http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_9.html
சந்தேகம் என்ற சொல்லுக்கு வேறு சொற்கள் தந்துள்ள இடுகைகள் இங்கு
உள்ளன. அவற்றை இன்னொரு வாட்டி படித்துக்கொள்ளுங்கள்.
http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_9.html
http://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_89.html
http://sivamaalaa.blogspot.com/2013/07/blog-post.html
http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_9.html
http://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_89.html
http://sivamaalaa.blogspot.com/2013/07/blog-post.html
வாட்டி - தடவை -
முறை. படி : மறுபடி.
திடமான பொருள் என்றால் கட்டியாக இருக்கும்.
திடமில்லையேல் கூழ்போல் மென்மையாகிவிடும்,
இதை நல்லபடியாக உணர்ந்த நம் முன்னோர்,
மனம் கூழ்போல் ஆன நிலையைக் கண்டு, சந்தேகித்தல்
என்பதற்குக் கூழ்த்தல் என்ற சொல்லையும் வழங்கினர்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைத்
தீர்மானிக்க இயலாமல் என் மனம் கூழ்த்தது என்றொரு வாக்கியத்தை நாம் புனைந்தளிக்கலாம்.
தீர்மானிக்க இயலாதோனுக்கு மனம் என்றும்
கூழ்த்துக்கொண்டுதான் இருக்கும்.
சந்தேகம், ஐயம், அயிர்ப்பு, கூழ்த்தல்
என இச்சொற்களையெல்லாம் உங்கள் மாணாக்கருக்குச் சொல்லிக்கொடுத்து அவர்களின் தமிழறிவை விரித்தின்புறுங்கள்.
மனம் கூழ்த்தது என்னாமல் குழம்புகிறது
என்றும் சொல்லலாமே!
குழ > கூழ்.
இருகுறிலொட்டுச் சொல் நீளும்போது இறுதி உயிர்மெய் ஆகிய ழகரம் ழகர ஒற்றாக மாறிவிடும்.
இப்படி மாறும் இன்னொரு சொல்லைக் கண்டுபிடித்து
ஒரு போட்டியாய் நில்லுங்கள். தமிழ் வளரும்.
பழ~யதானது பாழ் ஆகிவிடுகிறது. பழையது.
பழ > பாழ்.
எச்சவினைக்கும் வினைச்சொல்லுக்குமிடையில்
இத்தகு தோற்றமிருக்கும்.
விழ > வீழ்.
இது போதுமானது. இறுக்கி மூளைக்குள்
ஏற்றி மகிழ்க.
குழ> குழவி.
குழ > குழந்தை
குழ > குழகு.
இது மிக்க மென்மையான அழகு.
குழ > குழகம்
குழ > குழப்பம்
குழம்புதல்.
குழ > குழறுதல்.
குழ > குழை > குழைதல்
குழ > குழைச்சு
bone joints
குழ > குழைபு ( அழுந்து
)
குழ > குழையாணி. HAIR CLIP.
குழைக்கவை.
கூழ்ப்பு எனற்பாலது தொடர்பாக ஏனைச் சொற்களையும் சிந்தித்துப் பொருள் தொடர்புகண்டு உங்கள் சொற்றொகுதியை விரிவாக்கிக்கொள்ளுங்கள்.