செவ்வாய், 19 டிசம்பர், 2017

இந்தியத் தற்காப்புப் படைகள்



தற்காப்புத் தொடர்பானஇந்தியாவின் நாடாளுமன்றக் குழு எழுபது ஆண்டுகட்குப் பின் இப்போதுதான் திடீரென்று விழித்தெழுந்து முப்படைகளிலும் பலவிதத் தட்டுப்பாடுகள் நிலவுதலைப் பறைசாற்றி யுள்ளது.
இன்னும் கொஞ்ச காலத்தில் வானூர்திப் படையின் பல விமானங்கள் பழையனவாகிப் பயன்படுத்த இயலாமல் போய்விடும்.
தற்போதைய நிலையில் போர்மூண்டால் இரு முனைகளிலும் சண்டைசெய்ய 45 வானூர்திப் படையணிகள் வேண்டுமாம். இப்போது 33 படையணிகள் மட்டுமே உள்ளனவாம். இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் வெகுவாகக் குறைந்துவிடுமாம்.
மற்ற தரைப்படை கடற்படைகளிலும் குறைவுகள் பலவுள்ளனவாம்.
தற்காப்பு பற்றி இந்தியமக்கள் அவ்வளவாகக் கவலைகொள்வதில்லை. அதனால் கவனிப்பாரற்ற துறைகளில் தற்காப்பும் ஒன்று.  மந்திரி என்ன செய்கிறார், படைத்தலைவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று அவர்களில் யாரும் கேட்பதில்லை.  எந்த நடிகர் மந்திரி வேலைக்கு வரவிருக்கிறார் என்பதில் அக்கறையுள்ளவர்கள் மக்கள்.
மேலும் அரசின் சலுகைகளைப் பெற பல்வேறு சாதிகளின் போராட்டம் சில மாநிலங்களிலாவது மிக்கத் தீவிரமாகிவருகிறது. சலுகை வரம்புகள் ஐம்பது விழுக்கட்டுக்கு மேலாகிவிடக்கூடாது என்பது இப்போதுள்ள உச்ச வரம்பு என்று தெரிகிறது.
முழுமையாக எல்லாமும் சலுகைமுறையில் ஒழுகிப் போய்விட்டால் பொருளியலும் பாதிக்கப்படலாம்.
இந்தியாவைப்பற்றிய இந்தத் தாளிகைக் கட்டுரை இவற்றை விளக்கமாகத் தெரிவிக்கிறது. படித்து அறிந்துகொள்ளுங்கள்.



Government draws Parliamentary panel fire on military modernisation




கேரளமும் சமஸ்கிருதமும்.



இன்று கேரளம் என்ற சொல்லைச் சிந்தித்து அறிவோம்.


பல மொழிகளில் சே என்பதும் கே என்பதும் ஒன்றுக்கொன்று பரிமாற்றமாக வரும். ஆங்கிலத்தில் பல சொற்கள் சிஎச் என்று எழுத்துக்கூட்டி க என்று ஒலிக்குமென்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனை ஐரோப்பியத்திலும் இங்கனம் வருமென்றாலும் உங்களுக்கு தெரிந்த எளிதான மொழியிலிருந்தே இதை உணர்ந்துகொள்ளுதல் நன்று. 

பண்புநலன் என்று பொருள்படும் கேரக்டர் என்ற ஆங்கிலச்சொல் சேரக்டர் என்பதுபோல் எழுத்தில் தோன்றினாலும் கேரக்டர் என்றே அதை ஒலித்தல் வேண்டும். இது பலமொழிகளிலும் உள்ள அமைப்பு ஆகும்.

ஸி என்ற ஆங்கில எழுத்தின் ஒலி ச என்பதுதான். இது அடுத்து எச் என்ற எழுத்தைப் பயன்படுத்தாமலே இப்போது மலாய் மொழியில் ச என்ற ஒலிப்பைப் பெறும்.   ஓர் ஐம்பது ஆண்டுகட்குமுன் சிஎச் என்று எழுதவேண்டியிருந்தது.  இப்போதுள்ள முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆயினும் சை சீ அல்லது சாய் சீ என்ற சீனத் தொடரை ஆங்கில எழுத்துக்களால் எழுத நேரும்போது ஸி யின் அடுத்து ஓர் எச் போடவேண்டியுள்ளது. மலாய் அல்லாத மொழிகளின் சொற்கள் சிலவற்றை உரோமன் எழுத்துக்களால் எழுதுகையில் மலாய்மொழியில் பின்பற்றப்படும் ஏற்பாடு ஏற்கப்படவில்லை.

இவற்றை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கேரளம் என்ற சொல்லைப் பொருத்தி நோக்கினால் இது சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்ட சொல் என்றே மலையாள நண்பர்கள் கூறவிரும்புவர்.  இப்படிச் சொல்வது இது சமஸ்கிருதத்தின் வழிப்பட்ட மொழியாக அல்லது அதிலிருந்து வடித்தெடுத்த மொழியாக இதை எண்ணுவதுதான் காரணம்.

இத்தகைய கருத்தினால் மலையாளத்திற்கு இந்தோ ஐரோப்பியத் தொடர்பு கிட்டுகிறது; மொழியின் மதிப்பும் கூடுகிறது; ஆகவே இதை விட்டுக்கொடுத்தல் அவர்களுக்கு துயர்விளைப்பதாக எண்ணப்படும்.

கால்டுவெல்லின் ஆராய்ச்சி இதைத் தமிழின் இனமொழி என்று முடித்திருப்பினும் பெயர் கிருதத்திலிருந்தே பெறுதற்குரியதாய் கருதற்கு முனைவர்.

மலையாளிகள் சேரர்கள். சேரம் என்னும் சொல் சேரலம் என்றும் வழங்கும். சேரலம் என்பது கேரளம் என்று திரிந்ததற்கு வியப்படையத் தேவையில்லை. சே என்பது கே என்று திரிந்தது பல மொழிகளில் இயல்பானது. ல ள  திரிபும் மிகுதியாய்க் காணப்படுவதே. பட்டியல் தேவையில்லை. தண்ணீரைத் தண்ணீர் என்று மெய்ப்பிக்க ஓர் அறிவியலாளன் தேவையில்லையே.

Government discretion and legal powers



Newspaper:

Statement: This is a warning against  autocratic rulers.

Comment.   If an applicant has asked for some new benefits not previously authorized by laws or regulations, and the application is not acceded to by a government authority,  that is not being autocratic.

Must your application be always acceded to? You may not have given sufficient reasons or causes.

One has to look for a better word than “autocratic”.