தென்கொரியாவின் அதிபர் மக்கள் ஆதரவினால் பதவிக்கு
வந்தவர். வழக்கின் காரணமாக பதவியை விட நேர்ந்தது.
இவர் முன்னைய அதிபரின் மகள். மக்களாட்சியில் வேறு
யார் வருவதாயிருந்தாலும் மக்கள் ஆதரவு தேவையன்றோ?
அதுவே மக்களாட்சி. ஓர் அதிபரின் மகள் என்பது அறிமுகத்துக்கும்
புகுமுகத்துக்கும் பயன்படுவது மட்டுமே.
யார்பிள்ளை
ஆனாலும் யார்பேரன் ஆனாலும்
பார்தன்னில்
ஆதரவு மக்களினால் ===
ஊரூராய்
என்னென்ன
கூறினும் வாக்கில்லை என்றாலோ
பொன்னன்ன
பூம்பதவி இல்.
பொன்னன்ன = பொன் அன்ன : பொன்னைப் போன்ற மதிப்புடைய.
பூம்பதவி : அழகிய பதவி; பூவான பதவி. பூம் = புகும் என்றும்
இரட்டுறலாக வரும்.