சத்திரம் என்ற சொல்லைச் சில ஆண்டுகளின் முன் யாம் விளக்கியிருப்பினும், அது இப்போது கிட்டிற்றிலது. அதனால்
ஈண்டு மறுபார்வை செய்தல் நலமே.
நெடும்பயணம் செல்வோர் வீட்டில் தாம் பயன்படுத்தும் பெட்டி படுக்கை எல்லாவற்றையும் மூட்டைகட்டிக் கொண்டுசெலல் இயலாததே. பயணத்தை இடைநிறுத்தி.எங்காவது தங்கித்தான் செல்லுதல் ஒக்கும். யார் வீட்டிலாவது தங்கிச் செல்ல அனுமதி கிட்டுதல் அரிது, தங்கியிருந்து பொருள்களைச் சுருட்டிக்கொண்டு போய்விட்டால் என்செய்வோம் என்னும்
கவலையில் யாரும் நுழையவிடார். வீட்டில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய இடைஞ்சல் ஆகிவிடுமாதலால் என்ன செய்யலாம் என்னும் வினாவுக்கு விடையாகக் கிடைத்ததே சத்திரம். பெரும்பாலும் ஓர் இரவு தங்கிச் செல்வதற்குச் சத்திரமே தக்கது. இப்போது அழகிய மற்றும் வசதிகள் பலவுள்ள விடுதிகள் உள்ளன.
சற்று இருந்து போவதே சத்திரம். சற்று ~ சத்து ஆனது. இரு+ அம்
என இரண்டும் இணைந்து இரம் ஆயின. இங்கு அம் என்பது விகுதி.
சத்து + இரு + அம் = சத்திரம் என்று அழகிய ஒருசொல் ஆயிற்று.
அறிந்து மகிழுங்கள்.