வரிக்கு வரி அழகு வெளிப்படும்படி ஒன்றை விரித்துரைத்தலும் வக்கணை எனப்படும்.
வரிக்கு வரி + அணி > வரிக்கணி > வக்கணி > ( இவ்விடத்து வினைச்சொல்லாகி ) வக்கணித்தல் எனவாகி, அழகுரைத்தல் என்ற பொருளிலும் இச்சொல் வரும். இதனை உபசாரம் என்றும் சொல்வர்.
இறைவன்பால் உண்மையான அன்புவைத்தலால் அன்றி வெறும் வக்கணையால் இன்பமில்லை என்பார் தாயுமான அடிகளார்.
வக்கணை தன் ஐகார விகுதியை விட்டு வக்கணம் என்றும் வருதலுண்டு.
வற்கண் > வற்கணி > வக்கணித்தல் ஆகி, வினைச்சொல் ஆவது, ஒரு+கண்+இ > ஒருக்கணித்தல் ( ஒருக்கணித்துப் படுத்துறங்கு ) என்பதுபோலும் சொல்லாக்கம்.
ஆணித்தரமாக ஒன்றை விளக்குதல் என்ற பொருளில், வன் + கண் + அம் > வற்கணமென்பது திரிந்து வக்கணம் என்றுமாகும் எனவும் அறிக.
இச்சொல் பல்வேறு புனைதிரிபுகளால் பல்வேறு பொருட்சாயல்கள் உடைத்தென்று அறிக.