வியாழன், 7 டிசம்பர், 2017

நீலத் திரைக்கடல் ஓரத்திலே என் எஸ் கிருஷ்ணன்

Thursday, August 30, 2012

கலைவாணர் விளக்க வரிகள்



பாரதியாரின் கவிதை பற்றி எடுத்தியம்பத் தனித் திரிகள்  உண்டு. ஆனாலும் பலசுவைக் கவிதைகளையும் நாம் நுகர்ந்து வருவதனால், அவருடைய கவிதை ஒன்றிரண்டை அவ்வப்போது தொட்டிணைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே கருதுகின்றேன்.

நாம் இன்று படித்தின்புறும் அவர் வரிகள் இவை:

நீலத் திரைக்கடல் ஓரத்திலே -- நின்று
நித்தம்  தவம்செய்த குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -- புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.

இந்த வரிகளுக்கு நகைச்சுவை அரசு என்று பெரும்புகழ் வாய்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வரைந்திருந்த சில விளக்க வரிகள்,இலக்கிய நோட்டம் (திறனாய்வு )  என்னும் தகுதிக்கு நன்கு ஏற்புடையன என்னலாம்.

அவ்வரிகள் இவை:

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் யோகசாலிகள்தான். தமிழென்றாலே இனிமை என்பது பொருள். தமிழில் சில வார்த்தைகளுக்கு இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மைபோன்ற சக்தியுண்டு. இது கற்பனையல்ல. கடைந்தெடுத்த அனுபவ உண்மை.

"மண்டி" என்ற சாதாரண வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையில் விசேஷமாக ஒரு சக்தியோ கவர்ச்சியோ இருப்பதாகத் தோன்ற வில்லை அல்லவா? சிறந்த கலைஞர்கள் இவ்வார்த்தையைக் கையாண்டு எத்தனை ஆச்சர்யகரமான அற்புத சக்தியை ஏற்படுத்தி விடுகிறார்களென்பதைப் பாருங்கள்.

பாரதியார் பாடலொன்றில் ("புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" {என்கிறார் } )1...... புகழ் மண்டிக் கிடக்கிறதாம். புகழானது கொழித்து, கொப்பளித்து, உறைந்து, ஊறித் ததும்பி எங்கும் பரந்து நிரம்பிக் கிடக்கிறதாம். இந்த ஒரு வார்த்தை கவிதையில் ஜீவகளையைப் படம்பிடித்துப் படிப்போர் கருத்தைப் பரவசமாக்குகிறது. இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம்.

என். எஸ். கிருஷ்ணன். கட்டுரை. ஜூன் 1952,


1 பிறை க்கோட்டுக்குள் உள்ளவை என் இணைப்புச் சொற்கள். 

சேவைக்குப் பிறந்தவர் மோடி





சேவைக்குப் பிறந்தவர் மோடி ---  அதைத்
தெரிவிக்க வைத்திருப் பாரொரு தாடி.
நாவிற்கு  நலமான  சொல்வார் --- உலக
நாடுக ளிடைஒரு நல்லிடம் வெல்வார்.

முதல்வராய்  நின்றிட்ட  காலை --- பெரு
மூச்செறிந்  தவர்மிசை ஏச்செறின் தவர்கள்
இதை இனும் செய்தரும் கோலம் --- கண்டு
இரங்கு நெகிழ்மனம் பிறவிமுற் பயனாம்.

தலைமை அமைச்சராய் வந்தும் --- அதைத்
தாங்காப்  பொறாமையில்  வீங்கி  வெடித்தோர்
குலைந்த குணமுடை  யோராம் --- அவர்
கூறின பழிகளைத்  தேர விடுத்தார்.














இஃது இரண்டாம் எழுத்தை வெட்டிவிட்டுப் பின்னர் ஒரு விகுதி (மிகுதி) புணர்த்துச் சொல்லைப் புனையும் தந்திரம். (<தம்+திறம்).  இப்படியே அமைந்த இன்னொரு சொல் மேலே  தரப்பட்டுள்ளது காண்க.

புதன், 6 டிசம்பர், 2017

ஆரியனும் ஆசிரியனும்



ஆசிரியன் என்பது தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கிவரும் தமிழ்ச்சொல்.

இது பற்றுக்கோடு (ஆதரவு) என்று பொருள்தருஞ் சொல்லாம் “ஆசு”  என்பதனடிப் பிறந்தது.  ஆசு + இரு + ய் + அர் = ஆசிரியர் எனவரும்.  இரு என்பது இரி என்று  தமிழின் இனமொழிகளில் வழங்குவதும் எண்ணற்குரித்தாம். 

நம்பூதிரி என்ற பிற்காலச் சொல்லிலும் இரு என்பது இரி என்று திரிந்து பதிந்துள்ளது.  நம்+ புது+ இரி  :  இது நம்மிடத்துப் புதிதாக வந்து வேலைபார்ப்பவர் அல்லது தங்குகிறவர் என்று பொருள்தரும். வேறு சொற்களிலும் இரு என்பது இரி என்று திரிவதுண்டு.  புது என்பது பூது என்று திரிதலை பூதம்( புது+அம்) , ஐம்பூதம்(புதிதாய்த் தோன்றுவது)  எனக் காண்க).

 மாதிரி =  மா + து + இரி;  மா= அளவு ; து = உடையது;  இரி = இருத்தல்.  அதாவது ஓர் அளவு உடையாதாய் இருக்கும் பொருள்.  திரி என்பது திரி :  திரிக்கப்பட்டது என்றும் கொளலாகும். இவற்றை எம் பழைய இடுகைகளில் காண்க.

ஆசு என்பது விளக்கப்பட்டுள்ளது.  ஆங்குக் காண்க.

இனி ஆசிரியன் என்பது ஆசான் என்ற வடிவிலும் வழங்கும்.  ஆசு+ ஆன்.  ஆன் என்பது ஆண்பால் விகுதி.

இனி ஆரியன் என்ற சொல்லும் ஆசிரியன் என்ற சொல்லுடன் வைத்து  ஆயத்தக்கது.  ஆசிரியன் என்பதில் சியை எடுத்துவிட்டால் இடைக்குறையாகி ஆரியன் என்று ஆகிவிடும். இதன் பொருள் ஆசிரியன் என்பதே. இது ஆரியன் என்ற சொல்லின் வேறானது. இடைக்குறைச்சொல்.

மேலும் வாசிக்க:

ஆரியன்: 

http://sivamaalaa.blogspot.com/2015/05/devaneyap-pavanar-and-word-aryan.html