By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வெள்ளி, 15 செப்டம்பர், 2017
வியாழன், 14 செப்டம்பர், 2017
மீனவ நண்பர்கள்.
நாம் மீன் உண்ணாதவர்களாக இருக்கலாம். சைவ உணவினிகள் உண்ணார். என்றாலும் மீனவ நண்பர்கள் ஆபத்தில் உதவக்கூடியவர்கள்.. மனத்தில் ஏது நினைத்தாளோ ஒரு சீன நங்கை பினாங்குப் பாலத்துலிருந்து கடலில் குதித்துவிட்டாள். அருகில் யாருமில்லை. யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டுதான் குதித்தாள்.
ஆனால் அவளும் அறியாமல் நம் மீனவ நண்பர்கள் இதைப் பார்த்துவிட்டனர்.
அவர்கள் இருந்த படகில் அங்கு விரைந்து வந்து அவளைக் காப்பாற்றிவிட்டனர். இப்படிக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும்.
அன்புடன் பேசித் தற்கொலை வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று போதித்தனர்.
அவர்களை மீனவ நண்பர்கள் என்பது வெகு பொருத்தமே.
இந் நிகழ்வு பற்றி 2016ல் எழுதிய கவிதை இதோ.
பினாங்குப் பாலமே ஆனால் என்ன?
பிறரருகில் இல்லாமல் போனால் என்ன?
விலாங்குப் பாணியிலே நீருக் குள்ளே
விழுந்ததுமே எங்கிருந்தோ கூட்டம் வந்து
மீனவர்கள் நாங்களெனக் குதித்து மீட்டார்!
மேனிலையர் வேறுசிலர் மேனி முந்தார்.
இனாங்கு தீர்மொழியால் தண்மை காட்டி
எடுத்தார்கள் குதித்தாளை மூழ்கு முன்னே.
இன்னாங்கு இனாங்கு என எதுகை நோக்கிச் சுருங்கிற்று.
பொருள்: துன்பம்.
தண்மை : குளிர்ச்சி.
ஆனால் அவளும் அறியாமல் நம் மீனவ நண்பர்கள் இதைப் பார்த்துவிட்டனர்.
அவர்கள் இருந்த படகில் அங்கு விரைந்து வந்து அவளைக் காப்பாற்றிவிட்டனர். இப்படிக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும்.
அன்புடன் பேசித் தற்கொலை வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று போதித்தனர்.
அவர்களை மீனவ நண்பர்கள் என்பது வெகு பொருத்தமே.
இந் நிகழ்வு பற்றி 2016ல் எழுதிய கவிதை இதோ.
பினாங்குப் பாலமே ஆனால் என்ன?
பிறரருகில் இல்லாமல் போனால் என்ன?
விலாங்குப் பாணியிலே நீருக் குள்ளே
விழுந்ததுமே எங்கிருந்தோ கூட்டம் வந்து
மீனவர்கள் நாங்களெனக் குதித்து மீட்டார்!
மேனிலையர் வேறுசிலர் மேனி முந்தார்.
இனாங்கு தீர்மொழியால் தண்மை காட்டி
எடுத்தார்கள் குதித்தாளை மூழ்கு முன்னே.
இன்னாங்கு இனாங்கு என எதுகை நோக்கிச் சுருங்கிற்று.
பொருள்: துன்பம்.
தண்மை : குளிர்ச்சி.
வாத்தியமும் வாத்தியாரும்
வாழ்த்தியம் என்பது
வாத்தியம் என்று திரிந்தது ஓர் இயல்பான திரிபு. இதில் ழகர ஒற்று போய்விட்டது.
வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர் வாத்தியார் எனப்பட்டார். அதில் யகர ஒற்று ஒழிந்தது.
இப்படி எழுத்துக்கள் ஒழிந்தமைக்குக் காரணம், தமிழர்கள் எப்போதும் தம்மொழியைத் திரிபுறப்
பேசியதுதான் . ஆனால் இத்தகைய திரிபுகளால் ஒரு நன்மையும் விளைந்தது. ஒரு புதிய சொல்
பயன்படுத்துவோனுக்குக் கிடைத்தது. வாத்தியம் ஆனமையால், வாழ்த்து என்ற சொல் அவன் எண்ணத்திலிருந்து
மறைந்தது. பொருள் விரிவு அடைந்தது. எப்படி ?
வாழ்த்து ஏதும்வழங்காத போதும் சொல் பயன்பாட்டில் தடையேதுமின்றிச் சென்றிணைந்தது.
அதாவது, வாழ்த்தியமாகவே இருந்திருந்தால், வாழ்த்தும்போதுமட்டுமே அது பயன்பட முடியும்.
ழகர ஒற்று மறைந்ததால், ஏனைச் சூழ்நிலைகளிலும் கருத்துத் தடையின்றிப் பயன்பட்டது.ஓர்
இறந்தவீட்டில் வாசிப்பதும் வாத்தியமே ஆனது.
வாத்தியார் ஆனதால்,
வாயாற்பாடம் சொல்லாமல் தபால் அல்லது அஞ்சல்மூலம் கற்பிப்பவரும் வாத்தியார் என்ற
சொல்லில் அடங்கினார்1
ஆனால் அப்படி மாறியபின்
இன்னொரு தொல்லையும் விளைந்தது. அது என்ன ? அச்சொல்
உப அத்தியாயி என்ற சொல்லுடன் குழம்பியது. சிலர் உப அத்தியாயி என்ற சொல் வாத்தியார்
என்று திரிந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் இதனால் பயன்படுத்துவோனுக்குக் கருத்துத்தடை
ஏதும் ஏறபடவில்லை.
பல்லியத்தனார் என்று ஒரு கங்கப்புலவர் இருந்தார். அவர் பாடலைச் சுவைத்துக்கொண்டிருந்தகாலை இந்தக்
கருத்துக்கள் மேலெழுந்தன. இவற்றை எழுதிவிட்டபடியால்
அடுத்த இடுகையில் அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாமே!
-----------------------------------------------------
குறிப்புகள்
------------------------------------------------------
உப + அத்தியாயி = உபாத்தியாயி, > உபாத்தியாயர். இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர்.
திருத்தங்கள்: பின்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)