பிராமணருள் "கயஸ்த பிராமணர்" என்பார் ஒரு வகை. இவர்கள்
கலப்பற்ற பிராமணருடன் அரச குலத்துப் பின் தோன்றிகளும் வணிக
குலத்தின் உறுப்பினர்களும் கலந்து அமைந்த அமைப்பு என்று கூறுகின்றனர். இவர்கள் யூதர்களிடை ஏற்பட்டிருந்த எழுத்துத் தொழிலர்கள் போன்ற ஒரு பிழைப்பை மேற்கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
இப்போது கயஸ்த என்ற சொல்லைச் சற்று சிந்திப்போம்.
இவர்கள் கையெழுத்து வேலை மேற்கொண்டிருந்ததால், இவர்களைச்
சுட்டுவதற்கு ஒரு பெயர் தேவைப்பட்டது. வங்காளத்தில் தமிழரும்
இருந்ததனால், அத் தமிழர் இவர்களைக் "கையெழுத்தர்" என்றனர். இச் சொல்லின் ழுகரத்திற்குப் பதிலாக "ஸ்" ஒன்றை இடுங்கால்,
கையெஸ்த்த" என்றாகிவிடும். தமிழன்றிப் பிறவற்றில் அர் விகுதி
இன்மையின், அர் என்று சொல் முடிபு கொள்ளாது. ஐ காரம் கெட்டுக்
ககரம் ஆகும். இறுதி வடிவம் "கயஸ்த" ஆகிறது.
இங்ஙனம் கயஸ்த என்பது தமிழினின்று சென்றதென்பது காணக் கிடக்கின்றது.
இப்படிப் பெயரொன்று அமைந்தது இறையருள் தான்.