திங்கள், 29 ஆகஸ்ட், 2022

காலை வணக்கமும் தொடர்தரு வாழ்த்தும்

 காலையின் மலர்வில்  கனிந்துறு  கலைகள்

ஓலையில்   மலர்ந்த உன்னதம் போல, 

செந்தமிழ் மலர்ந்த  சீரழ காகும்  ----

உங்கள் குடிமைப் பண்பே,

தங்குக நெடிதே,  தழைக்கவே இனிதே.


இது திருப்பம் தரும் திங்கட் கிழமை

இனிய காலை வணக்கம் என்று சொல்லிய அன்பருக்கு.



வியாழன், 25 ஆகஸ்ட், 2022

திரைகடல் ஓடியும்.

 திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.


திரை என்பதற்கும் திரவியம் என்பதற்கும் ஓர் உறவு உள்ளது.  திரை என்பது நீரின் திரட்சி.  அடிப்படைக் கருத்து இங்கு திரட்சிதான். திரவியம் -  திரட்சி.


திர  ( அடிச்சொல் ).  திர+ ஐ >  திரை.  ஐ என்பது தொழிற்பெயர் விகுதி.


திரை  கட:   திரையைக் கடந்து செல்க.  கட என்பது வினைச்சொல். ஏவல் வினை.

அல்  ஓடியும் :  இரவு வந்துவிடும்.  அப்போதும்   ஓடிக்கொண்டிரு.

திரவியம் தேடு.    ( இரவிலும் )  வேலைசெய்து   தேடிக்கொண்டிரு.  போய்ச் சேர்ந்த தேசத்தில்.


கட +  அல் > கடல்,  இச்சொல்லில்  ஓர் அகரம் கெட்டது.

கடத்தற்கு அரியது கடல்.

அல் விகுதி என்றாலும்,   அல்லாதது  ( கடத்தற்கு அல்லாதது ) என்றாலும்

பொருள் தந்துகொண்டிருக்கிறது.


இது மகிழ்வு தரும் பொருண்மை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

அன்பருக்குக் கவிதை

 எம் தொலைப்பேசிக்கும்  அன்பர் சிலர் சில கவிகளை எழுதி அனுப்புகின்றனர். இவற்றை வாசிப்பது  ( வாயிப்பது! )  ஆனந்தமே.

அவர்கள் கவிதைகளை அவர்களைக் கேட்காமல் யாம் வெளியிடலாகாது.

செவ்வாய்க்கிழமை பிரதோஷ வணக்கம் என்றார் அன்பர் ஒருவர்.

அவருக்கு யாம் எழுதியது:

புதன் கிழமை

 

புதன் தரும்  புதுமை,  சிவம்  தரும்  அருளுடன்

கலந்து காலை, மாலைஎப்  பொழுதும்

நிலவு பே  ரன்புடன் உலவிடும் வணக்கம்!

வாழ்கநீர்  வளமுடன்  வாழ்க வாழ்கவே

 

என்பது.


மகிழ்ச்சி  கவிதை!

மனம்நிறை கவிதை.

உணர்ச்சி கவிதை.

ஊன் கிளர்  கவிதை.