புதன், 15 செப்டம்பர், 2021

Splitting of Etymology page.

வணக்கம் 

நமது சொல்லாய்வுப் பட்டியலை  இரண்டு பாகங்களாகப் பிரிக்கத் திட்டமிட்டு இருக்கின்றோம்.  இதற்குக் காரணம்,  இப்போது உள்ள பக்கம்  இயங்க மறுக்கிறது:  இதில் அதிகமான சொற்கள் பட்டியலில் இருப்பதால் புதிய பதிவுகளை  ஏற்றுக்கொள்ள இந்தப் பட்டியல் பக்கத்தினால் இயலவில்லை. பட்டியல் மிக்க நீட்டமாக உள்ளது.   Pages are not responsive.  

நேயர்கள் "அ" முதல் "த"  எழுத்துவரை முதல் பட்டியலிலும்,  ந-விலிருந்து  னகரம் வரை இரண்டாவது பட்டியலிலும் தேடவேண்டிவரும். இந்த வசதிக்குறைவுக்கு மன்னிக்கவும்.

Administrator

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

வினாயகற்குரிய தினத்தில் பிறந்தநாளும் வந்தது.

 


பிறந்தநாள் வாழ்த்து விநாயகர்க்கும் மற்றுமே

சிறந்தவா  சிரியர்  குமரன்பிள் ளைக்குமே

திருவார்க்குக் கிடைத்தது  மோதகம் வடைகளே

திறலார்க்குச் சர்க்கரைத்  திண்சீமை அப்பமே.

திருவார்  அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே.

பிள்ளையார் காக்கப் பிள்ளையவர் வாழ்கவே.


[ கோவிட் காரணமாக பிறந்த நாள் விழாவிற்கு ஒருவரே அழைக்கப்பட்டு,  அவரும் முதியவர் ஆனதால்,  பச்சைவெள்ளம்  பருகினார், சீனி அதிகம் அதனால் திண்ணப்பத்தைக் குமரன் பிள்ளைக்கே ஊட்டினார் .  கோவிட்காலம்  ஆனாலுமே சிறப்பாய்   முடிந்தது, ]

குறள்வெண்பா:

விழாவை ஒடுக்கியே கொண்டாடின் வாழ்வோம்

பலாப்போல் சுளைப்பயன் பெற்று.


பொருள் :  விநாயகற்கும் -- ( இது விநாயகனுக்கும் என்பதை

சுருக்கும் முறை.   0ன்+ கு  = ற்கு. ).  விநாயகர்க்கும் எனின் அது

பலர்பால் வடிவம் .

குமரன் பிள்ளை -  பிறந்த நாள் கொண்டாடியவர்.

திருவார் - திருவுடையவர்,  விநாயகர்.

திறலார் -  திறன்கள்  உடைய  பிறந்தநாள் கொண்டாடும் திரு குமரன்.

சர்க்கரைத் திண்சீமை அப்பம்:   "கேக்". இது படத்தில் உள்ளது.

திருவார் அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே -   இது  பூசை செய்யப் பொருள் தந்ததைத் குறிக்கிறது.  தந்தவர் பிறந்த நாள் கொண்டாடியவர்.

பச்சைவெள்ளம் -  வெறும் பச்சைத்தண்ணீர்.  தண்ணீரைப் பச்சைவெள்ளம் என்று வேடிக்கையாகக் குறிக்கின்றார் கவி. வழக்கில் வெள்ளம் என்பது நீர்ப்பெருக்கு.  ஆனால் தமிழினமொழி வழக்கு வேறுபடுகிறது.

குறள்வெண்பாவின் பொருள்:

பலாப்பழம் அப்பெயர் பெற்றது பல சுளைகள் உடைமையால், 

பல் ( பல) + ஆ = பலா.   ஆவென்பது இங்கு விகுதி. இன்னொரு காட்டு: 

தல்+ ஐ = தலை

தல் + அம் = தலம்

தல் + ஆ =  தலா.  

உல் + ஆ >  உலா.  உல் என்பது சுற்றுதல் குறிக்கும் சுட்டடிச் சொல்.

பலாப்போல் சுளைப்பயன் என்பது:  பலாப்பழம் சுளைகள் பாதுகாப்பாக  உள்ளே கட்டமைக்கப் பட்டுள்ளன.  ஒன்றுக்கு ஒன்று தடுப்புகள் உள்ளன.  வெளித்தோலும் பாதுகாப்புத் தருகிறது.    எனவே, இதன் அமைப்பு,  பழங்களுக்குப் பாதுகாப்பாகும். அதுவே பயன். கோவிட் காலத்தில் பலர் இருக்க, பலாவுக்குப் போல் பாதுகாப்பு வேண்டும்.


அறிக மகிழ்க

மீள்பார்வை செய்யப்படும்.

 







திங்கள், 13 செப்டம்பர், 2021

நாயைச் சிறைத்த வேலையற்றவர்.

அறுசீர் விருத்தம் 

வேலை இல்லை என்றால்

விழைந்தன செய்தல் கூடும்;

காலை மாலை நன்றே

செயவோ தடையே தையா!

சோலை அகத்துச் சென்று

நாயைச் சிறைத்தல் நன்றோ?

வாலாம்  சிறுவன் போல

வந்ததைச் செய்தல் வேண்டா.



உரை:  விழைந்தன செய்தல் -- தனக்கு விரும்பியதைச்  (எதையும்)  செய்வது  ,  கூடும் - இயலுவதே;    காலை மாலை நன்றே செய்யவோ தடை ஏதையா --  காலையாயினும் மாலையாயினும்  விரும்பிய நல்லதையே செய்வதற்குத்  தடைகள் இல்லையாம்; ஐயா - விளி;  சோலை அகத்துச் சென்று நாயைச் சிறைத்தல் நன்றோ -  மரம் செடி கொடிகள் வளர்ந்து உலவ ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நாய்க்கு முடிவெட்டுதல் நன்றோ?  நல்லதன்று;  வாலாம் -- அடங்காத , சிறுவன் போல,  வந்ததை -  நினைப்பில் தோன்றுவதையெல்லாம்,  செய்தல் வேண்டா(ம்),  என்றவாறு.


Man shaves dog at S’pore walkway, gets called out for ‘irresponsible behaviour’

Pl click for news::-

https://theindependent.sg/man-shaves-dog-at-spore-walkway-gets-called-out-for-irresponsible-behaviour/