ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

தேவருலக மாதர் பெயர்கள்.



தேவருலகில் இருப்போர் மனித உருவில் இருக்கிறார்களா என்று யாரும் அறிந்ததில்லை. மேலுலகோர் அனைவரும் உருவற்றவர்கள்  (அரு) என்றே எண்ணத்தோன்றுகிறது.  அப்படி ஓருலகு இல்லை என்போரும் உளர்.

எனினும் புராணங்களில் ( தொன்மங்களில்) கூறப்படும் தேவருலக மாதர்கள் அழகியர் என்று வரணிக்கப்படுவதுண்டு.

அரம்பை என்பவள் அரியவள்.
அர் = அரிதானது..   அரு < அர்.
அம் = அழகு
பா = இது பைம்மை ( இளமை) என்னும் பொருளது. பசுமை என்று பொருள்படும்.
பா என்பது பை என்பதன் திரிபு அல்லது விளிவடிவம்.
எனவே   அரம்பை அரிய அழகினள்.

எ-டு:

பை -  பையன். பையல்.   (அகவை குறைந்தவன்).
பை - பைந்தமிழ்.  ( என்றும் மூவாத தமிழ்).

பை - பைத்தியம் (பைத்து+இயம் ).  அறிவுத்திறன் முதிர்ச்சி அல்லது வளர்ச்சி பெறா நிலை.    பைத்து: பைம்மை உடையது.  இயம் - விகுதி. இதுவே இச்சொல்லின் அமைப்புப்பொருள். வழக்கில் பொருண்மை வேறுபடலாம்.

ஊர்களில் காணப்படும் அழகிகளே “ஊர்வசி”.  சொல் ஊரில் வசிப்பவள் என்றே பொருள்கொள்ள இடந்தருவது ஆகும்.

துலங்கும் உத்தமம் உடையாள் : துலோத்தமை.
துல = துலங்கு.
உத்தமம் : உத்தமை.
இது திலோத்தமை என்று மாறியமைந்தது.
துல > தில. 
இங்ஙனம் மனிதமாதர்களைக் கண்டே  தேவமாதர்கள்
_”உருவாக்கப்பட்டனர்”

நினைவில் நிறுத்தத் தக்க திரிபுகள்



நினைவில் நிறுத்தத் தக்கவை:

யகர - சகரத் திரிபு:
மயக்கை = மசக்கை
ஜப்பான் -- சப்பான் - யப்பான்


வாங்குதல்  பொருள்:  வளைதல்.




பழங்காலத்தில் எதையும் பெற்றுக்கொண்டவர்கள் வளைந்து நின்றே பெற்றுக்கொண்டனர்.  அதனால் பெற்றுக்கொள்தலுக்குவாங்குதல்என்று பொருள் ஏற்பட்டது. 1
இச்சொல்லுக்கு விலைக்கு வாங்குதல் என்ற பொருள் பிற்காலத்தில் உருவானது.

வாகனம் என்ற சொல் அமைந்தவிதம்:
வாங்கு + அன் + அம் = வாகு + அன் + அம் = வாகனம்.
 

வாங்கு என்பது வாகு என்று இடைக்குறைந்தது.  அன் என்பது சொல்லமைப்பு இடைநிலை.  அம் என்பது விகுதி.
வாகு என்பதில் உகரம் கெட்ட்து (  தொலைந்த்து).
வாசனம் என்பதற்கு வேறு பொருள்களும் உள்ளன. அவை:  புடைவை (வளைத்துக் கட்டப்படுவது);  குரல் (வளைந்து வந்தும் காதுகளை எட்டுவது);  

வாசனம் = வாகனம்.

இதில் வாகனம் வாசனம் என்று திரிந்தது.
வாசனம் என்பது வசனம் என்றும் திரியும்.
நெடில் குறுகிக்  குறிலாவது.

வாகனம் என்பது அனம் என்று முடியாமல் இயம் பெற்றும் முடியும்:

வாகனம் :   வாகு+ இயம் = வாகியம் (வண்டி).

தகரம் சகரமாகும்:


வாத்தியம் -  வாச்சியம்.

வாகினி:
 
படைகள் அணியாக நிற்கையில் நேர் கோடு பற்றி நின்றாலும் முன்னேறுகையில்  வில்போல் வளைந்து (சூழ்ந்து ) எதிரியைத் தாக்கும் பாணியினால், வாகினி என்ற சொல் படையைக் குறிக்கும்.

வாங்கு > வாகு > வாகு + இன்+ =  வாகினி.


வானதி:

வானதி என்ற சொல் வான்+ நதி. 
வானத்து ஆறு என்று பொருள்>
ஆகாய கங்கை என்பது போலும் கருத்து.


இவை உங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பறக்கவுமே சற்றியலாக்.....

பறக்கவுமே சற்றியலாக் கோழிக்குஞ்சு
பக்கத்து வந்தமலைப் பாம்புகௌவி
இரக்கமென ஒன்றின்றிக் கொன்று தின்னும்
இழிவான உலகமிதில் நீதி எங்கே?
உரக்க அது ஒலிசெய்தும் ஓடி வந்து
உதவுதற்குயாருமில்லை என்னசெய்வேன்?
பொறுக்கவினி இயலாத புவியை நீங்கிப்
புகுதற்கே ஓரிடமோ  புகல்வாய் எற்கே.

8.7.2017