சாமிக்குச் செய்தது கேசரி ----- சீனிச்
சார்பினில் இனிக்கும் கேசரி!
நேமித்துத் தந்தனர் பேறிது ---- இதை
நித்தலும் கொள்வ தெடைதரும்.
இறைவன் தந்த தென்பதால் --- தீமை
ஏதும் கூடாமல் காப்பதால்,
குறைவாய்க் கொஞ்சம் உண்ணலாம் --- ஆத்தும
குதூக லம் மகிழ்ந் தெண்ணலாம்.
சீனியை மிஞ்சிய இனிமையில் --- இதைச்
செய்து முடித்தது மடைப்பளி,
மேனிலை ஏய்ந்ததும் எப்படி --- அறிவார்
சீனியை ஆய்ந்தவர் காண்கிலம்.
சார்பினில் - ( சீனி அதிகமான ) பாங்கினால்
நேமித்து - எம் ஏற்பாட்டினால் பூசை செய்து,
நித்தலும் - தினமும்
கொள்வது - உண்பது
பேறிது - பேறு இது : இது எம் பாக்கியம் என்றபடி.
மடைப்பளி, மடைப்பள்ளி, கோயிலில் சமைக்கும் இடம்
மேனிலை ஏய்ந்தது --- (சீனி) கூடிய நிலையை அடைந்தது
அறிவார் சீனியை ஆய்ந்தவர் --- சீனி ஆய்வு செய்தவர்களுக்கே தெரியும்.
இவ்வளவு இனிப்பாக இருப்பது எப்படி என்பது தெரியவில்லை. சீனைய
மிஞ்சிய இனிப்பாய் உள்ளது.
காண்கிலம் - எமக்குத் தெரியவில்லை.
கேசரி என்ற சொல்:
கூழ் என்பது முன்பாதியில் உள்ள சொல். இன்னொரு பின்பாதிச் சொல்: சரி.
அதிகமாகக் கூழாகிவிடாதபடி, சற்று இளகிய நிலையிலே :" சரியாகச்"
செய்யப்படுவது. கூழ் என்ற சொல்,
கூழ் வரகு என்பதில் கூழ் - கேழ் ஆகிற்று. அதுபோலவே இங்கும் சொல் திரிந்துள்ளது. கேழ்வரகு என்பது பின்னும் கேவர் என்ற் திரிந்து வழங்குகிறது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
[இரண்டு எழுத்துப் பிறழ்வுகள் திருத்தம்
02032022 1126]
தனிக்குறிப்பு
==========================================================
இது தனிவாசிப்புக்காக எழுதப்பட்டாலும் கவனக்குறைவான் வெளியோரும் வாசித்துவிட்டனர். ஆகவே இந்தப் பகுதி இங்கு கைவிடப்படுகிறது. அழிக்கப்படவில்லை.
ஆசிரியர்க்கு not for public - do not read
பஞ்சமி
வலை - வளை தொடர்பு
சாம்பவன் - ஜம்பவான்