http://www.thestar.com.my/news/nation/2017/09/03/giant-crocodile-caught-in-limbang/~/media/4ad0eb62ad554bdabb196471bfd242aa.ashx

இந்தப் பிடிபட்ட பெருமுதலையின் படத்தை மலேசிய ஸ்டார் தாளிகைப் பக்கத்தில் கண்டுகளிக்க, மேற்கண்ட தலமுகவரியைச் சொடுக்கவும்.
இதைப்பற்றி மகிழ்ச்சியாக யாமெழுதிய சில வரிகள் நீங்கள் பாடிக்களிப்பதற்கு:

நாடிவந் தொருமுதலை --- அந்த
நகரத்துக் கடையினுள் புகுந்ததுவே;
ஓடிவந் திட்டவர்க்கு
-- கிடைத்த
ஒருபெரும் களிப்புறு
திருநாளதே.
ஆற்றிலும் கடலிலுமே --- மனிதரை
அண்டா திருந்த வாழ்க்கையிலே,
ஆற்றவும் சலிப்பானதே
--- அதை
மாற்றி அமைத்திட நகர்சென்றதே.
பத்தடியின் நீண்டது --- மிகப்
பரியதென் றனைவரும் பார்த்தனராம்;
சுற்றித் தளைத்தனர்காண்
--- அதைச்
சுருட்டி எடுத்தனர் வனம்செலவே.
மனிதநே யம்மிக்கதால்
--- இந்த
மாநகர் மக்களோ டிருக்கவந்தேன்;
எனக்கும் விடிவில்லையோ
-- முதலை
இப்படிக் கலக்க முடன்சென்றதே.
இது முதல்போட ஒப்பாத முதலை. அதனால் கடைப்பங்காளிகள்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.