வெள்ளி, 15 ஜூலை, 2022

ஏகாரத்துக்கு இகரம் வருதல். சொல் வித்தியாசம்.

 சில சொற்களில் திரியும்போது நெடிலுக்குக் குறிலாய் வந்து திரியும்.  எ-டு:

பூ  >   பு  :     பூ(வு)  >  புஷ்பம்.

பூத்தல் என்பது வினைச்சொல். திரிதலில் பலவேறு விதம் என்றாலும்,  வினையிலிருந்து திரிதலையே சிறப்பாய்க் கொள்வர்.  எ-டு: 

தோண்டுதல்:  தோண்டு> தொண்டை.  ( விகுதி:  ஐ).

ஐ விகுதி வந்த சொற்கள் பிற:  கல் > கலை;  கொல் > கொலை.

தோண்டு என்ற வினை.  தொண்டை என்றாவதற்கு நெடில் முதல் குறில் முதலானது.

பூ என்பது பூப்பு என்றாகி,  அம் விகுதி பெற்று பூப்பம் என்று  ஆகி  புப்பம் என்று  குறுகி,  புஷ்பம் என்று தமிழிலில் இல்லாத ஒலியை அணிந்துகொண்டது.  வல்லொலி தவிர்த்து மெலிந்தது. இவ்வாறாவது தமிழின மொழிகளில் பெருவரவு. தமிழிலும் உண்டு:  உயர் >  ( உயர்த்தி )>  ( உசத்தி)  >  ஒஸ்தி.  உகரம் ஒகரமாதல்.

சில சொற்கள்,  திரிந்தவுடன் இடைவடிவங்கள் மறையும்.  உயர்த்தி என்ற சொல் மறைந்தது. புப்பம் மறைந்தது.     உசத்தி என்பது ஒசத்தி என்று பேச்சில் வருகிறது.  வந்தபின் ஒஸ்தி தோன்றுகிறது.

வேறு என்பது வினையன்று.  வினையல்லாத ஏனையவும்  விகுதிபெற்று இன்னொரு சொல்லாகும்.

வேறு + மை >  வேற்றுமை.

வேறு  >  வேற்று > (விற்று) > (வித்து)

இடைவடிவங்கள் முன்னரே வேறு பொருளுடன் சொற்களாக மொழியில் பயன்பாட்டில் இருந்தால், அவ்வடிவங்கள் மேலும் திரிந்து இறுதிபெறும். இன்னோசை இல்லாதவிடத்து மேலும் திரிந்து செவிக்கினிமை பெற்றுச் சொல்லாகும்.

வித்து>  வித்தி+ ஆ + அம் >   வித்தியாயம்.>  வித்தியாசம்.  

ய - ச என்பன மொழிகடந்த ஆக்கமுடையன. Non language specific.

ஆ -  ஆகி என்றும்

அம் -  அமைவது என்றும்

பொருள்கூற வசதி இங்குள்ளது.  சில சொற்களில் இடைநிலையும் விகுதியும் பொருளற்ற வெற்றாக இருக்கலாம்.

இந்த உதாரணத்தில் ஏகாரத் தலை இகரமாயது காண்க.

க, க, க என்பது ஓர் ஒலி.

இந்த ஒலி காக்கை செய்யும்.

கொ கொ கொ என்பது ஒலி. கோழி செய்யும்.

க+ து >  கத்து (து வினையாக்க விகுதி ) >  கத்துதல்  ( தல் தொழிற்பெயர் விகுதி).

கத்து என்பதில்  த்  புணர்வொலி.

கத் என்பதை அடியாக எடுத்துக்கொண்டால் இன்னொரு வடிவம் கைவருகின்றது.

கத் > கித் > கீத்   (கீதம்).  அம் விகுதி இல்லாமல்.  இது அயல் பாணியாய் உள்ளது.

கீ+ து + அம் > கீதம்..

கீத் + ஆ > கீதா,    ( ஆ - ஆதல் வினை).

ஒலி வெளிவர உதவி ஒலியும் ஆகும்.

ஒலியே முதன்மை. அதுவே நாத பிரம்மம்.  ஐம்புலன்களில் ஒன்று.

காக்கை கத்துதல் ஐந்து மூலப் புலன்களில் ஒன்றன் வெளிப்பாடு.

புழுக்கள் ஒலி செய்வன அல்ல;  அல்லது அவை செய்யும் ஒலியை உணர

நம் செவிக்கு ஆற்றல் இல்லை. 

பகவன் ஒலி மூலம் நமக்கு உணர்த்தியவை கீதை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




புதன், 13 ஜூலை, 2022

அருச்சுனன்

 உள்ளுறை சொற்கள்.

அருமை

சுனை

அன் விகுதி.

அரு + சுனை+ அன் = அருச்சுனன்.

அரிய சுனை போலும்‌ ஊறும் அறிவினன்.

மற்ற தேடல்களில் கிட்டாத பொருள்களெல்லாம் தமிழில் கிட்டுமென்றார் ஸ்ரீ அரவிந்தர்.

.பதிவு: ( தொலைப் பேசியிலிருந்து)

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

செவ்வாய், 12 ஜூலை, 2022

பிராந்தியம், கப்பம்

 அஸ்திரம் என்ற சொல்லை முன்னமே விளக்கியுள்ளோம்.  அது இவண் உள்ளது. ( இவண் -  இங்கு).  ஆதலால் எழுதவில்லை.  ஆனால் இச்சொல் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றிருந்தது.  தொடர்பினதான இடுகையை இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_20.html

ஆகவே பிராந்தியம் என்ற சொல்லை இன்று தெரிந்துகொள்வோம். இதையும் சுருக்கமாகச் சொல்வோம்.

[ஒரு அரசன் என்று சொன்னால் அது இலக்கணம் பிழைத்த செயல் என்பர்.  பிழைத்தலாவது பிழை ஆகுதல்.  அரசன் ஒருவன் என்றுதான் சொல்லவேண்டும் என்று  வித்துவர் சொல்வர்.  அது உண்மைதான் என்றாலும் இந்த மிக்கப் பழமையான இலக்கணத்தைப் பின்பற்றவில்லை.  இப்புலவர்கள்  ஒரு என்பது அஃறிணை வடிவம்,  அரசன் என்ற உயர்திணை வடிவினோடு இணக்குறாது என்பர்.  ( There is no accord ).  இத்துணை ஆழ்தமிழ் இதுகாலை வழக்கில் குன்றிவிட்டது. நிற்க.]

அரசன் ஒருவன் ஒரு நாட்டின் பெரிய மையப்பகுதியை ஆண்டுகொண்டிருக்கும் போது அவன்றன் ஆளுகைக்கு உட்படாமல் எல்லையை ஒட்டியபடி இருக்கும் நிலப்பகுதிகள் சிவற்றை  ஆளுநன் ஒருவனிடம் விட்டு ஆட்சி செய்துகொண்டிருப்பான். அப்பகுதியிலிருந்து பண்டங்களும் பணமும் வருசூல் செய்யப்பட்டு அவனுக்கு வந்துகொண்டிருக்கும்.  அந்த ஆளுநன் கப்பம் கட்டுகிறாரன் என்றும் சொல்லலாம்.  கப்புவது தொகை  என்றால் அது "விழுங்குதொகை " என்று சுருக்கமாச் சொல்லாம்.  வாயில்வைத்து மென்று தொண்டைக்குள் கடத்துவதும் கப்புதல். "அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி" என்பது காண்க.  குறுநில ஆளுநனிடம் கடத்தித் தன்பெட்டிக்குள் வைப்பதும் கப்புவதுதான். ( "கடப்பு" ச் செய்வதுதான்). பொருள் தொடர்புகளையும் தமிழையும் அறிக.)  கடப்பு > கப்புதல் ( வினையாகும் சொல்)  > கப்பம். கவர்தல் > கவர்ப்பு > ( இடைக்குறைந்து) : கப்பு> (வினையாக்கம்) > கப்புதல் எனினுமாம். இச்சொல் இந்தோஐரோப்பிய மொழிக்குள் புகுந்துள்ளது தெரிகிறது.

இப்படிக் கப்பமோ திறையோ வரியோ கட்டியோ கட்டாமலே அடுத்துள்ள பகுதி  "பிராந்தியம்".

பிற >  பிர. பிறத்தல் என்பது தாயிலிருந்து பிரிதல்தான்.  இது பிரி > பிரு என்றும் திரிவது,   ( பிரிந்து நிற்கும் முற்றாத கிழங்கு: பிருகு).

அண் :  அடுத்து அமைந்துள்ள.  ஆம் என்று வேறுபட்டும் விளக்கலாம்.

தி + அம் -  இவை விகுதிகள்.

1. பிற ஆம் தி  அம்;   2 பிற அண் தி அம்.

ஆகப்  பிராந்தியம் ஆயிற்று.    அண் தி - அண்டி என்ற வர வேண்டியதில்லை.

இதன்மூலம் பிராந்தியம் என்பதன் பிறப்புணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.