கை என்று முடியும் சொற்களில் அஃது இறுதியோ (கை) என்று ஆய்ந்தோய்ந்து பார்க்காமல் முடிவு செய்தல் சரியன்று. சிலவேளைகளில் கை என்று முடிந்தாலும் அது விகுதியன்று என்றே முடித்தல் சரியாகும்.
மக்களால் காக்கா என்று சுட்டப்படும் இந்தப் பறவை, கா --- கா என்றே ஒலியெழுப்பி மக்களிடம் அப்பெயரைப் பெற்றது. அதை விரும்பி அதற்குச் சுற்றுச் சுவரின்மேல் சோறிட்ட இல்லத்தரசிகளை யாம் பார்த்ததுண்டு. யாம் வீட்டுக்குள் சோறுண்பது எப்படித்தான் இந்தக் காக்கைகளுக்குத் தெரிகிறதோ, அவை கா கா என்று கத்தத் தொடங்கிவிடுகின்றன. அவற்றுக்கு இரக்கப்படவேணும்தான்.
மக்கள் அதற்கு நிறத்தை அடிப்படையாகக் கொண்டு பெயரிடமால், அது செய்யும் ஒலிகொண்டு பெயரிட்டமை, ஓர் தீரமான அறிவுத்திறனையே பளிச்சிடுகிறது. பறவைகளை நிறத்தால் பாகுபாடு செய்தல் ஆகாது. அப்படி மனிதன் செய்தல் அவன் புத்தி கெடுதலை நோக்கிச் சென்றிறங்கிவிடும் எனப்பாலதற்கு முன்வரவுக் குறியாகிவிடும்.
காக்கா + ஐ > காக்கை ஆகும். காக்கா என்ற ஒலிக்குறிப்பில் உள்ள ஆ என்ற கடைப்பாகத்தை எடுத்துவிட்டு ஐ விகுதி புணர்க்க, காக் + ஐ > காக்கை என்பதே சரி. வாத்தியார் இதனை கா+ ஐ என்று பிரித்தால் சரியாகாது. கா காஎன்பதை இணைத்து இடை ககர ஒற்று புணர்ச்சியினால் வந்ததெனினும், காக் என்று நிறுத்துவதே சொல்லியலுக்கு ஏற்றது. இலக்கண்த்துக்கு, காக்கா+ ஐ > காக்கை என்றாக்கி ஒரு கா கெட்டது என்று சொல்லிவிடலாம். சிலர் காக்கா > காக்கை என்பதுடன் நிறுத்திக்கொள்வர்.
இதனைத் தாக்கி எழுதுங்கள் பார்க்கலாம்.
தக்கை என்பதில் கை விகுதியா? பகுதி எது?
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்