ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மடிக்கணினித் தமிழ் அலைபேசியில் தவழ்கிறது

மடிக்கணினி செய்கின்ற வேலை எல்லாம்
மணிப்பேசி செய்முனைப்புக் காலம் காணீர்
பொடிப்பேழை முன்னேற்றம் கண்ட யர்ந்தோம்
பொன்னான காலமிதில் சங்கம் இல்லை!
இடியப்பம் பிரியாணி ஆகும் மாற்றம்
இக்காலப் பிறழ்வாகும் தக்க தொன்றே;
முடிமன்னர் குடிவாழ்த்தும் அன்னை இன்று
முன்சென்றாள் தன்மகிழ்வுக் கெல்லை உண்டோ?

சனி, 4 ஜனவரி, 2020

நிந்தனையும் நீயெனலும்

( இவ்விடுகையில் ஒரு பகுதி காணாமற்  போயிற்று.  ஆகவ பின் எழுதிச் சேர்க்கப்பட்டவை இதில் உள்ளன. ச்   அதன்பின் காணாமற் போனதும் கண்டுபிடிக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளது எனினும்  அப்பகுதி தனியாக வெளியிடப்படும்.  அதாவது இங்கு சேர்க்கப்படவில்லை. கள்ள மென்பொருள் நுழைவும் கடவாணைபெறார் புகவும் அறிந்து வருந்துகிறோம். )

Inconvenience to readers regretted.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

TEXT OF THE POST.

நம்மினும் மூத்த பெருமக்களை , முன்நின்று உரையாடும் போது -   நீங்கள் என்றுதான் சுட்டவேண்டும்; "நீ" எனல் பணிவு  அல்லது மரியாதைக் குறைவு என்பது நம் பண்பாட்டு விதியாய் உள்ளது.

இப்பண்பாட்டு விதியினின்றே நிந்தனை என்னும் சொல் தோன்றியுள்ளது.

மூத்த பெருமக்களில் ஒருவர் நீ என்று குறிப்பதை இழித்தலுக்கு ஒப்பாகக்  கரு
தினார். பிறரும் அன்னர்.

இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் பிற இனத்தாரிடமும் காணப்படுகின்றன.  மலாய் மொழியில் "லூ"( நீ)  எனலாகாது. முன்னிலைப் பணிவை 'அண்டா"  என்று  தான் சொல்லவேண்டும்.  வயதிற் குறைந்தோர் பெரியோர்முன் செல்லும்போது குனிந்தவாறு பணிவினைத் தெரிவித்துக்கொண்டுதான் கடந் து செல்ல வேண்டும்.

நீ என்ற சொல் ஒரு  து விகுதிபெற்று முதனிலை குறுகி " நிந்து" என்றாகி,  பின்னும் ஒரு வினைச் சொல்லாக்க    விகுதியாகிய "இ" என்பதை மேற்கொண்டு நிந்தி என்றாகி நிந்தித்தல் ஆனது.

நிந்தனை என்பது  'நிந்தி' + அன் + ஐ' என்பன புணர்வுற்ற சொல்.  அன் என்பது இடை நிலை ஆகும்.

நீ  என்பதென்ன?  தன்னின் நீங்கிய நிலையே "நீ"  ஆகும்.  நீக்கக் கருத்து.
இதிலிருந்தே பேசுவோன் தன் பண்பினின்றும் நீங்கியதையும் தான் இழிந்ததையும் பிறரை  இழித்ததையும் குறித்துப் பொருள் விரிந்தது.

இதேபோல் "நம்"  என்பதிலிருந்து நம்பு என்ற சொல் தோன்றியதும் காண்க.

ஒப்பீடு: (சொல்லமைப்பு)



நாம் > நம் > நம்பு (வினையாக்க விகுதி "பு") > ( நம்புதல்)
நீ > நின் > நிந்து ( து விகுதி ) > நிந்தி ( இ வினையாக்க விகுதி) > ( நிந்தித்தல் ).



பிறனின் எண்ணத்தைத் தனதாக்கி (நமதாக்கிக்) கொள்ளுதலே நம்புதல். நம்புதல் என்ற சொல்லமைந்தபின் கருத்தமைப்பில் ஒருமை ( தான் ) பன்மை ( நாம் ) என்பன தேவையற்றவை. தேவையானது நாவுரையைச் செவிப்பட்டார் ஏற்பு என்பதொன்றே.



சந்தித்திரிபுகள்:



நின்+து > நிந்து என்பதும் புணர்ச்சியில் பின் > பிந்து > பிந்துதல், முன்> முந்து> முந்துதல் என்பனவற்றின் அமைப்பைப் பின்பற்றியவேயாம்.  முன்> முந்து > முந்திரி, மன் > மன்+ து + இரு + > மந்திரி ( அரசனுடன் நிரந்தரமாய் நின்று ஆலோசனை வழங்கும் பெரிய அலுவலர் ) என்பன காண்க. மன்னுதல் - நிலையாய் இருத்தல். முன்னுதல் பின் மன்னுதலாய்த் திரிந்தது என்றும் அறிஞர் கூறியதுண்டு. சில் > சின் > சின்+து > சிந்து ( சிறு கவி )( சிறு நூல் நெயவு என்றும் கூறுப) என்பதுமது. பல் ( பலர் ) + தி > பன் தி > பந்தி ( பலர் உண்ணும் நிகழ்வு ) என்பதும் அறிக.



நின் + தி : நின்னை ( உன்னைத்) திட்டுதல் என்று சொல்லவும் வழியுள்ளது.


வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஊரும் பேரும். ( கிராமம், காராகிரகம், கிரகம், கிருகம், நத்தம் பிறவும்)


  1. முன் காலங்களில் வெளிச்சமும் காற்றுவசதியும் இல்லாத அறைகளில் கைதிகளைப் பூட்டிவைத்தனர் என்று அறிகிறோம்.   அதனால் காராகிரகம்" என்ற சொற்புனைவு தோன்றிற்று.  இது:


கார்  +  ஆகு + இரு + அகம்

என்னும் நான்'கு சிறு சொற்கள் இணைந்த புனைவு ஆகும்.

கார் :  கருப்பு.    கரு என்பது  கார் என்று திரியும்.  கார்முகில் என்பதுகாண்க.
ஆகு என்பது ஒரு வினைச்சொல்.
இரு  ( இருத்தல், வினைச்சொல்)
அகம்  - இடம், வீடு.

இச்சொல்லிலிருந்து  "கிரகம்" என்ற சொல்லைத் தனிச்சொல்லாக்க ஓர் உந்துதல் வந்தது..

இருக்குமிடம் என்னும் பொருளில்  இரு+ அகம் = இரகம் என்பது கிரகம் எனத் திரிதற்கு இஃது வழிவகுத்தது.

கிரு +  அகம் >  கிரு+ கம் >  கிருகம்  என்பது இன்னொரு புனைவு.

மா+ உலகம் என்பது   மா+ கம் என்று பகவொட்டு ஆனது.   மாக விசும்பு : விண்வெளி,    மா உலகம் என்பதில்  உல என்பது களைவுற்றது.

மக்கள் இருப்பதற்கு இடம் என்னும் பொருளில்   இரு+ ஆகும் + அம்  =  இரு+ ஆம் + அம் =  இராமம் > கிராமம் என்றுமாகும்.

பண்டைத்தமிழில்  "கம்"  > கமம் என்பதும் கிராமம் அல்லது சிற்றூர் குறித்தது.

க என்பது கிர என்று அயலில் திரியும்.

க > கிர > கிரா > கிராமம் என்று திரிதலும் கூடும்.  கமம் > கமா என்பது "காமா" என்று சிங்கள மொழியில் திரிந்தது.  கத்ரிகாமா.  இன்னும் "கதிர்காமம்". இராமம் என்பது கிராமம் என்றுமாதல் கூடும்.  ஆதலின் இது இருபிறப்பிச் சொல்

கம்+ போங்க்  என்ற தென் கிழக்காசியச் சொல்லிலும்  கம் உள்ளது.

புகுதல் என்பது மணமாகிப் புகுதல் அல்லது சென்று வாழ்தல்.

புகும் கமம்  >   கம் + புகும் > கம்பூங்க் > கம்போங்க் என்பது மறுதலைப் புனைவு.

கம் என்ற பழஞ்சொல்,   கண் >  கம் என்று விளைந்த சொல்.  கண் என்பது இடம்.  ண்>ம் ஆதல் மட்டுமின்றி,  கண்> கணம் , இடைக்குறைந்து  கம் என்றுமாகும்.  ஆதலின் கம் என்பது தமிழே   ஆகும்.

பல தென் கிழக்காசிய மொழிகளில் மண்டிங்க்  அல்லது திராவிட  ( தமிழ் இனமொழி) ச் சொற்கள் உள்ளன என்று பிறரும் கருதியுள்ளனர்.  ( வின்டர்ஸ் என்னும் ஆய்வாளர் உரை).

தவளை என்ற சொல்லும் தென் கிழக்கு ஆசியாவில் வழங்கும்.  தாவு + அளை = தவளை,  நெடிற்குறுக்கம்.  தோண்டு> தொண்டை,  சாவு > சவம் , கூம்பு > கும்பம்,  கூடு >  குடும்பு, குடும்பம்;  கூவு > குயில்,   காழ் > கழுதை  என்பன காண்க.

குமரி> குமர் > கிமர்  .

கம் + புகு + சி + யா > கம்பூச்சியா.   ( எ-டு:  பகு> பா:   பகுதி > பாதி)

கிராமம் போட்டு வாழ்ந்தவர்கள்:  கம்+போடு+ சி + யா>  கம்போட்சியா > கம்போட்ஜா.

குமரிக் கடல்கோளில் தப்பிச்சென்று கமம் அல்லது கிராமம் போட்டவர்கள். ( என்பர்).

நத்தம் என்பது ஓர் ஒட்டுக் கிராமம்.  பல வசதிகளும் உள்ள பெரிய கிராமத்தை ஒட்டியுள்ள சின்னஞ் சிறு ஊர்.  நத்துதல் - ஒட்டியிருத்தல்.

நத்து > நத்தை.
நத்து > நத்தம்.  (ஊர்ப்பெயர்:  இடையநத்தம்).

நத்தி வாழ்தல் >  அண்டி வாழ்தல்.

தண்செய் > தஞ்சை (ஊர்பெயர்).   ஆற்றுப்பாய்ச்சலால் தண்மை பெற்ற ஊர்.   செய் என்பது நிலம்.  நன்செய், புன்செய் முதலிய காண்க.
ஆனால் அங்கு அரசனின் மரணதண்டனை பெற்ற கைதிகளுக்கு  அது தம்+ சாவு+ ஊர் = தஞ்சாவூர்  ஆய்விடும்.( சோழப்பேரரசர்கள் காலத்தில்)

அடுத்து உரையாடுவோம்.


  • தட்டச்சுப் பிழை  காணின்  - பின் திருத்தம்.