சனி, 6 மே, 2017

பாரியை

பார் என்பது இவ்வுலகைக் குறிக்கிறது.இவ்வுலகில், கணவனென்பானுடன் இணைந்து 
வாழ்வு நடாத்துபவளே பாரியை. இங்கு இரு சொற்கள் கோவைப்பட்டு நிற்கின்றன.
ஒன்று பார். மற்றொன்று: இயை என்பது. இதன்பொருள் இயைதல், அதாவது 
 இணைதல் என்பதாம்.

மனைவி என்பவள் வீட்டுக்காரி என்று பொருளுணர்ந்து
கொள்ளப்படுவாளாயின், ஒப்பிடுங்கால் பாரியை என்று
குறிப்பிடப்படுபவள், பாரெங்கும் அவனுடன் இயைந்து
வாழ்பவள் ஆவாள். இச்சொல்லால் காட்டப்படுவது எல்லையில்லா
 உறவு ஆகும்.

இச்சொல் வேறு மொழிகட்கும் தாவி வழங்குவது இச்சொல்லின் விரிபொருளையும் திறத்தையும்

உணர்த்துகிறது

நல்லதோர் தீர்ப்பிது...........

இங்கு குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டி ஒரு பாடலை
எழுதியிருந்தேன். இன்னொரு பாடலையும் எழுதினேன். அதை அப்போது வெளியிடவில்லை. அதை இங்கு பதிவு செய்கிறேன். நன்றாக இருப்பின் பாடி மகிழுங்கள்.

நால்வருக்கும் சாவென்ற நல்லதோர் தீர்ப்பிது
மேல்வர நாட்டினர் மிக்கமகிழ் ‍‍=== வால்வரிந்து
ஏற்ப துறுதியே  இஃதொன்றும் தீதில்லை;
கேட்பாரும் கீழ்மை அற.

இதன் பொருள்:

நால்வருக்கும் ~  நான்கு குற்றவாளிகளுக்கும்;
சாவு என்ற ~  மரணதண்டனை உறுதி என்று முடித்த;
மேல் வர ~   சட்டமறிந்த மேல்முறையீட்டின் வழியாக வர;
மிக்க மகிழ்வால் வரிந்து ஏற்பது ~  உள்ளம் மிக மகிழ்ந்து முன்னின்று ஒத்துக்கொள்வது;
இஃதொன்றும் தீதில்லை  :   இத்தகைய குற்றவாளிகட்கு மரணதண்டனை தருவதில் குறையொன்றும் இல்லை;
கேட்பாரும் ~ இதைக் கேட்டறிந்தவர்களும்;
கீழ்மை  குற்றமிழைக்கும் தன்மை நீங்கப்பெறும்படியாக.


இந்தி மொழியைத் திணிக்கவில்லை ( அமைச்சர்)


இந்தி மொழியைத் திணிக்கவில்லை, அதன் பயன்படுத்தலை ஊக்குவிக்கின்றோம் என்கிறார் மத்திய உள்துறை சார்பு அமைச்சர்
கிரண் ரிஜிஜு. ஆகவே கட்டாயம் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்.


Government not imposing Hindi but promoting it: Kiren Rijiju