செவ்வாய், 8 மே, 2018

திருநீறும் விபூதியும்.

விபூதி என்னும் சொல் வேறு வழிகளிலும் சிலரால் விளக்கப்பட்டுள்ளது. இது தமிழிலும் வழங்கும் சொல்லாகும்.   இதனை இன்று தமிழின் மூலம் உணர்வோம்.

இதற்கு மற்றொரு பெயர் திருநீறு என்பதாகும்.  எரிந்து முடிந்தபின் கிடைப்பது நீறு எனப்படும்.

தகரமும் சகரமும் ஒன்றுக்கொன்று நிற்பதுண்டு.  தனித்தன்மை வாய்ந்த கோளாகிய சனியின் பெயர்   இப்படி அமைந்தது  ஆகும்:

தனி >  சனி.
தட்டு > சட்டம்.  ( சகரத்தில் மாறி விகுதி பெற்றது).
தம் பற்று >  சம்பத்து.   (தாம் பற்றி வைத்திருப்பவையே ஒருவனுக்கு சம்பத்து)

இங்கு  காட்டிய வற்றுள் ச-த திரிபு உணர்த்தப்பட்டது.

எனவே:

விழுமிய  பூச்சு  :  விழு+ பூசி > விழுபூதி. > விபூதி.

திருநீறணிதல் உயர்கொள்கை ஆனபின் இச்சொல் படைக்கப்பட்டது.
நீறிலா நெற்றி பாழென்பது தமிழர் கொள்கை.  நீறு பூசுதல் விழுமிய பூச்சு ஆகும். விழுமிய =  சிறந்த.

Malaysia elections - pages unresponsive.

Malaysia elections tomorrow.

Certain functions are not responding.

Will try posting later.

Postscript:  Our blog was also jammed. The perpetrators achieved this by deleting the .dll files of the browsers you used to connect to their websites.

திங்கள், 7 மே, 2018

குழந்தையைக் கற்பழிப்பார்க்குத் தூக்கு சரியானது.

ஊர்வசிகள் அரம்பையர்தாம் தோற்றுப் போகும்
ஒப்பற்ற அழகுடையார் எப்போ தும்தான்
பார்வையிலே படங்கள்தரும் காட்சி தம்மில்
பார்க்கின்றார் சுவைக்கின்றார் பழங்கள் யாவும்
ஆர்கைக்கும் கிட்டாவோ என்ற  சந்தே
அடுத்தவீட்டில் எதிர்த்தவீட்டில் பாவப் பட்ட
நேர்சிறிய பெண்குழந்தை தம்மேல் பாய்ந்து
நீள்நரகக் குறுஞ்செயல்கள் நிகழ்த்து கின்றார்.

வன்புணர்வு மேற்கொள்வார் அவர்க்குத் தூக்கு
வாய்ப்பதுதான் சரியான ஒறுத்தல் என்று
துன்(பு)ணர்ந்த சட்டத்தால் நாட்டில் நன்மை
தோன்றுவதும் கைகூடும்; தீமை தோய்ந்த
கண்ணிருந்து மன்பதையைக் கருகச் செய்யும்
காளையரால் காய்க்குமொரு நன்மை உண்டோ?
புண்வளர்ந்த முகத்தவர்கள் புவியின் நீங்கிப்
போயினிந்த நோயழியும் மே வும்   நன்றே!

அருஞ்சொற்கள்:
என்ற சந்தே -  என்று அசந்தே.
ஒறுத்தல் = தண்டனை;
துன்பு -  துன்பம்
மன்பதை =  சமுதாயம்.
காய்க்கும் -  உண்டாகும்.
நன்றே - நன்மையே.
வன்புணர்வு = கற்பழிப்பு.