திங்கள், 4 ஏப்ரல், 2022

பாரதம் > பாரத்

 பாரதம் என்ற சொல். எவ்வாறு வந்ததென்பதைச் சுருங்கச் சொல்வோம். மிக்க விரிவாக வரையப்பட்ட  நூல்கள் படித்து முடிக்கப்பெறுவது பெரும்பாலோர்க்கு இயலாதது.

கடலும் வானும் மிக்கப் பரப்பு உடையவை

பரவை என்ற தமிழ்ச்சொல்லுக்கு பரந்ததான கடல் என்பது பொருள்.

மிகப் பரந்த இடத்தில் எங்கும் இருப்பவன் கடவுள். அதனால் அவன் பர+ ம் + அன்.

ம் என்பது இடைநிலை.  இது உம் என்பதன் குறுக்கம்.

பாரதம் :  பர + அது + அம் >  பாரதம்.  இது பின் அயற்றிரிபாக பாரதம் என்று நீண்டு திரிந்தது.  இது பரதவர் என்ற சொல்லின் உறவு.

பர > பாரதம்:  இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர். பரத்தல் என்ற

 வினையிலிருந்து அமைந்த சொல்.

பர + அது + அ + அர் > பரதவர்.  வகரம் உடம்படுமெய்.

மீன்விலைப் பரதவர் என்ற இலக்கிய வழக்கை நோக்குக.  மீனவர் என்று பொருள்>

மூன்று புறமும் கடல்.  வடக்கில் மலைகளிலிருந்து நீர்வரத்து.  மீனுக்குப் பஞ்சமில்லை. இந்த மீன் நாகரிகம் இந்தியாவில் செழித்திருந்தது.

பாரத் என்பது வால்வெட்டுச் சொல். (  சொல்லியல் முறையில் சொன்னால் புரிதல் குறைவு.)

எம் பழைய இடுகைகளில் மேலும் சொற்களை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க.


மெய்ப்ப்ய் பின் 

நாளை வருக நற்கவி

உங்களுடன் உரையாடும் கவிதை:


சென்றமுந்   நாளும்தாம் செந்தமிழில் சிந்தித்து

வந்தமுந்  நற்கவிதை நான் தரவே  ---- முந்திடினும்

ஆங்கெனை முந்தி  அயர்வு முடக்கியதால்

நான்கிடந்  தின்றெழுந்  தேன்.


இனிநேரம் நன்றாயின் யானே எழுத

நனிமுயல்வேன் நம்பி  வருவீர் ---- கனிபயந்த

சாறாய் அவைவருமே சற்றும் தயங்காமல்

நேராய் வருவீரே இங்கு.


சென்ற முந் நாளும் -  சென்ற மூன்று நாட்களும்

வந்த முந்நற் கவிதை -   தோன்றிய நல்ல மூன்று கவிதைகள்

நனி -  நன்கு

கனி பயந்த சாறு ---  கனிச்சாறு  போல

நேராய் - எதற்கும் தயங்காமல்.  வேறு எங்கும் செல்லாமல்

இங்கு --  இந்த வலைப்பதிவுக்கு

நன்றி வணக்கம்

மெய்ப்பு பின்

பிறழ்வுகள் காணின் பின்னூட்டம் செய்யுங்கள்>

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

செவிகளில் வந்து விழும் செய்திகள்

 (புதுக்கவிதை)


கொந்தளிக்கும் கொழும்பொடு

பொறிப றக்கும்  உக்கிரைன்,

எந்தக் கணினிக் காணொளி

எனினும் எட்டும் செய்திகள்!

வந்த நிலைகள்  மாறியே

குந்த  கங்கள் இலாமலே, 

நந்தல் இலாத செய்திகள்

எந்தம் செவிகள் கேட்குமோ?


உக்கிரேன்    போர்க்களம்

குந்தகங்கள்  -  குழப்படிகள்

நந்தல் -- கெடுதல்

எந்தம் -  எங்களின்