செவ்வாய், 28 நவம்பர், 2017

வாத பித்த சிலேத்துமம் நோய்க்காரணங்கள்.



நமது மருத்துவ / வைத்திய நூல்களில் சிலேத்துமம் என்ற ஒரு சொல் வழங்குகிறது
.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று''

வளி என்பது காற்று. இது வாதம் எனவும் படும். மற்றவை சிலேத்துமமும் பித்தமும். 

முற்கால மருத்துவர்கள் இம்மூன்றையும் காரணங்களாகக் கொண்டனர். இக்காலத்தில் இது இன்னும் விரிவாகவும் ஆழ்ந்தும் ஆராயப்பட்டுள்ளபடியால் இவற்றை முற்ற அறியப்பட்ட காரணங்களாகக் கொள்ளாமல். அக்கால மருத்துவப்படி இவை காரணங்களாகக் கொள்ளப்பட்டன என்று நிறுத்திக்கொண்டு நமது சொல்லாய்வினைத் தொடர்வோம்.

நாம் எடுத்துக்கொண்ட சொல். “சிலேத்துமம்” என்பது.

இது ஒரு புனைவுச்சொல். புனைவுச்சொல் என்பது  திரிசொல். இயற்சொல் அன்று.  மக்களால் அல்லது பேக்சில் தோன்றி, வழக்கில் நிலைத்துப் பின் செய்யுளில் பயன்பாடு கண்டவை இயற்சொல். இப்புனைசொல் புலவரால் வெட்டி ஒட்டப்பட்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சொல். இது இன்றும் மக்கள் பேச்சில் இல்லை. மருத்துவ நூல்களில் காணக்கிடைக்கும்.

இப்போது சொல்லைப் பார்ப்போம்:

சளி என்ற தமிழ்ச்சொல் சிலே ஆனது.

தும்மல் என்பது துமம் என்று குறுக்கி விகுதி சேர்க்கப்பட்டது.

தும்மல் > தும் ( அல் விகுதி வெட்டப்பட்டது ) .> தும்+அம் = துமம்.

சிலே+ துமம் = சிலேத்துமம் ஆயிற்று.

து என்னும் அடிச்சொல்:

து > துப்பு.
து > தும்மல்.
து > துர > துரத்து. ( விரைவாக முன் ஓட்டுதல் ).

இவையெல்லாம் முன் வருதல் கருத்துடையவை.

பிறவும் ஆய்ந்துணர்க.

புனையப்பட்ட சொல்லை அறிந்த எவரும் உரிமை வாதமின்றி எடுத்துப் பயன்படுத்தலாம். மனிதரால் புனையப்பட்டவையே சொற்கள். மூலம் தமிழாகும்.

ஒட்டகத்துக்குப் புதிய சொல்



இன்று ஒட்டகம் என்ற தமிழ்ச்சொல்லை மாற்றி  அயல்மொழி வடிவம் கொடுப்போம்.
ஒட்டகம் என்று தமிழர்கள் பெயர்வைத்துவிட்டதால் வேறு புதிய சொல்வடிவங்களைத் தேடி அலையவேண்டாம் அல்லவா. ஒட்டகத்தையே எடுத்து அயல்வடிவம் கொடுப்பதே திறமுடைமை ஆகும்.

ஒட்டகம். இதில் “ட்ட” என்பதை எடுப்போம்.
ட்ட  ஷ்ட.

இது வழக்கமான மாற்றம்.   ட்ட > ஷ்ட.

ஒ என்ற தலையெழுத்தை எடுப்போம்.
ஒ > உ..
அயல்மொழிகளில் ஒகரம் இல்லை; எகரமும் இல்லை.  ஓகாரம் ( நெடில் )  ஏகாரம் (  நெடில் ) உள்ளன. ஓஷ்ட் என்னாமல் உஷ்ட என்பதே சரியாகவிருக்கும்.

இப்போது ஒட்ட என்பதை உஷ்ட என்று மாற்றிவிட்டோம்.

இறுதி கம் இணைக்கலாம். அப்படிச் செய்தால் பெரிய மாற்றம் எதுவுமில்லை. ஆகவே கம் வேண்டாம். ரம் என்று போட்டுச் சொல்லை முடிப்போம்.

ஒட்டகம் > உஷ்ட்ர

நன்றாக இருக்கிறது.


ஒட்டகம்



இப்போது ஒட்டகம் என்ற விலங்கின் பெயரை ஆய்வுசெய்வோம்.
உடலின் மேல்தோல் ஒட்டியுலர்ந்தது போன்ற காட்சியைத் தருவது இந்த விலங்கு அல்லது மிருகம்,1
ஓட்டகம் =  அகத்து ஒட்டியதுபோன்ற தோல் உடைய விலங்கு.
ஒட்டு +  அகம் =  ஒட்டகம்.
உடலின் எலும்புக்கூட்டுள் சென்று ஒட்டுதலைக் குறிப்பதே அகம் என்ற சொ.ல், நன்.கு அமைந்த சொல்.

பின் விரித்தெழுதப்படும்.


அடிக்குறிப்பு:
1 மிருகம் என்ற சொல்லுக்குப் பிறப்பு உடையது என்று பொருள். அதாவது குட்டிபோடுதலை உடையது. இது மக என்ற சொல்லிலிருந்து வந்தது.

மக  - பிறத்தல் பொருளுடைய  ஓர் அடிச்சொல்.
மக > மகம் (பிரிந்து தோன்றிய நட்சத்திரம்).
மக >  மகன், மகள் மக்கள்
மக >  மகதி:   பிரிந்து வளர்ந்த மொழி.
மக >  மா  விலங்கு.
மக >   ம்ருக விலங்கு.   அயல் மொழித் திரிபு.
ம்ருக > மிருக.

விலங்கு:  விலங்கு என்பது விலகிச் செல்லவேண்டிய நடப்பும் குணமும் உடையது என்று பொருள்படும்.  விலகு >  விலங்கு.

வேறு திரிபுகள்

இலகு > இலங்கு.
சவுங்கு > சவுகு (சவுகரியம்)
துலங்கு > திலகு > திலகம். ( இட்டால் வாழ்வு துலங்குவது )
தெலுகு > தெலுங்கு   தென்மொழி.  தெல்> தென்.

பிறவும் அன்ன.