திங்கள், 15 மே, 2017

உவமை உவமானம் உவமேயம்

உவமை என்பது தமிழ். ஆனால் உவமானம் உவமேயம் என்பன‌
பற்றிச் சிலருக்கு ஐயப்பாடு உள்ளது.

உவமை + ஆன +  அம்( விகுதி )   : உவமானம்.

அதாவது, உவமைதான் உவமானம்.  இந்தச் சொல்லில்,  "ஆன"என்ற சொல் வந்து,  புணர்ச்சியால் மான என்று தோன்றுகிறது.  இதில்
மானம் ஒன்றுமில்லை. கற்பனையாக, உவமிக்கப்படும் பொருளின்
அளவு (மான ) என்று சொல்லலாம். இதிலொரு புதுமை இல்லை.

பெண்ணுக்கு உவமை மயில். அதுவே  உவமை.  உவ  என்பது
உ என்னும் சொல்லிற் பிறந்தது. முன் நிற்பது என்று பொருள்.

உவமையிலிருந்து நோக்க, அதனோடு ஏயது : பெண். இதில் பெரிய‌
செய்தி ஒன்றுமில்லை. மயில்போலும் அழகுடையாள் என்பது
ஒரு கருத்து. ஆடவன் மனமிக மகிழ்ந்து பெண்ணை மயில் என்கிறான்.  அவள்  ஆடும் அழகு,  மயில் போன்றது என்பது கருத்து. உருவொற்றுமை ஒன்றுமில்லை.

அதிலும், ஆய்மயிலாக இருத்தல் வேண்டும், எல்லா மயிலும்
அல்ல.  "அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ?" தேர்ந்தெடுத்த‌
மயிலே பெண்ணுக்கு ஒப்பு.

உவமை + ஏய + அம் = உவமேயம், இது உப என்று திரிந்து,
உபமேயம் என்றுமாகும்.  வ > ப திரிபு. உவமையோடு  இயை  பொருள். இங்கு பெண் ஆவாள்.

ஏய ‍ இயைய.

இவற்றைத் தமிழ்க்கண்ணாடியால் பார்த்தால், இந்த உண்மை
புலப்படும்.

தமிழில்  பொருள் சொல்ல இயலாதவிடத்தன்றோ  இந்தோ ஐரோப்பியத்தை  நாடவேண்டும் ?   இங்கு அது தேவையில்லை.  மற்றும் சமஸ்கிருதத்துக்கு
இலக்கணம் வகுத்தவன்  ஒரு தமிழ்ப் பாணனாகிய "பாணினி". ( பாண் +இன் + இ )..

ஆரியன் என்பதும் தமிழ்ச் சொல் .  வெளி  நாட்டார்  வந்துள்ளனர்.
அவ்வப்போது.!!   அவர்கள்  "ஆரியர்"  அல்லர்.  சமஸ்கிருதம்  இந்திய  மொழி.
அதிலிருந்து  சொற்களை  மேற்கொண்டு பயனடைந்தோர் பலர்  பன்மொழியினர் ..


உவ + ம் +  ஐ ‍=  உவமை.
உவ + ம் + ஏய + அம்  =  உவமேயம்,
உவ + ம்  + ஆன + அம் =  உவமானம்,

உவமானம் என்பது உண்மையில் ஓமானம் என்ற சிற்றூர் வழக்கு, புலவர் இதனை மேற்கொண்டு, உவமானம் > உபமானம் ஆக்கினர்,

உவமை என்பது இலக்கிய வழக்கு,.

உவமேயம் என்பது புலவர் புனைவு. இயைதல், ஏய்தல் என்பன‌
சிற்றூரார் வழங்காதவை என்று தெரிகிறது.

ஆன, ஏய என்பனவற்றை எச்சங்களாகக் காட்டாமல் வினைப்பகுதிகளுடன் இணைத்துக்காட்டலாம்.  வேறுபாடில்லை.

உவ+ மெய் என்று காட்டுவது பேரா மு வரதராசனார் கொள்கை.




ஞாயிறு, 14 மே, 2017

உகர அகாரத் தொடக்கச் சொற்கள்

உக ரத் தொடக்கமான சொற்கள் பெரும்பாலும் அகரத் தொடக்கச் சொற்களாக மாறிவிடுகின்றன என்பது முன் சில இடுகைகளால்
விளக்கப்பட்டது. ஆனால் ஒருசிலர் இதனை ஒப்புக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டனர்.  புதிது ஆவதை உடன் ஏற்றல் உலகிற் குறைவு
ஆகும்.

ஆங்கில மொழியில் யு என்று ஒலிக்கும் எழுத்து பல சொற்களில் அகரமாக ஒலிப்பதைக் காணலாம்.  பி‍ யு என் என்பது புன் என்னாமல்
பன் என்றே ஒலிபெறும். இங்ஙனம் உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலச்\சொற்கள் பலவற்றை முன்நிறுத்தி பிற மொழிகள்
இந் நெறிமுறையைத் தொட்டியல்வதை உணர்ந்தின்புறலாகும்.

முன்னுதல் (சிந்தித்தல் ) சொற்புனைவின்போது மன் என்று மாறிவிடுகிறது.  அதன்பின் திறம் என்பதினின்று அமைந்த‌
திரம் என்பதனோடு கூடி, மன்+திரம் என்று கூடி மந்திரம்
என்று வழங்குகிறது.

முன் என்பதன் பொருள் யாது  என்பதைத் தமிழ்றிந்தார் எளிதில்
காணலாம். எனவே  முன்னுதல் என்பது முன் கொணர்தல் என்பதே
அன்றி வேறில்லை.  அகர வரிஷைகள் பல் இப்போது வழக்கில் உள்ள சொற்களின் பொருளைத் தெரிவிப்பவை. இவை சொல்லின்
முற்பொருளை விளம்புவன அல்ல. அதை நாம் உன்னி உணர‌
வேண்டும்.

மறந்திருக்கும் ஒன்றை மீண்டும் நினைவுக்கு மூளையில் முன்
கொணர்தலே முன்னுதல் ஆகும். இப்படிக் கொண்டுவந்து அது
உச்சரிக்கப்படுகிறது. அதுவே மந்திரம். மந்திரங்கள் ஏற்கனவே
புனைவு பெற்றவை. இப்போது மீண்டும் முன்கொணர்ந்து ஒலிக்கப்
பெறுகின்றன.

சிந்தித்தல் என்பதும் சிந்துதல் அல்லது ஒன்றன்பின் ஒன்றாக‌
வெளிக்கொட்டுதல். சிந்து +இ  = சிந்தி என, வினையினின்றும்
இன்னொரு வினை தோன்றிற்று.  இது உண்மையில் கணித்தல்,
உதித்தல் என்பனபோலும் ஓர் அமைப்பே.  இதில் பெரிய‌
விடயம் ஏதும் இல்லை.

உகர  அகாரத்  தொடக்கச்  சொற்கள் 

Metro Rail extended in Chennai.

மின்விரைவுத் தொடரியுமே சென்னைவர என்னவொரு
பாக்கியமே என்றுபாடு;
முன்வரவே வேண்டியதாம் மண்மகிழ நன்முறையில்
வந்ததின்று வென்றியாடு.

சென்னையொரு பெருநகரம் சீருடனே ஏற்றமெலாம்
நேர்படுதல் வேணும் வேணும்;
பின்னைவரு நல்லிளைஞர் பெருமிதமே கொள்ளுவணம்
பேறுகளைப் பொழிதல்வேணும்.

அடையாறு முனம்போனேன்;  அவண்தொடரி தனிலேறி
அழகான பயணம்செய்தேன்;
இடைநாளில் நீடுறவே இயலாது பாடுறவே
இருந்ததது சிறந்ததின்றே.

நகர்ச்சென்னை வாசியலேன்; நான்சுற்றுப் பயன்விழைவேன்;
நகரங்கள் வளர்கவென்று
புகரின்றி விழைவதனால் புகல்கின்றேன்; இறையருளே
பொழிபெறுக வேண்டிநின்றேன்.

தொடரி  : ரயில் வண்டி .