என்றும் சுமங்கலி
துர்க்கையம்மன்
இணையில் துணையென
நிற்பவளே
வென்று மகிழ்வுறு
வாழ்வினிலே
வினைகள் அகற்றும்
நிலைப்பொருளே
இன்று பணிந்தஎம்
மந்திரத்தால்
இன்றே அருளும்
புரிந்தவளே
நன்று நிகழ்ந்திட
எம்வசமிந்
நகருள் வருவாய்
நிறைதருவாய்.
வரும் ஞாயிற்றுக்
கிழமை 13.8.2017 காலை
சிங்கப்பூர் போத்தோங்பாசீரில் அருள்பாலிக்கும்
அருள்மிகு துர்க்கையம்மன் ஆலயத்தில்
( ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயம் 8, POTONG PASIR AVE 1,)
சிங்கப்பூர் போத்தோங்பாசீரில் அருள்பாலிக்கும்
அருள்மிகு துர்க்கையம்மன் ஆலயத்தில்
( ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயம் 8, POTONG PASIR AVE 1,)
சுமங்கலிப் பூசை
நடைபெறும். அன்னதானமும்
நடைபெறும். உபயதாரர்கள் சுமார் $15000 (வெள்ளி
பதினையாயிரம்) செலவில் நடத்தும் இவ்விழாவில்
கலந்துகொண்டு அம்மன் அருள்பெறுக என
வேண்டிக்கொள்கிறோம்.
அனைவருக்கும் நன்றி உரித்தாகுக.
அம்மன் அலங்காரம் என்னும் இப்பாடலைப்
படித்து, பூசையின்போது அம்மன் எப்படி ஒப்பனை
செய்யப்பட்டாள் என்பதை ஓரளவு புரிந்துகொள்ளலாம்.

இனிதாய் நிறைவை
அடைந்து --- அம்மன்
இன்னருள் பெற்றே
மகிழ்ந்தனர்காண்!
கனிதேன் கலந்து
சிறந்து ---- கோவிலில்
கண்டவை யாவும்
ஒளிர்ந்தனகாண்.
ஈரா யிரம்பெறும் மாமாலை ----- அணிந்தே
ஏற்ற முடன் திகழ்ந்த் தாள் அம்மையே
ஆரும் அறியா அழகுடனே
--- அம்மை
அருள்வடி வாகினள்
கேள் உண்மையே.
பிறவி எடுத்தேனே
அம்மனது ---- மனங்கவர்
பேரலங் காரமே கண்ணுறவே.…!
சிறையுள் புகுந்தேன்
அவள்மனமே ---- இனி
விடுதலை என்பதெம்
கைக்கனியே.
தகத்தக என்னும்நல்
தாலிதனை --- அணிந்து
தன்னே ரிலாதொரு
காட்சிதந்தாள்;
மிகத்தரு புன்னகை
கண்டயர்ந்தேன் ----- இக்கவின்
இகத்தினில்
காணவும் உண்டென்பையோ ?