இராக்கம்மா, இராக்காயி என்பவை அம்மனின் பெயர்கள். சிற்றூரால் ஆளப்படும் சொற்கள் இவையாகும்.
இது அமைந்த விதம்:
இரக்கம் உடையவள் அம்மன்.
இரக்க + ஆயி = இராக்காயி > ராக்காயி.
இரக்க + அம்மா = இராக்கம்மா> ராக்கம்மா.
இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்: பக்கம் > பட்சம் > பக்ஷம்.
மோள் > மோள்+சு+அம் = மோட்சம் > மோக்கம்.
மோள் > மோள்+கு +அம் > (மோட்கம்)> மோக்கம் > மோட்சம்.
மோள் என்பது மேல் என்பதன் திரிபு. கேரளத்தில் இவ்வழக்கு உள்ளது. மேலுலகு என்பது பொருள்.
இதைப்பற்றிய முழு நீள இடுகை நீக்கப்பட்டுள்ளது. சுருக்கமான செய்தி மேற்கண்டபடி.
மறுபார்வை பின்.