வெள்ளி, 19 மே, 2017

கூம்பு குவி கும்பம்.

சாவு என்ற வினை பெயராகும்போது, அம் விகுதி இணாந்து  அது சவம்
என்றாகும் என்பதை, ஒன்றன்று ~~  சில இடுகைகளிலாவது தெரிவித்திருந்தேன். அதைப் படித்து மகிழ்வெய்தியிருக்கின்ற நேரத்தில், அவ்வப்போது வேறு சில உதாரணங்களையும் தந்திருந்தேன்.

இப்போது மற்றுமோர் எடுத்துக்காட்டினை வழங்கும் சித்தமுடையேன்.
அது வருமாறு.

கூம்புதல் என்பது வினைச்சொல்.  அது அம் விகுதி ஏற்குங்கால்,
கூ என்ற நெடிலானது குகரமாய்க் குறுகுதல் அறிந்துகொள்க. சாவு
என்பதன் நெடில் சகரமாய்க் குறுகுதல்போலவேயாம்.

கூம்பு >  கூம்பு+அம் > கும்பம்.

படி + அம் = பாடம் என்பது இதற்கு மாறான எடுத்துக்காட்டு ஆகும்.
இங்கு முதனிலை நீண்டு, படி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,
பாடமாயிற்று. ஒரு நூலைப் படிப்பது பாடம். இனி,  இறந்த‌
உடலைப்  "பாடம் பண்ணுவது" என்ற வழக்கும் உள்ளது. அது கெட்டுப் போய்விடாமல் இருக்க, அதன் .    உள்ளும் புறமும் படியுமாறு
பூசப்படும்.   அம்  மருந்தைப்  பூசுதலைப்   பாடம் பண்ணுதல் என்பர். பாடம் பண்ணுதல் என்பது பேச்சுவழக்கில் உள்ளதாகும். ஒன்றை நெட்டுருச் செய்தலை "மனப்பாடம் பண்ணுதல்" என்ற வழக்கும் உண்டு. மனத்திற் படியுமாறு செய்தலிதுவாகும்.

 போயிலை பாடம் பண்ணுதல் என்பதும் வழக்காகும்.

கூ என்பது இவ்வாறு மட்டுமின்றி,  கு என்று குறுகி, வி என்னும்
விகுதி பெற்று, குவி (குவிதல்) என்றுமாகும்.

கூ+பு = கூம்பு (கூம்புதல்).
கூ + வி = குவி > குவிதல்.

இனி மீண்டும் சந்திப்போம்.

வியாழன், 18 மே, 2017

Attack on our computer systems

Yesterday there was a virus attack on our computer that was in use. This has now been
repaired and it is running well.

But when writing an introduction to the term parikaram, the cursor and the typed paragraph
went missing all of a sudden..  Hence had to suspend the activity;

Considering using paper drafts and then get them typed.

Please inform us of any unusual activity .  Thank you,

தூ தூசு

காசு என்பது காக்கப்படுவது.  அதனால் அச்சொல்லை அமைத்தவர்கள் காத்தல் என்னும் பொருளுடைய  "கா" என்ற
ஓரெழுத்து ஒருமொழியாக இலங்கும் வினைப்பகுதியிலிருந்தே அதனை
அமைத்தனர். இதேபோன்று அமைந்த இன்னொரு சொல்லைக்
கண்டு இன்புறுவோமே.

பல சொற்கள் மொழியில் உளவேனும் சொல்லமைப்பு முறையை
அறிந்துகொள்வதற்காக, இன்னும் ஒன்றிரண்டை ஆய்ந்தால்
பொருத்தமாகவிருக்கும். இதற்குத் தூசு என்ற சொல்லைத்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

தூசு என்பது தூசி என்றும் வழங்கும்.  இங்கு சு என்னும் இறுதிநிலையை நாம் நோக்குவதால், "தூசியை"த்  தற்போது ஒதுக்கிவைப்போம்.

தூ என்பது தூவுதல் குறிக்கும் சொல். இரண்டு நாள் நம் கண்ணாடி நிலைப்பேழையைக் கவனிக்காமலிருந்துவிட்டால் தூசு படிந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. நம்மையும் அறியாமல் இது தூவப்படுகிறது. இந்த வேலையைக் காற்று செய்கின்றது என்று நினைக்கிறேன். எப்படியோ தூசு தூவப்படுதல் உண்மை.

எனவே தூ என்ற அடியிலிருந்து தூசு என்ற சொல் பிறக்கிறது.தூ>  தூவு.  தூ> தூசு..

மற்றவை பின் .

தூ தூசு