திங்கள், 24 ஜூலை, 2017

அஞ்சலி - ஒரு விளக்கம்

அஞ்சலி

இந்தச் சொல்லுக்கு 2010 வாக்கில் ஒரு விளக்கம் தந்து இது ஒரு தமிழ்/திராவிடச் சொல் என்று அதை அணிசெய்திருந்தோம். அந்த இடுகை
கள்ள ஒட்டுமெல்லியால் ( .an unauthorised browser add-on ) இல்லாததாயிற்று.  அதைப் படித்த‌ சிலருக்கு இன்னும் நினைவிலிருக்கலாம். தமிழறிந்தோர் நிரம்ப உளராதலின் அது தொலைந்துவிட்டாலும் அவ்விளக்கத்தினை மறந்திருக்கமாட்டார்கள்.

இவைபோன்ற சொற்களுக்கு நாமளிக்கும் விளக்கங்களை எங்காவது உங்கள்
கணினியின் மூலைமுடுக்கில் சேமித்து வைத்திருங்கள். சொற்பொருளை நன்குணர இவை உதவும். எல்லாமும் இல்லையாயின் எல்லையிலா இருளன்றோ நிலவும்!!

-
இச்சொல்லின் முன் நிற்கும் சொல் அகமென்பது.  இது அம் என்று குறுகுதலை
உடையது. தமிழைத் தேர்வுக்காகப் படிக்காமல் ஆர்வுக்காக அலசியவர்கள்
இதை எளிதில் மறத்தலிலர்.  அகம்+கை என்பது அகங்கை > அங்கை என்று
மாறும்.  அகத்துக்காரி ஆத்துக்காரி என்று மாறுதலுணர்ந்தோர் இதை அதிசயித்து நோக்கார். அகம் > அம்.

செல்லுதல் > செல் > செலி.  ஆக, ஒருவனது அகம் செல்லுதலே அஞ்சலி
செயதலாம்.

பாத+ அஞ்சலி = பத + அஞ்சலி >  பதஞ்சலி என்பது அறிக.









சனி, 22 ஜூலை, 2017

Avathaaram அவதாரம்

அவதாரம்

இந்தச் சொல்லை இப்பொழுது பார்ப்போம்.

அவமென்பது அவி+அம்  என்று பிரியும்அவித்தல் என்பது
அழித்தல்; அவிதல் தானே அழிதல்அவிஅழி. இது அம்  
விகுதி பெற்றால்அவம் ஆகும். அழிதல் என்பது  
கெட்டுவிடுதல். எனவே அவமானம் என்ற
சொல்லில்:

அவம் = கேடுமானம்பெருமை. பிறரால் மதிக்கப்படுவது.
ஆதலின் மானக்கேடு என்று இதனை வேறுவிதமாகச்  
சொல்லலாம். மானம் --பழந்தமிழர் இதனைப் பீடு என்றனர்.  
பீடுடைய மன்னன் என்ற சொல்,பீடுமன் > பீஷ்மன்  
என்றானது முன்னர் எழுதியுள்ளோம்.

இனித் தாரம் என்பது காண்போம். தரு+அம் = தாரம்
தாரமாவது தருதல்தாரம் என்ற பலபொருளுடையது
பிள்ளைகளைப் பெற்றுக்குடும்பத்துக்களிப்பவள் தாரம்  
எனபபட்டாள். தாரம் என்பது வருதல்    மீளவும்
வருதல்  என்றும் பொருள்தரும்

தரு> தார் > தாரம்வாழைத்தார்என்பது பழம்
மீளவும் வருதலால் அப்பெயர் பெற்றதுஅவதாரம்
என்ற கூட்டுச்சொல்லில் அழிந்தது மீளவும் வருதல்   
என்பதுபொருளாகிறது.  

வாழை மீண்டும் மீண்டும் பழங்களைத் தந்து
உண்ண வழிசெய்தல் போலவே அவதாரமும் அழிந்து 
அழிந்து தோன்றுதல்  என்று பொருளாகிறது.


எனவே இதை மீண்டும் அறிந்து மகிழுங்கள்

>

வியாழன், 20 ஜூலை, 2017

தலைலாமாவும் இந்தியாவும் சீனித்திருநாடும்.

இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் சிக்கிம் பூட்டான் முதலியவற்றில் உள்ள நிலப்பகுதிகளை முன்னிட்டு ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை உலக அரசியல் முன்னணியினர் எழுத்தாளர்கள் கூறியவற்றைக் கொண்டு வாசித்து அறிந்தோம். இந்த‌
நிலைக்கு யாது பரிகாரம்  என்பதையும் சிலர் எடுத்துக்கூறியுள்ளனர்.

இதில் தொடர்புடைய நாடுகள் நடந்துகொள்ளும் விதம்,  குடும்‍பங்களில்
ஏற்படும் தகராறு போலவே உள்ளது எனில் மிகையன்று.

சீனாவை விட்டு தலைலாமா இந்தியாவுக்கு ஓடிவந்து உயிர்பிழைத்தார்.
இவரைப் பிடித்துத்  திரும்பச் சீனாவிடம் ஒப்படைக்க இந்தியா மறுத்துவிட்டதனால்தான் தகராறு தொடங்கியது என்று சிலர் கூறியுள்ளது
சரியாகவே தோன்றுகிறது.  இன்று வரை இது ஒரு தொடர்கதை .

ஒருவன் மனைவி புருடன் அடிப்பான் என்று பயந்து அடுத்தவீட்டுக்கு
ஓடிவிட, அவளை அடுத்த  வீட்டுக்காரன் உணவும் உடையும் இடமும்
கொடுத்துக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் அவளை மீண்டும் அடிக்கும்
கணவனிடம் அனுப்ப  மறுத்தால் எப்படி? அதுபோன்றதே இது.

ஆனால் தலைலாமாவுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு மனைவிக்கும்  அவளைப் புடைக்க விரட்டும் கணவனுக்கும் உள்ள‌
தொடர்பை விடக் குறைவானதே. திபேத் என்ற தலைலாமாவின் நாடு
ஒரு தனிநாடு.  சீனாவில்  மன்னர் ஆட்சி நடைபெற்ற காலத்தில்
திபேத்தைச் சீனா ஆண்டதாம். அந்தப் பழைய ஆட்சியை வைத்துச் சீனா
உரிமை கோரிற்று. இந்தியத் தலைவர்கள் அதை அப்போது ஏற்றுக்கொண்டனர். இல்லாவிட்டால் சீனா தொல்லை தரும் என்ற‌
அச்சத்தினால்.

பேச்சுகளின் மூலம் இது தீர்வுற வேண்டுமென்பதே நம் ஆசையாகும்.

சீனிதந்த  நன்னாடு சீனா அதுமீண்டும்
சீனியாம் நல்லமைதி   தந்தாலே ‍‍=== சீனியாம்
ஞாலத் தமைதியே பொன்னாகும் போயினது
கூலம் ஓழிக்கும் வழி.