வியாழன், 25 ஜனவரி, 2018

சினை என்னும் சொல் சுட்டடி அமைப்பு



இன்று சினை என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

சினை என்பது தொன்றுதொட்டு தமிழ்ச்சொல் என்று கருதப்பட்டு வருகின்ற சொல் ஆகும்.   இதனுடன் ஒலி ஒற்றுமை உடைய சொல் உலகில் பிறமொழிகளிலும் கிடைக்கலாம்.

மலேசியாவில் சீனாய் என்று ஒரு தேய்வைத் தோட்டம் உள்ளது.  ஆனால் தமிழ்ச்சொல் சினை என்பது இந்தச் சீனாய் என்பதினும் வேறுபட்ட சொல் என்று தோன்றுகிறது.  இஸ்ரேலில் சீனாய்க் குன்று உள்ளது. ஏதும் தொடர்பு உள்ளதாகத் தெரியவில்லை.   சினை என்பதை ஆங்கில எழுத்துக்களால் எழுதினால் Sinai என்றுதான் பெரும்பாலும் எழுதவேண்டியுள்ளது.  குழப்பம் நேரலாம்.  Si   என்பதும்  nai  என்பதும் சீன மொழியிலும் உள்ளது.  இவற்றின் தொடர்பை ஈண்டு ஆராயவில்லை.  உங்களுக்குத்  தேவையானால் நீங்கள் ஆராய்ந்து முடியுமானால்  எமக்கும் தெரிவியுங்கள்.

இவை நிற்க:

சினை என்பது தமிழில் உறுப்பு என்று பொருள்படும் சொல். பேச்சில் பெரும்பாலும் இது விலங்கு வயிற்றில் குட்டி உடையதாய் ( கருவுற்றிருப்பதாய்) உள்ள நிலையைக் குறிக்கிறது.  இலக்கணத்தில் சினைப்பெயர் என்று ஒரு வகையும் உள்ளது.  கை, கால், தலை என்பவை சினைப்பெயர்கள். இவை உறுப்புகளின் பெயர்கள்.

இனிச் சொல்லை ஆய்வு செய்வோம்.

சின் -   சிறியது.
ஐ = அய் = அ.   இது சுட்டுச் சொல். அங்கிருக்கிறது என்று பொருள்படும்.

சுருங்கச் சொன்னால், இந்தத் தமிழ்ச்சொல், சிறியது அங்கு (  உள்ளில் ) இருக்கிறது என்று பொருள்படும் அழகிய சொல்.

சின் என்பது இன்னும் வழக்கில் உள்ளது.  சின்னையா என்ற பெயரில் அது உள்ளது.  சின்னப்பையன் என்பது இன்னும் காதில் விழும் தொடர்.  ஒன்றைப் போல சிற்றளவினதாக வரையப்பட்டதை இன்றும் சின்னம் என்`கிறோம்.  மின்னல் சின்னம்; இலைச் சின்னம் எல்லாம் தேர்தலில் பயன்படுவன.  இப்படிச் சிற்றளவு என்று தொடக்கத்தில் குறித்த சொல் பிற்காலத்தில் பெரிய அளவினதையும் குறிக்க வழங்கி நாளடைவில் பொருள் விரிவு அடைந்தது என்று அறிக.

சின் என்ற சொல் அடி,   சில் என்பதிலிருந்து வருவது. சொல் வரலாற்றில் லகரம் முன்னது.  னகரம் பின்னது என்று அறிக.  எடுத்துக்காட்டாக வள்ளல், இளவல், அண்ணல் தோன்றல் என்பன காண்க.  அல் என்பது அது என்று பொருள்படுவது.  செயல் : செய்யும் அது. இது பிற செமித்திய மொழிகளிலும் உளது.  அல் கைதா தீவிரவாதிகள் என்`கிறோம் அல்லோமோ?   இது பின் அன் என்று திரிந்துவிட்டது.  சுழியன்; சூடன்.  இது பின் அம் என்று திரிந்தது:  அறம் திறம். செமித்தியத்தில் அல் முன்னும் தமிழில் பின்னும் இணையும்.

சில சொற்களில் இம்மூன்றும் உள்ளது,  திறல் திறன்  திறம்.

இனிமைத் தமிழைப் படித்தும் பேசியும் இன்புறுங்கள். இன்னும் பல கூறலாம் எனினும் இனி வரு நாட்களுக்கும் வைத்திருப்போம் கொஞ்சம்.

பிழைகளையும் கூடுதலாகக் கள்ள மென்பொருள்கள் புகுத்தும் தொல்லைதரு புள்ளிகளையும் மீண்டும் வந்து கவனிப்போம்.

திங்கள், 22 ஜனவரி, 2018

பாணன் பாணினிக்குச் சிவபெருமான் கற்பிப்பு


Å¢¨¼Ô ¨¸ò¾Åý À¡½¢É¢ì ¸¢Ä츽õ §ÁÉ¡û
ż¦Á¡ Æ¢į̀Ãò ¾¡íÌ þÂø Á¨Ä Á¡ÓÉ¢ìÌ
¾¢¼Ó Úò¾¢Âõ ¦Á¡Æ¢ì¦¸¾¢÷ ¬ì¸¢Â ¦¾ý¦º¡ø
Á¼Á ¸ð¸íÌ ±ýÀÐ ÅØ¾¢¿¡ ¼ý§È. (thiruviLaiyaadalpuraaNam 87)

ż¦Á¡Æ¢ìÌ þÄ츽õ ±í¹Éõ ¸¢ðÊÂÐ? ¾¢ÕÅ¢¨Ç¡¼ø Òá½õ À¡Ê ¦ÀÕõÒÄÅ÷ ÀÃ狀¡¾¢ ÓÉ¢Åâý ¸ÕòÐôÀÊ ¦¾ýÉ¡ðÊÄ¢Õó§¾ À¡½¢É¢ ¸üÚ즸¡ñΠż¦Á¡Æ¢ìÌ þÄ츽õ «¨Áò¾¡Ã¡õ. «ÅÕìÌ þÄ츽ò¨¾î ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾Å§Ã ¾Á¢ú츼×Ç¡¸¢ö º¢Å¦ÀÕÁ¡ý ¾¡É¡õ. þý¨È ºÁЏ¢Õ¾ ÅâÅÊ×õ ²¨É þ󧾡 ³§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸û §À¡Ä¡Ð "«, ¬, þ, ® ±ýÚõ ¸, º, ¼ " ±ýÚ «¨ÁóÐûÇÐ, "², À¢, º¢, Ê" ±ýÚ «¨ÁÂÅ¢ø¨Ä ±ýÀÐõ ¸ÅÉ¢ì¸ò ¾ì¸¾¡Ìõ. ´Õ§Å¨Ç ÀÃ狀¡¾¢Â¡÷ ¬Ã¡öóÐ ¸ñ¼¡§Ã¡ ±ýɧš? «Å÷ À¡¼¨Äî ͨÅô§À¡õ.


குறிப்பு:  பாணினி என்ற சங்கதப் புலவர்,   சமஸ்கிருதத்துக்கு முந்திய அம்மொழியின் வடிவத்துக்கு இலக்கணம் இயற்றினார்.  அவர் பாணர் என்பதை இங்கு யாம் முன்னர் வெளியிட்டுள்ளோம்.  பாண்> பாண்+ இன் + இ  > பாணினி என்பது அவர் சாதியின் அடிப்படையில் எழுந்த பெயர். இயற்பெயர் தெரியவில்லை.  அவர் பஞ்சாப்பில் இருந்தவர் என்பது வெள்ளையர் கூறுவது: ஆனால் ஆதாரம் இல்லை. அந்தக் காலத்தில் இமயம் சென்று   " இமய வரம்பன்" என்று பெயர் சூட்டிக்கொண்டவன் தமிழன். தமிழ் இலக்கியத்தில் ஆதாரம் உள்ளது,  ஒருசிலர் தவிரப் பிற வெள்ளையர்க்குத் தமிழ் தெரியாது. பாணினி என்பது அவர் தமிழ்ப்பாணர் என்றே காட்டுகிறது.

குறிப்புக்கு முன்னுள்ளது 7.11. 2005 ல் யாம் எழுதியது.  அறிந்து மகிழ்க.

ேலும் ித்ுண:-

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_7228.html 

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_7228.html

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

உருத்திராட்சத்துக்கு இன்னொரு பெயர்



உருத்திராட்சத்துக்கு மற்றொரு பெயரை இன்று அறிந்துகொள்வோம். பெயரை அறிதலுடன்,  அப்பெயரின் அமைப்பையும் அறிதற்கு இன்றே வாய்ப்பும் ஆகும்.

உருத்திராட்சம் என்பது  உருப்போடும் போது அதன் எண்ணிக்கையை அறிவதற்கு ஒரு மாலையாகக் கோத்த  சிறிய உருளைகளை விரல்களால் உருட்டி அல்லது நெருடி ( " நிரடி"  ) எத்தனை சொல்லிவிட்டோம் என்று அறிந்துகொள்வதற்கான கருவியாகும்.  இதைச் சுருக்கியும் இன்னும் நன்றாகவும் வரையறவு செய்யலாம் எனினும் இது விளக்கத்தின்பொருட்டு கூறப்படுவதாதலின் இத்துடன் அமைவோம்.

இங்கு முன் நிற்கும் சொல் உரு என்பதுதான்.  ஆனால் உரு என்பது உருத்தல் என்ற வினைச்சொல்லினின்று மேல்வருவதாதலின், தோன்றுதல் என்று பொருள்கொள்ளலாம்.  ஆனால் உருப்போடுதல் என்ற உலக வழக்குச் சொற்றொடரில்  இது எப்படிப் பொருந்துகிறதென்று சிந்திக்கலாம்.

மண்ணாலோ மாவினாலோ அல்லது உகந்த பிறவாலோ ஓர் உருவை அமைத்து அதற்கு மந்திரங்கள் சொல்லிப்  பூவையோ ஏற்ற பிற பொருளையோ அதன்முன் சொரிந்து ஒரு குறிப்பிட்ட தொகையில் முடிப்பது “ உருப்போடுதல்” என்று கூறலாம்.  ஆனால் இதை உருத்திராட்சம் இன்றியே செய்யக்கூடுமே.

சொல்லும்போது சிற்றுருளைகளைத் திரட்டுதல் என்ற செயலுக்கு உரு என்பதை உருளை என்ற சொல்லின் கடைக்குறையாகக் கொள்வதே சரியாகும்.

அதாவது உருளைத் திரட்சி என்பதிலிருந்து அமைந்ததே உருத்திராட்சம்
திரள் > திரள்+சை > திரட்சை > திரட்சம் > திராட்சம்.
சை :  விகுதி;  அம் :  விகுதி.

(திரள் > திரட்சை > திராட்சை  என்னும் கொடிமுந்திரிப் பழத்தின் பெயரும்  ஈண்டு கவனிக்கத்தக்கது ).
திரளாகக் காய்ப்பது திராட்சை.

ஐ என்ற ஆதி விகுதி/ எழுத்து,  பல்வேறு மெய்களிற் சென்றேறி,  கை, சை, ஞை, டை, தை, பை, மை, யை, ரை,  லை, வை, ழை, றை, 0னை என விகுதியாகவும் சொல்லிறுதியாகவும் வருமென்பதை அறிக.

ஐயீற்றை அம் எதிர்கொள்ளின், ஐ வீழும். மெய் மட்டும் அம்முடன் புணரும்.
வீழாமலும் சொல்லமையும்.  எ-டு:  இணையம்.   இது நிற்க:

உருத்திராட்சத்துக்கு மற்றொரு பெயராவது:  தாவடம் என்பது.

வடம் எனின் ஈண்டு கயிறு என்றோ வட்டம் என்றோ பொருள்தரும். இதன் அடிச்சொல் வள்.  வள் > வடு > வடம்;  வட்டமும் ஆம்.  வடம் என்பது வட்டம் என்பதன் இடைக்குறையாய் வட்டமென்று பொருள்தரும் எனினுமது.

கழுத்தின் பின்பகுதியில் இருந்து நெஞ்சு வரை தாழ்ந்து தொங்குதலை உடைமையால்,  உருத்திராட்சம் தாவடம் ஆயிற்று. இங்கு ழகரம் கெட்டது.

பிறசொற்கள்: ஒப்பிடுக:-

தாழ்வணி >  தாவணி > தாமணி.
அல்லது தாழ் > தா > தா+அணி = தாவணி எனினுமாம்.

தாழ் வரம் >  தாவரம் ( தாழ முளைத்து வளர்வன ஆகிய செடி கொடிகள் .)

தாழ்வாரம் > தாவாரம் ( பேச்சுத்திரிபு)

உருத்திராட்சம் = தாவடம். ஆயின்; வெவ்வேறு அமைப்பின ஆகும்.

ழகர ஒற்றுக்கள் பெரும்பாலும் கெடும்.  எடுத்துக்காட்டுகள்:

வாழ்த்தியம் > வாத்தியம்.
கேழ்வரகு > கேவரகு > கேவர் (பேச்சு வழக்கு).
தாழ்ப்பாள் > தாப்பா. (" )

திரிதல்:

வாழ்நாள் > வாணாள்.

திருத்தம் : மறுபார்வை.

கவனம்: கள்ளமென்பொருள் புகுத்தும் வேண்டாப்புள்ளிகள்.