இருக்கிறான் இருந்தாள் முதலிய முற்றுக்களில் முன்நிற்கும் இரு என்னும் வினை இன்று இடம் குறிக்கும் உருபாகவும் இல்லம் குறிக்கும் சொல்லாகவும் உள்ள "இல்" என்பதினின்று வந்தது என்பதே முடிபு ஆகும்.
இல் > இரு. (வினைச்சொல் : இருத்தல்).
இடமென்ற சொல்லும் இடு என்பது மிகுந்தானதே ஆகும். இடு + அம் = இடம் என்பதறிக. இஃது அம் என்னும் விகுதியேயன்றி ஐ என்னும் விகுதியும் (<மிகுதியும்) பெறும். இடு + ஐ = இடை. அப்போது இரு இடங்கட்கு இடைப்பட்டது - நடுவிலது - என்றொரு சிறப்புப் பொருளையும் உணர்த்தவல்லது. தமிழின் ஏனை இனமொழிகளில் (திராவிட மொழிகளில் ) இஃது இடம் என்றே பொதுப்பொருள் கொண்டிலங்கு மென்பதும் அறிக.
இடைபடுதல் ("மூக்கை நுழைத்தல்" என்பது அணியியல் வழக்கு) என்ற வினைச்சொல்லும் உளது. இடைப்படுதல் என்பது இடையே வந்திருத்தல் என்பதுபோல் பேச்சில் வருதல் அறியலாம்.
இடு > இரு என்பவற்றின் அணுக்கமும் உணர்க. மடி > மரி என்பது போலவே இத்திரிபுமாம்.
ஒன்றினோடு இன்னொன்று (வந்து) இருக்குமாயின் அது ஒன்றிற்கு அடுத்த
" இரு " அல்லது இரண்டு ஆகும். இருத்தல் என்ற வினையடியாகவே இரண்டிற்கும் எண்ணுப்பெயர் வந்துள்ளது காணலாம். ஒன்றை அண்டி இருப்பதே இரு+ அண்டு = இரண்டு ஆகும். அண்டி இரு ( ஒன்றை அண்டி இரு) என்பது முறைமாற்றிச் சொல் அமைந்துள்ளது. இவ்வாறு சொல் அமைத்தல் பிற்காலத்தில் பல சொற்களில் பின்பற்றப்பட்டுள்ள முறையாகும். தொல்காப்பியனார் காலத்திலே " தாரம் தப்புதல்" ( மனைவியை இழத்தல் ) என்பது " தப்பு + தாரம் " > தபுதாரம் என்று குறிக்கப்பட்டது. ( தப்பு > தபு என்பது தொகுத்தல் அல்லது இடைக்குறை). அவிழ்க்கும் இரு கைகளை உடைய பெண்டிரின் சட்டை, இரு+ அவிழ் + கை > இரவிக்கை ( ழகர ஒற்று இடைக்குறை) ஆனது காண்க. நிறுவாகத்தைக் காக்கும் இல்லமானது : கா + இல் > இல்+ (ஆ) + கா = இலாகா ஆனது திறமையே. பலராலும் உணர்ந்திட முடியாத மறைவுப்புனைவு ஆகுமிது. { இல்லம் ஆகும் காப்பதற்கு > இல் ஆ கா}
ஆசு பட இருக்குமிடம் : இரு+ ஆசு + இ = இராசி. இதுவும் முறைமாற்றுப் புனைவே. கிரகம் - கிருகம் என்பது இரு+ அகம் > இரகம் > கிரகம் அன்றி வேறில்லை. இரகம் என்பது சிரகம் என்று மாறிப் பின் சி என்பது "கி" ஆகி, கிரகமானது என்று விளக்கினும் அதுவே. இராசிநாதன் இருக்கும் இடமே இரு அகம் > கிரு அகம் > கிரகம். ( இறகு > சிறகு ).(சேரல் > கேரளம்)
ஆசி என்பது நன்மை நடக்குமாறு பற்றுக்கோட்டினை வழங்குவதே. ஆசீர் என்பது சீராகுக என்பதன் முறைமாற்றுப் புனைவு. இதன் ரகர ஒற்று மறைந்து ஆசி ஆனது. ஒரு முண்டு ( துண்டு, துண்டுத்துணி) தலையினை ஆசுபடப் பற்றி நிற்க, அது முண்டாசு ஆகும். ஆசீர்வாதம் என்பதில் வாதம் என்பது வாதநோயைக் குறிக்காது. வருக தமக்கு ஆகும் சீர் என்பது வாக்கியம். இது ஆ + சீர் + வா + தம் ஆனது. வா = வருக; தம் = தமக்கு; ஆ = ஆகும் ; சீர் = நன்மை.
ஆகும் சீர் : ஆசீர், இது ஆகு + ஊழ் = ஆகூழ் என்ற பழம்புனைவு போன்றது. ஆகுபெயர் என்பது இலக்கணக் குறியீடு.
வட்டமாகவோ நான்மூலையாகவோ மாவால் உருச் செய்து அதை சுடுகல்லில் ஒட்டி எடுப்பது: உரு+ ஒட்டி = உரொட்டி > ரொட்டி. இது வேறுவழியிலும் விளக்குறலாம் ஆகையால் இருபிறப்பி ஆகும். வகர உடம்படு மெய் சொல்புனைவில் வேண்டியதில்லை. சொல்லுருவில் துய்யது உரு+து மொழி, அரபு கலந்தமையின். து விகுதி எனினும் ஒக்கும். படைவீடுகளில் பேசப்பட்டது என்பது கதை. தெற்குக் கணத்தில் வழங்கிய மொழி தெற்காணம் = தெக்காணம், > தக்காணம் > தக்காணி.
பல்வேறு சொல்லாக்க முறைகளை அறிந்தோம்.
எழுத்துப் பிசகுகள் பின் திருத்தம்பெறும்