பத்துமினி (பத்மினி)பச்சை மின்னி-- குன்றுதல்
பத்துமினி ( பத்மினி என்பது ) இன்னொரு வகையிலும் விளக்கமுறும் சொல். இதனை இப்போது பார்ப்போம்.
பச்சை+ மின்+ இ > பச்சு+ மினி ,
இது சகர தகர போலியின் காரணமாக:
பத்து + மினி > பத்துமினி > பத்மினி ஆகிவிவிடும்.
பத்-மினி என்று வெட்டுப்படுத்திச் சொல்வது அயல்பேச்சு முறை.
இனி மினி என்பது காண்போம்:
மின் + இ > மின்னி > மினி ( இது இடைக்குறை. ன் குன்றியது).
ஆக இதன் பொருள் பசுமையுடன் மின்னும் ஒன்று. அதாவது பச்சை ஒளி வீசி மின்னுவது.
பச்சை என்பது வேற்றுக்கலப்பு இல்லாத இளநிலையைக் குறிக்கும்.
இன்னொரு வகை என்று கூறினோம். முன் விளக்கிய முறை இங்கு உள்ளது. அதையும் வாசித்து மகிழுங்கள்.
பற்றுதல் பத்துமினி
https://sivamaalaa.blogspot.com/2022/03/blog-post.html
பச்சை என்ற சொல் குறுகிய இடங்கள்
இனிப் பச்சை எனற்பாலது பச்சு என்று திரிதலுக்கு எடுத்துக்காட்டு:
பச்சையுடம்பு > பச்சுடம்பு.
பச்சை இரும்பு > பச்சிரும்பு
யாப்பியலில் தொல்காப்பிய மாமுனியால் கூறப்பட்ட ஐகாகரக் குறுக்கம் பேச்சிலும் சொல்லாக்கத்திலும் பரவிப் புதுமை விளைத்துள்ளமையையே இது தெளிவாகக் காட்டுகிறது.
பச்சிமகாண்டம்.
முற்பட்டுப் பிறந்தவர்கள் "கிழவன்-கிழவிகள்" ஆகிவிடுவார்கள். தற்போது தோன்றியது இன்னும் பச்சையாகவே இருக்கும். இதன் காரணமாக பச்சை+இம்+ அம் என்ற துணுக்குகள் கலந்து, பச்சிமம் என்ற சொல் உண்டாயிற்று.. இது கம்பன் காலத்திலே வழக்குக்கு வந்தது. விவிலிய நூலில் புதிய ஏற்பாட்டுக்கு: பச்சிமகாண்டம் என்ற சொல் தமிழில் ஏற்பட்டது. ஆனால் இன்று கிறித்துவத் திருச்சபைகட்குச் சொல்வோருக்கு இது மறதியாகி இருக்கலாம். பழைய வரலாறு யூதமதத்து வரலாறு.Old Testament. புதிய ஏற்பாடு: New Testament. பச்சிமம் New.
இது ஆட்பெயரிலும் திரிந்து வழங்கும். எ-டு:
பச்சை முத்து > பச்சிமுத்து. இளையமுத்து என்பது பொருள்.
( இது பட்சி முத்து என்பதன் திரிபு அன்று).
இன்னும் பல. பின் காண்போம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்னர்.