சனி, 18 செப்டம்பர், 2021

ஐயப்ப மகிமை miracle

 பிப்ரவரி 2021 வாக்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில்,  கொதிக்கும் நீரையோ எண்ணெயையோ  ஐயப்ப பற்றர்கள் தங்கள் மீது வீசிக்கொள்கிறார்கள். யாரும் பாதிக்கப்படவில்லை என்று படத்தின்மூலம் தெரிகிறது.  இப்பற்றின் மகிமையை இஃது பறைசாற்றுவதாக இருக்கிறது.



இது எங்கு நடந்தது என்று தெரியவில்லை. பதிப்புரிமை உள்ளவர் எங்களைத் தொடர்பு கொண்டால், அவர்கள் வேண்டுகோள்படி இது நீக்கப்படலாம். குறுஞ்செய்தி அனுப்பவும்.  அறிந்தோர் பின்னூட்டம் செய்வீராக.

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

முதியோர்க்கு வழிதந்து உதவுங்கள்

 கொஞ்ச காலமாகவே கோயில்களில்  முதியோருக்காக நல்ல வசதிகள் செய்துதரப்படுகின்றன. இங்கு காணப்படும் ஒரு படத்தில், ஒரு முதியவர் நாற்காலியில் அமர்ந்தபடி கோவிலில் சாமி கும்பிடுகிறார். பேருந்துப் பயணத்தின்போதும் தொடர்மின்வண்டிப் பயணத்தின்போதும் முதியவர்கள் அமர்ந்து பயணம் செய்ய  இளையோர் வழிவிட வேண்டுமென்னும் சட்டம் அல்லது ஏற்பாடு சிங்கப்பூரில் இருக்கிறது.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகத் தொடக்கத்தில் உழைத்தவர்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டுமென்பது ஒரு சித்தாந்தமாகவே  இங்குத் தொடர்வது பாராட்டுக்குரியதாகும்.


காவலிற் சிறந்த மாமணிகள்.

இவர்கள் குடியிருக்கும் வீடு,  ஓர் ஆற்றோரம் இருக்கிறது.  ஆனால் கொடிக்கால் எதுவும் இல்லை.  அருகில் இருப்பவை வானத்தை முட்டும் மாளிகைகள்..  அங்கு என்ன நடந்தது என்ற விபரம் கீழே.


இது சின்ன நாய்க்குட்டி என்று நினைத்துவிடவேண்டாம்.  பெரிய ஒரு பாதுகாப்பை இது வழங்கிக்கொண்டிருக்கிறது.  எசமான் தாளிகை படிக்கிறார்.  அருகிலே அமர்ந்துகொண்டு கண்காணித்துக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கூட  இத்தகைய இணையற்ற பாதுகாப்பை யாரும் வழங்கிடவில்லையே!  நெருங்கத்தான் முடியுமா யாராலும்?

இரவெல்லாம் நல்லபடி கண்காணித்துப் பாதுகாப்பு வழங்கும் இத்தகைய காவலர்களை, மிகப்பொருத்தமாகவே  மேடை ஏற்றி,  பூங்கொத்துகள் புடைசூழ தங்கள் நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள்,  திருமதி ரோஷினியும் அவர்தம் அன்புக்கணவரும்.  நல்ல சாப்பாடும் இருந்தது.   தங்கள் வேலைக்குத் தக்க சன்மானம் கிடைத்த மகிழ்வில் அவை நன்றியுணர்வுடன் அமர்ந்திருக்கின்றன.  காவலர்கள் வாழ்க! வாழ்க!

எப்படி இவர்கள் மேடை?  காவல்மாமணிகள் என்ற பட்டம் வழங்கவேண்டும்.