ஞாயிறு, 2 ஜனவரி, 2022

என் இயமானர் ( நாய் சொல்வது)

 


ஒரு சிறுநாய் பாடும் கவி:-

என்னை அழைக்கிறார் இந்த மூத்தவர்

இவரிடம் நான்போக மாட்டேன்

என்னை அணைத்திடும் என்இய மானர்

இந்தவீட் டுள்ளிலுள் ளாரே!

என்னிடம் வருவார் உண்டிடக் தருவார்

பட்டையப் பம்பகிர் வாரே

தண்உறு நீரைத் தவிப்பது தீர

தந்திடு மன்னவர் வருக வாழ்க.



இயமானர் - எசமானர்

பட்டையப்பம்- பிஸ்கட்

பகிர்வார் - பகுதிகளாகத் தருவார்

தண்உறு - குளிரடைந்த

தவிப்பது தீர - தாகம் தீர

மன்னவர் - அரசர்.


எஜமான் என்னும் சொல்:  இங்குச் சொடுக்கி வாசிக்கலாம்: 

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_18.html


சனி, 1 ஜனவரி, 2022

ஆராதனை

 ஆராதனை தமிழ் மூலம் சொற்புனைவறிதல்


ஆர்-தல்   

:  நிறைதல்.  நிறைவு.

ஆது:            

இது ஆவது என்பதன் இடைக்குறை. இங்கு வகரம் குன்றியது.

அன்       :      

சொல்லாக்க  இடைநிலை.  இது அண்முதல் என்ற வினையின்            திரிபு. அண்முதல் என்பது நெருக்கமாதல்.   அண் - அன் என்று திரிந்து                           சொற்களில் வரும்.   அன்பு என்ற சொல்லில் இது வந்துள்ளது.                    ஆகவே  தமிழில் இல்லாததன்று.  அன்பு என்பதில் ~பு விகுதி.

ஐ:                    தொழிற்பெயர் விகுதி.  கலை, மலை, உலை என்பவற்றிலெல்லாம்                              விகுதியாக வந்துள்ளது.    விலை என்பதில் தொழிற்பெயர் விகுதி.                                 இங்கு வினையுடன் மட்டும் சேராமல் பிற பாகங்களும்                                                        வந்துள்ளபடியால் இந்த ஐ விகுதியைச் சொல்லாக்க விகுதி                             என்று  மட்டும் குறிக்க.

பொருள்:      அணுக்கமாக நின்று நிறைவு செய்யும் ஒரு பூசை.  இங்கு அணுக்கமென்றது வழிபடுபொருளுடன் அணுக்கம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்

AYYAPPA ECSTASY


 

மெய்யுணர்வுடன் கொண்டாடும் ஐயப்ப ஆராதனை.


படம் உதவிய திருமதி லீலா சிவாவுக்கு நன்றி