத்திவிட்டால்
மற்றவர்கள் பார்க்கக்கூடும், அதன் முன்பே திருடிவிடுதலைக் குறிக்கிறது.
ஆழ்ந்தும் எண்ணியே - நல்லபடி யோசித்து.
ஈனுபயன் - பிறப்பிக்கும் பயன்.
ஆய் அம்மை - துர்க்கை அம்மன்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்