செவ்வாய், 19 அக்டோபர், 2021

19102021 தொற்றுநிலவரம் சிங்கப்பூர்

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 18]

 

அக்டோபர் 17, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,651 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 327 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 66 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.6%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.1%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 16 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 17 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,058 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


go.gov.sg/moh171021

திங்கள், 18 அக்டோபர், 2021

கலித்தல், காலகண்டர், காலண்டர்.

 காலண்டர் என்று நாம் சொல்லும் நாட்காட்டியைக் குறிக்கும் அதே பெயர்.  ஆங்கிலத்தில் எப்படி உருப்பெற்றதென்பதைத் தெரிவிக்கும் கதைகள் உள்ளன. இதற்குக் கூறப்பெறும் சொல்லாக்க விளக்கங்களில், உள்ளது எவ்வளவு, கதை எவ்வளவு என்று எளிதில் அறிய முடியவில்லை.  பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்த  கிறித்துவ பூசாரிகள்  பிறையைப் பார்த்து,  உரக்கக் கூவி எத்தனை நாட்கள் இம்மாதத்தில் உள்ளன,  எந்தெந்த விழாக்கள் வருகின்றன என்று தெரிவிப்பார்களாம்.  கெலெ என்ற இந்தோ ஐரோப்பிய மூலச்சொல் கத்துதல் என்று பொருள்படும்.  கத்திச் சொன்னதனால் "கெலெ" என்பதிலிருந்தே இந்த நாட்காட்டிக்குப் பெயர் அமைந்தது என்று ஐரோப்பிய மொழியறிஞர்கள் கூறுவர்.  இப்போதுள்ள ஆங்கிலத்தில்  "கால்" என்பதும் அழைப்பது, ஒலி எழுப்புவது என்றே பொருள்படும்.  காகிதம்,  அச்சு இயந்திரம் முதலிய இல்லாத அல்லது வழக்குக்கு வராத காலத்தில் இது அவர்கள் கூறுகிறபடி நடைபெற்றுச் சொல் அமைந்திருக்கலாம்.

தமிழில் இதற்கு முன்பே "கலித்தல்" என்ற சொல் வழக்கில் இருந்தது. இந்தக் "கெலே" என்பது இந்தோ ஐரோப்பியத்தில் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இச்சொல் கலித்தல் வினையிலிருந்து அயலில் சென்று வழங்கியிருத்தல் தெளிவு..

கலித்தல் -   பொருள்:  ஒலித்தல்.

இலத்தீனில் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டு: கல்குலஸ்.  தமிழர் கல்லைக் குலுக்கிப் போட்டுக் கணக்குப் பார்த்தபடியால்,  அதிலிருந்து "கணக்கு" என்று பொருள்படும் கல்குலஸ் என்ற சொல் உருவெடுத்தது. எண்களை  (1-9 & 0 ) வழங்கியவர்களும் இந்தியர்களே என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாறு.

பஞ்சாங்கம் இருந்தபடியாலும் அதிலிருந்து நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டதாலும் நாளை மட்டும் அறிவதற்கு ஒரு தனி ஏடு  முன்னர் ஏற்படவில்லை. ஐந்து அடங்கிய ஏடு பஞ்சாங்கம்.

ஒரு நாளுக்கு ஒன்றாகக் கிழித்து நாளை அறியும் ஏடுகள் வந்த பொழுது, தமிழர் அதனைக் காலத்தைக் கண்டுபிடிக்கும் ஏடு என்ற பொருளில் " காலகண்டர்" என்றனர் .  கண்டு கண்டாகக் காலம் கணிக்கப்பட்டது எனினுமாம்.  இது காலண்டர் என்பதனுடன் ஒலியொற்றியது போலிருப்பினும், இது வேறு சொல்லே என்றறிக.

காலே என்ற இந்தோ ஐரோப்பிய மூலத்தையும் தமிழே வழங்கியுள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.


சனி, 16 அக்டோபர், 2021

நமோ நம, நமோ நம! என்ற வாழ்த்துத் தொடர்.

 இப்போது நாம் தலைப்பில் குறித்துள்ள தெய்வவாழ்த்துத் தொடரைக் கவனித்து அதன் அமைப்பை அறிந்துகொள்வோம்.  இது ஓர் அருமையான சிறந்த, மனநலம் வருவிக்கின்ற தொடராகும்.  இது தமிழிலிருந்து சென்ற தென்பதை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூறியுள்ளனர்.  அவர்கள் கூறியவற்றை இவண் எழுதுதலைத் தவிர்த்துக்கொள்வோம்.  அவற்றை அவர்களின் எழுத்துக்களில் அல்லது நூல்களில் கண்டுகொள்க.  இவர்கள் கூறிய கருத்து அல்லது சொல்லாக்க விளக்கம் எதுவும் இங்கு கைக்கொள்ளப் படவில்லை. மறுப்பதற்கு அவை மறுவாசிப்புக்கு அருகில் இல்லை.

இப்போது இத்தொடரை ஆய்வு செய்வோம்.  

நமோ  என்பது நலமோ என்பதன் இடைக்குறை.  இடைக்குறைகள் தமிழில் பெரிதும் வழங்குபவை.  இவ்விடைக்குறைகளுடன்,  பகுபதங்களில் வருவன எனப்படும் தொகுத்தல் விகாரத்தையும் அடக்கிக்கொள்ளவேண்டும்.   எ-டு:  என்னில்  >  எனில்;  தன்னில் > தனில்.   இவை தேடாமல் தரத்தக்க எளிமையன ஆகும்.

நம என்பது நலம்  அவை என்பது.   நலம் அ என்பதில்  அ என்பது சுட்டும் பன்மை விகுதியும் ஆகும். அ என்பது உரிமையும் காட்டும்: "நம".    உன கழல்கள் என்னும் தொடரில் உன் என்பதனோடு அ சேர்ந்தது. " கழல்கள் உன" என்பது வாக்கியமாய்க்  கழல்கள் உன்னவை என்று பொருள்படும்.  உன்னது என்பது ஒருமை.  வருகின்ற அன் அ என்பது வருகின்றன என்றாகி அ பன்மை குறித்தது போலுமே  ஆகும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:  பல்+ அ = பல. பல் என்பதன் பொருள் - சில என்பவற்றிலும் மிக்கவை , எண்ணிக்கையில் மிக்கவை.

ஒப்பீடு:  நலம் அல்லது நன்மை என்பதே பிறமொழிகளிலும் வணக்கம் கூறும் சொற்களாய் உள்ளன. எ-டு:  Good Morning.  (  இங்கு Good  என்பது  "காட்"  ( கடவுள்) என்ற பொருளுடையதன்று என்று இப்போது முடிவு செய்துள்ளனர் ). எனவே நலம் என்பதே இதன் பொருளாகவேண்டும்.

நலமே நலமாகும்( தன்வினை), நலமாக்கும்.(பிறவினை).

நம என்பது நலம் அவை என்று மட்டுமின்றி நம்மவை ஆகும் என்றும் இரட்டுறலாகும்.

நாராயணன் என்பவர் நீரின் அமைப்பு என்பது வேதங்கள் சொல்வது.

"நலமோ நலம் பல "  அல்லது "நலமோ நம்மவை"என்ற முழக்கமே நமோ நம.  நாராயணதே நமோ நம!

நாராய என்பது நீர் ஆய  என்பதே.  இயற்கைத் தெய்வம். இறைவன் எங்குமுளான்.  இயற்கையிற் பொதிந்து இயல்கின்றான் என்பதே தத்துவம் ஆகும். பாலில் நெய்போல் என்பது அப்பர் வாக்கு.  அது அப்பர் ( நாவுக்கரசர்) வாக்கும்  upper வாக்கும் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.