இன்று "விசுவநாதன்" என்ற பெயரில் அமைந்துள்ள தமிழ் மூலங்களை அறிந்துகொள்ளுவோம்.
தமிழல்லாத சொற்களைப் பற்றிக் கூறுவதாயின், அத்தொகுப்பில் பல தமிழாதலைக் காணலாம். தமிழே இல்லாத மொழிகள் உலகில் அரியன என்று அறிஞர் சிலர் கூறுவது உண்மையாகும். ஆங்கிலத்தில் உள்ள அட்வான்ஸ் என்ற சொல்லில் உள்ள "அட்" என்பது "அடு" ( அடுத்துவரல் ) என்பதன் திரிபாகும். ரேர் ( அரிது ) என்பது அகரமாகிய தலையிழந்த சொல். ஆங்கிலத்தில் காணப்படும் தமிழ்ச்சொற்களில் பல தமிழாயிருத்தலால் தமிழும் ஓர் இந்தோ ஐரோப்பியத்துக்கு மூலமொழியாதல் கூடும் என்பது முன்னர் ( இருபதாம் நூற்றாண்டில்) சுட்டிக் காட்டப்பெற்றுக் கட்டுரைகளிலும் வெளிவந்துள்ளன. அவற்றில் சில உங்களை எட்டியிருத்தல் கூடும்.
நன்னூல் என்னும் தமிழ் இலக்கணம் தமிழிலிருந்து இந்தோ ஐரோப்பிய மொழிகட்குப் மொழிபெயர்க்கப்பட்டபின், அம்மொழிகளில் மொழிநூல் கலை வளர்ச்சியடையத் தொடங்கிற்று. இந்தியாவிலிருந்து ஐரோப்பியர் அறிந்துகொண்டவை பல. சீனாவிலிருந்து அவர்கள் வெடிமருந்துகளை அறிந்துகொண்டது போலவே இதுவும். அகரவரிசைகள் நிகண்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை. இது நிற்க:
விசுவநாதன் - இச்சொல்லில் உள்ள விசு என்ற சொல்லுக்கும் வீசுதல் என்ற வினைச்சொல்லுக்கும் உள்ள தொடர்பு முன்பு விளக்கப்பட்டுள்ளது. அதை இங்குக் காணலாம்: ஒன்றை வீசுவீரானால் உம் கையிலிருந்து இடைவிரிவில் அது பயணித்துச் சென்று கீழே விழுகிறது. இது விரிசெல்கை.
விழித்தல் என்பதும் இமை விரித்தல்தான். விர்>விரி> விழி.
இலத்தீன் பகர்ப்பு: விர் > விழி > விஸ் (viz ) visual. viz> video ( I see).
https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_16.html
விசு என்பது தமிழ் அடிச்சொல்.
அது விரிதற் கருத்தை அடிப்படையாகக் கொண்ட சொல் ஆகும்.
இதையும் வாசித்தறிக:
https://sivamaalaa.blogspot.com/2014/08/blog-post_63.html
வாயித்தல் ( வாயாற் சொல்லுதல் ) என்பதன் திரிபுதான் வாசித்தல். ய- ச போலி. ய -ச திரிபு பிறமொழிகளிலும் காணப்படுவதாகும். ( Not language specific )
ஒரு சொல் தமிழா அன்றா என்பதை ஸ், ஷ் என்று வரும் ஒலிகளை வைத்து முடிவு செய்யப்படாது. உயர்> உயர்த்தல் > உயர்த்தி > ஒஸ்தி ( திரிபு) அதனால் அது தமிழன்று எனப்படாது.
விர் > விரி [ விரிவு ]
விர் > விய் ( வியனுலகு).
விய் > ( வியு) > விசு > விசும்பு. ( காயம் [ ஆகாயம் ] )
விசுவம் . > விசும்பு (எங்கும் விரிந்து அமைந்ததாகிய உலகம்.)
இதனை "விரிநீர் வியனுலகு" என்று சொல்லமைப்பையும் தெளிவுறுத்திக் கூறினார் வள்ளுவனார்.
(தமிழை ஒட்டிய பூசாரிமொழிதான் சமத்கிருதம். அது தமிழின் பிம்பமாய் எழுந்து சில அயல்சொற்களையும் உள்ளடக்கி விரிவடைந்தது)
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
(மீள்பார்வை செய்யுமுன் இடைக்காலத்தில்
எழுத்துபிறழ்ச்சிகளை சரிப்படுத்தி வாசித்துக்கொள்க.
நேரமிருந்தால் பின்னூட்டம் செய்து உதவுக )