கரு என்பது ஒரு பெண்ணின் உள்ளிருப்பது. அதை வெளித்தெரியும் பிற அறிகுறிகளால் தெரிந்துகொள்கிறோம்.
கருமேகத்தில் உள்ளிருக்கும் நீர் நமக்குக் கண்ணுக்குத் தெரியவில்லை. அதிலிருந்து மழைபொழிவதால், நாம் நீரிருப்பதை அடையாளம் கண்டுகொள்கிறோம்.
கரு > கருது > கருதுதல்.
கருவுற்ற மானிடப் பிறவியும் கருக்கொண்ட மேகமும் நம் முன்னறிவினால் அறிந்துகொள்ளப்படுவன போலுமே, கருதுதல் என்பது மனவுணர்வினால் நடைபெறுகிறது. கருது ( வினைச்சொல்) > கருத்து ( பெயர்ச்சொல்) noun formed from a verb.
ஒரு நிகழ்வுக்கான காரணம் காரணி எல்லாம் இத்தன்மையவாம்.
கரு என்பதிலிருந்து காரணம், காரணி என்ற சொற்கள், தமிழில் அருமையாக அமைந்தவை. வெளியில் தெரிவன அல்ல. சுழியனுக்குள் பாசிப்பருப்பும் சர்க்கரையும் போல. மேலுள்ள மாவுத்தோலை நீக்க, இனிய உள்ளிருப்பு நாவில் பட்டு இனிமை தருகிறது.
கருது என்ற வினையமைப்பை உணர்ந்து யாம் இன்புற்றோம்.
தமிழ் என்ற சொல்லுக்கே 100 பொருள் சொன்னார் பெரும்புலவர் கிருபானந்த வாரியார். என்னே சொற்களின் இனிமை.
கருத்தினை அண்மி ( நெருங்கி அணைந்து) நிற்பன காரணம், காரணி எல்லாம்.
கரு +அண் + அம் > கார் + அண் + அ,ம்> காரணம்.
கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய் காலமே கார்காலம்.
கார்மழை - இவ்வழக்குகள் தெளிக.
காரணங்கள் உடன் தெரிவதில்லை. சிந்திக்கத் தெரிவன---- கண்களுக்கு, கருத்தும் மனத்துக்கு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.