By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ஞாயிறு, 30 ஜூலை, 2017
சங்கப் புலவர் பக்குடுக்கை நன்கணியார் ஞானி
பக்குடுக்கைக்
நன்கணியார் ஒரு சங்கப் புலவர்.
தம்
வாழ்க்கைத் தொழிலாகச் சோதிடம்
கணிப்பதை மேற்கொண்டிருந்தார்.
பழந்தமிழில்
சோதிடர்களுக்குக் "கணியர்" என்பர்.
சோதிடத்தில்
வல்லவராதலின் இவர் "நன்கணியார்"
என்று
போற்றப்பட்டவர். இவர்தம்
இயற்பெயர் தெரிந்திலது.
முக்தி மோட்சா!!
மோட்சம்
என்பது ஒரு திராவிடச் சொல்லே
ஆகும்.
இதை
இப்போது ஆராயலாம்.
மேல்
என்ற தமிழ்ச்சொல் சில
திராவிடமொழிகளில் மோள் என்று
திரிந்து
வழங்கும்.
ஒன்று
இன்னொன்றன்மேல் மோதுகிறது.
மேல்சென்று
இடிப்பதை
மேது
என்று வினையாக்காமல் மோது
என்றல்லவா வினைச்சொல்
ஆக்குகிறோம்?
மே>
மேல்;
மே>
மோ
> மோது.
ஏகாரச்
சொற்கள் ஓகாரமாகும்.
ஏம்
= பாதுகாத்தல்;
ஓம்
= பாதுகாத்தல்;
ஓம்
> ஓம்புதல்
: பாதுகாத்தல்.
பல
சொற்களை ஆராய்ந்தால் இது
தெற்றெனத் தெரியவரும்.
மோள்
> மோட்சு
> மோட்சம்.
மே
> மோ
> மோச்சம்.
சு,
அம்
விகுதிகள்.
இது
பேச்சு வழக்குச் சொல்.
இறந்தவன்
மேலே போய்விட்டான் என்பது
பேச்சு வழக்கு.
அதிலமைந்ததால்
மோச்சம் என்ற சொல். அதுபின்
மோட்சம் என்று திருத்தப்பெற்றது.
ட்ச
என்றால் ஒலி இனிமையாகிறது
என்று கருதினர்.
முது
> முதுமை.
முது
> முத்து
> முத்தி
> முக்தி.
மோள்
> மோட்சம்.
முக்தி
மோட்சா!!
சனி, 29 ஜூலை, 2017
இணையம் சரிவரக் கிடைக்காமல்...........
இருதினம் இணையம் சரிவரக் கிடைக்காமல்
எழுதும் முயற்சியும் தடைப்பட்டதே!
வருகிற நண்பர்கள் நறுமணம் தருமலர்
வரப்பெறு நிலையதும் இடைப்பட்டதே!
முயன்று முடித்திட நாளை வரும்வரை
முனைப்புடன் மீண்டும் வருவிரென்றால்
சிறந்த கருத்துப் படையல் உங்கள்பால்
சேர்ந்திடும் தமிழைப் பெறமகிழ்வீர்.
( இதை உரைநடையில் எழுதவேண்டும். அயர்ச்சியினால்
கவிதைபோலச் சுருக்கித் தந்துள்ளேன்.)
வாழ்த்துக்கள்.
எழுதும் முயற்சியும் தடைப்பட்டதே!
வருகிற நண்பர்கள் நறுமணம் தருமலர்
வரப்பெறு நிலையதும் இடைப்பட்டதே!
முயன்று முடித்திட நாளை வரும்வரை
முனைப்புடன் மீண்டும் வருவிரென்றால்
சிறந்த கருத்துப் படையல் உங்கள்பால்
சேர்ந்திடும் தமிழைப் பெறமகிழ்வீர்.
( இதை உரைநடையில் எழுதவேண்டும். அயர்ச்சியினால்
கவிதைபோலச் சுருக்கித் தந்துள்ளேன்.)
வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)