ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

இந்தியத் தொடர்வண்டி விபத்துகள்.





தொடர்வண்டி அமைச்சகமே செய்கிறதா ஏதும்?
தொலைந்துவிட்ட உயிர்கள்பல தோன்றும்பரி தாவம்!
இடர்தவிர்க்க விபத்துகளே இல்லாமல் ஆக்க
எத்தனித்து வெல்லாமை பற்றிவரும் சாவம்!
படர்கடமை பலப்பலவே என்றாலும் பார்க்கப்
படவேண்டும் என்பனவாம் விடினதுவோ பாவம்!
பிடர்முறிக்கும் நோவினையே பின்போட்டுக் கொண்டு
பெருங்கடன்கள் முடித்திடினும் அருங்கவின் இல் ஓவம்

இறந்தோர்க்கு எம் இரங்கல்.
காயமுற்றோர் நலம் விரைந்து பெறுக..

அரும்பொருள்.

தொடர்வண்டி - train
பரிதாவம் -  பரிதாபம்.
(பரிதாவம் என்பது பரிந்து தவித்தல். வகர பகரத் திரிபு.
பரிமாற்ற வசதி  மொழியில் உண்டு ).  
சாவு+ அம் = சாவம் > சாபம்.
விடினதுவோ -  எந்த ஒன்றை விட்டாலும்.  ( அது என்பது தொடர்வண்டித் துறையைக் குறிக்கிறது.)
பாவம் என்பது பாபம் என்றுமாகும்.
பிடர் - பிடரி.
பின் - முதுகு.
கடன்கள்  - கடமைகள்.
அருங்கவின் - அரிய அழகு.
இல் = இல்லாத
ஓவம் -  ஓவியம்.


த்ில் இரண்டு விபத்ுகள் நைபெற்றிருப்பால் இ
ெளிவேலையாக இருக்கும் கூடும்.  இருப்புப் பைக் கண்காணிப்ப
இரட்டிப்பாக்கப்பேண்டியு முன்மையானையாகிறு. இு எளின்று என்றாலும் ெய்ற்குரியு. நல்லேளையாகாம்
இவ்விடங்க்ுக்குப் போவத் ிர்த்ுவிட்டோம். நன்மைய
ிகழ்வாக.

ீவிரிகள் எங்ு எப்பி ஊடுருவுகிறார்கள் என்பு கண்டுபிடிக்கக் கினானேலை. இரந்தாலும் கிக்கேண்டியஆகும்.     





சனி, 19 ஆகஸ்ட், 2017

ஔவையார் புறநானூற்றுப் பாடல் விளக்கம். பா: 286


இனி ஔவைப்பாட்டியின் ஓர் ஐந்துவரிப் புறநானூற்றுப் பாடலைப் பாடிப் பொருளறிந்து இன்புறுவோம்.
இது 286வது பாட்டு. கரந்தைத் திணையில் வேத்தியல் துறையில் வருகிறது.
பாடல்:
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப
பலர்மீது நீட்டிய மண்டை என்  சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பத்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே.

இந்தப் பாடலில் போர்மறவர்கள் வெள்ளாட்டுக் கடாக்களுக்கு ஒப்பிடப் படுகின்றனர். ஒரு தாய் பாடுவதுபோலப் பாடல் அமைந்துள்ளது. அத்தாயின் மகனோ போருக்குப் புறப்படத் தயாராய் நின்ற இளைஞன். “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை”. வெள்யாடு என்பது வெள்ளாடு.   யாடு =  ஆடு.
ஆனை என்பது யானை என்றும் வரும். இவ்விரண்டுள் நாம் யானை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆடு என்பது யாடு. இவ்விரண்டுள் யாடு மறக்கப்பட்டது; ஆனால் ஆடு இன்னும் வழக்கில் உள்ளது.  மொழியில் எப்படியெல்லாம் மாறுதல்கள் ஏற்படுகின்றன பார்த்தீர்க்ளா வெள்ளாடு அல்லது வெள்யாடு என்பது ஒரு வகை ஆடு. மறி என்பது வேறுவகை. இப்போது செம்மறி ஆடு என்று வழங்கும்.
இளைஞனைக் காளை என்று ஒப்பிடுவது இன்றும் காணப்படுகிறது. வெள்ளாட்டுக் கடாவுக்கும் ஒப்பிடலாம் என்பதை இப்பாடலின்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
சுற்றி நிற்கும் வெள்ளாட்டுக் கடாக்களைக் போல இத்தாயின் மகனைச் சுற்றி இளைஞர் பலர் நின்றனர்.
ஓர் உண்டாட்டு நடைபெற்றது. ( உணவுடன் கலந்த ஆட்ட நிகழ்ச்சி ). அப்போது வேந்தனோ அல்லது படைத்தலைவனோ அவர்களுடன் நிற்கிறான். (ஓரு பெரிய அதிகாரி ).  ஒவ்வொருவருக்கும் ஒரு மண் சாடியை நீட்டுகிறான். அதனுள்ளே கள். அதை எல்லோரும் வாங்கிக் குடித்து மகிழ்ந்து ஆடுகிறார்கள். அதில் குடித்த பலர் பின் போருக்கு ஏகி அங்கு மடிந்தனர். ஆனால் இத்தாயின்மகன் சென்று வெற்றிக்கனியைக் கொணர்ந்து தாய்க்கு அர்ப்பணித்தான். (வெற்றியைத் தாயின் திருமுன் படைத்தல் ).
பாடலில் வந்துள்ள சில அருஞ்சொற்களைப் பார்ப்போம்.
செச்சை -  கடா.
தன் ஓர் அன்ன – தன்னை ஒத்த;
இளையர் -  இளவயதினர்;
இருப்ப -  சூழ நிற்க;
மண்டை -  மண் சாடி.  (மண் + தை.  இங்கு தை விகுதி ). தை > தைத்தல் : இணைத்தல், செய்தல் எனக்கொண்டு, மண்ணால் ஆனது என்று சொல்லமைப்பைக் காட்டினாலும் ஆகும்.
சிறுவன் -  இங்கு மகன் எனற்பொருட்டு.
கால்கழி கட்டில்:  பாடை.  காலம் கழிந்ததும் இடுவதற்குரிய கட்டில்.  கால் – காலம்.  அம் விகுதி இன்றி வந்தது.  கழி -  கழிந்த. இது வினைத்தொகை.
அறுவை – போர்வை.
போர்ப்பித்து இலதே -  பிணப்போர்வையை இடவில்லை.
அறுவை:  இன்று இப்பொருளில் இச்சொல் வழங்கவில்லை என்று தெரிகிறது.  அறுக்கப்பட்டதை அறுவை என்றனர்.  துணிக்கப்பட்டது துணி என்றும், வெட்டப்பட்டது வேட்டி (வெட்டு+ இ : இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்). என்றாற்போல அறுவை என்ற சொல் அமைந்துள்ளது.
வேட்டி என்பதை வேஷ்டி என்று அழகுபடுத்தியதுடன். இச்சொல் மேலை மொழிகளிலும் பரவிச் சேவை செய்கிறது.  Vest என்ற ஆங்கிலச் சொல்லும் இதிலிருந்து வந்ததுதான். இது இலத்தீன் முதலிய மொழிகளிற் பரவிப் பல சொற்களைப் படைத்துள்ளது. உலக மொழிகட்குத் தமிழ் செய்த பேருதவி இதுவாம். 

Will be edited later as there are posting problems presently.

Justified on 6.6.2022











வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

பகலவன் வணக்கம்

பகலவன் வணக்கம்.

பகலவனின் வெப்பமிங்கு மிகுந்து விட்டால்
பையிலுள்ள எழுதுகோலும் மையி ழக்கும்!
தகத்தவென் றேகிழக்கில் உதிக்கும்காலை
தன்னிழப்பை மறந்துமனம் அதைவணங்கும்.

பகலவன்இல் லா உலகில் பசுமை இல்லை;
பகலவன் இல் லா விடிலோ முதுமை இல்லை;
பகலவனில் லாவிடிலே வளர்ச்சி இல்லை;
பகலவனில் லாவிடிலே தளர்ச்சி இல்லை;
பகலவனால் உண்டெலாமே நன்மை தீமை;
பகல் அவனே இகல் அவனே; நட்புமாமே.

ஒரு பந்துமுள் ((ball-point pen )எழுதுகோல் காய்ந்துவிட்டது.
இதுபோன்றவை காய்ந்துவிடுதற்குக் காரணம்
பகலவனே என்றெண்ணியகாலை மேற்கண்ட
வரிகள் பிறந்தன. பாடி மகிழுங்கள்.

சொற்பொருள்:

இகல் : பகை.

பெரும்பாலும் பகலவனை அவன் என்று சுட்டுவது   பெரும்பான்மை.
இங்கு அதை என்று சுட்டப்பட்டுள்ளது. சூரியதேவன் என்று உயர்திணையாகக் கொள்ளப்படினும்,  (மக்கள், தேவன் உயர்திணை)  அஃறிணையாக வரும்வழக்கும் உளது.    பொழுது புலர்ந்தது என்பதும்
காண்க. பகலவன் என்பதற்கு அன் விகுதி உண்டெனலாம்.  எனினும்
அதை என்றே குறிப்பிட்டுள்ளேம். சோதிடர்கள்   கிரகநாதர்களைப் பற்றி விவரிக்கையில்  அது  இது என்று ஒவ்வொன்றையும் குறிப்பிடுதலும்
கேட்டிருக்கலாம்.